|
ஏழுர்ப் பொதுவினைக்கு ஓருர்யாத்த
உலைவாங்கு மிதிதோல் போல (குறு 172)
என்பதன் மூலம் ஏழு ஊர்களுக்கு தேவையான இரும்புப்பொருட்களை ஓரூ¡¢ல் உள்ள
கொல்லர்கள் கவனித்துக்கொண்டனர் என்று அறியலாம். ஏழூர் மக்களின் தேவையை
நிறைவேற்ற ஓருர் கொல்லர்கள் எவ்வளவு விரைந்து செயல்பட்டிருப்பர் என்பதும் இதன்
வழி அறியக்கூடியதாக உள்ளது. உலைக்குருகு என்பதும் கொல்லன் பயன்படுத்தும்
துருத்தியைக் குறிக்கும். (நற். 125)
கொல்லன் பயன்படுத்திய பட்டடைக்கல் 'உலைக்கல்' என அழைக்கப்பட்டது.
இரும்பு பயன்படுத்தும் கருங்கைக் கொல்லன்
விசைத்தெறி கூடமொடு பொருஉம்
உலைக்கல்லன்ன வல்லாளன்னே (புறம் 170)
இரும்பைப் பயன்படுத்துகின்ற வலிய கையையுடைய கொல்லன் விசைத்தடிக்கப்பட்ட
கூடத்தோடேயேற்று மாறுபடும் உலையிடத்து அடைகல் போதும் என்பது இதன் பொருள்.
இங்கு கூடம் என்பது சம்மட்டி என்ற கருவியைக் குறிக்கிறது. (புறம் 170)
பட்டடைக் கல்லில் விசையுடன் (உரமாக) சம்மட்டியைக் கொண்டு அடித்து இரும்பைப்
பக்குவப்படுத்தும் தொழில் முறை இங்குச் சுட்டப்படுகிறது. அருஞ்சுரத்தில் உள்ள
பாறையின் வெம்மை கொல்லனது உலைக்கல்லுக்கு (பட்டடைக்கல்)
உவமையாக்கப்பட்டிருப்பதும் (குறு. 12) ஈண்டு நோக்கத்தக்கது. தீப்பொறி மின்மினி
பறப்பதை ஒத்திருந்தது (அகம்.72) உலையிலுள்ள நெருப்பை அணைக்கப் பனைமடலால்
நீரைத் தெளிப்பான் என்கிறது நற்றினை.
"இரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல
நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே" (நற். 133:9-11)
சங்க காலத்தில் மதுரைக்கொல்லன் வெண்ணாகனார் (நற்.285) மதுரைக் கொல்லன் புல்லன்
(குறு. 373) என்ற இரு புலவர்கள் இருந்திருக்கின்றனர். இவர்கள்
கொல்லுத்தொழிலோடு தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும்.
போர்க்கருவிகளேயன்றி, அ¡¢வாள், கொழு முதலிய வேளாண்மைக் கருவிகளும் இரும்பால்
செய்யப்பட்டன. (பெரும்பாண். 89-92 : பொருநர்.117-118) புரவியின் பிடா¢யை
ஒழுங்கு செய்யப்பயன்பட்ட கத்தா¢ பற்றியும் அறிகிறோம் (பதிற்.62) 'மயிர்குறைகருவி
மாண்கடை' (பொருநர். 29) என்பது மயிரைக் குறைக்கும் கருவியாகிய கத்தா¢கைப்
பயன்பாட்டுச் சான்றாகிறது.
'மயிரெறி கத்தி¡¢கை அனையவாய்' (சீவக. 168)
'மயிரெறி கருவி வள்ளை' (கந்தபுராணம். மாயை.46)
என்பன பிற்காலத்திலும் கத்தி¡¢கை மயிர்குறைக்கப் பயன்பட்டதை எடுத்துரைக்கும்.
தொடரும்...
இராம. சுந்தரம்
|