சக்ராதா
பிரிட்டீஷ் ராணுவத்தில்
பணிபு¡¢ந்த கர்னல் ஹ்யூம் என்பவர், பி¡¢ட்டீஷ் துருப்புகளுக்கு இதுவே ஏற்ற இடம்
என்று கண்டறிந்து கூறியதால் 1866ம் ஆண்டு இங்கு கன்டோன்மெண்ட் (படைவீடு)
அமைக்கப்பட்டது. டேராடூனிலிருந்து 9.2 கி.மீ தொலைவில் ஊசியிலைக் காடுகளுக்கு ஊடே
சக்ராதா மற்றும் கைலானா மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள எழில் மிகுந்த நகரம். கடல்
மட்டத்திலிருந்து 6950 அடி உயரத்தில் அமைந்த இந்த இடத்தில் மனோகரமான பருவ நிலையும்
இயற்கை எழில் மிகுந்த சூழ்நிலையும் மனதுக்கு ஆனந்தம் அளிக்கின்றன.
காண வேண்டிய இடங்கள் :
தேவபாண்: கடல் மட்டத்திலிருந்து 2865 மீட்டர் (9400 அடி) உயரத்தில்,
சக்ராதாவிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள தேவபாண், அழகிய சூழ்நிலைகளுக்கும்
காட்சிக்கும் புகழ்பெற்றது. பயணிகள் தங்குவதற்கு காட்டிலாகா ஒய்வு இல்லம் ஒன்று
உள்ளது.
டைகர் நீர்வீழ்ச்சி:
சக்ராதாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அழகிய சூழலில் அமைந்த இந்த மலை அருவி இந்த
மாநிலத்திலேயே மிக உயர்ந்தது.
லக்மண்டல்:
சக்ராதாவிலிருந்து 57 கி.மீ.
தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் தான் பாண்டவர்களைக் சூழ்ச்சியினால் தீக்கிரையாக்க
கெளரவர்கள் அரக்கு மாளிகையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. சக்ராதாவிலிருந்து இங்கு
செல்ல சாலை உள்ளது.
கால்ஸி:
சக்ராதாவிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அசோகர் சாஸனம்
தொல்பொருள் இயல் துறையினரால் பராமா¢க்கப்படுகிறது. தவிர இங்கு ஒரு பால் பண்ணையும்
கோழிப்பண்ணையும் உள்ளன.
டாக் பத்தர்:
யமுனா பாசன திட்டத்தின் கீழ்
இந்தப் பகுதியில் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக டாக் பத்தர் வளர்ச்சி பெற்று
வருகிறது. நதிக்கரையும், பூந்தோட்டங்களும், பச்சைக் கம்பளம் வி¡¢க்கும்
புல்வெளியும், பின்னணியில் கம்பீரமாக நிற்கும் மலைகளும் இந்த இடத்தை
செளந்தர்யமிக்கதாக ஆக்கியுள்ளன. கால்சியிலிருந்து டேராடூனுக்கு வரும் வழியில் 7
கி.மீ தொலைவில் உள்ளது. எல்லா வசதிகளும் கொண்ட சுற்றுலாப் பயணிகள் விடுதி
இங்குள்ளது.
மேலும்>>