menu






 «È¢Å¢Âø >> பண்டைத் தமிழர் அறிவியல் சிந்தனைகள்
 

உழு கருவிகள்

வேளான்மைக்குப் பயன்படும் கருவிகளை உழவுக்கருவிகள், சமன்செய் கருவிகள், விதைப்புக்கருவிகள், இறைப்புக் கருவிகள், பயிர்காப்புக் கருவிகள், அறுவடைக் கருவிகள், பதன்செய் கருவிகள் என இன்று பாகுபடுத்துவர். பண்டைத் தமிழர்கள் நாஞ்சில் என்ற கலப்பையைப் பயன்படுத்தி உழுதனர் கலப்பையின் நுகத்தடியில் கொழுவும் இருக்கும். கொழு நிலத்தைப் பிளந்து உழக்கூடியது. பரம்படிக்கப் பயன்படும் கருவியின் பெயர் தளம்பு ஆகும். ஏத்தம், ஆம்பி, பத்தர், கிழார், முகவை முதலியன நீர் இறைப்புக் கருவிகளாகும். புன்செய் நிலத்துக் களையை நீக்கத் துளர் என்ற கருவியைப் பயன்படுத்தினர். துளர்படுதுடவை அ¡¢ப்பறை தண்ணுமை, குளிர், தட்டை, தழலை, கவண், அடார் முதலியன பயிர் பாதுகாப்புக் கருவிகளாகும். அடார் என்பது கற்பொறி கருங்கல் பலகையை ஒரு பக்கமாகச் சாயத்துக் கீழே முட்டுக்கொத்து உணவை உள்ளே வைத்திருப்பர். உணவை உண்ண வரும் விலங்கு அந்த முட்டைத் தொட்டவுடன் கல் விழுந்து அதனுள் மாட்டிக் கொள்ளும்

'தினையுண் கேழல் இ¡¢யப்புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல அடாஅர்'

'குயம்' அறுவடைக்கருவி, நெற்குதிர் பதன் செய் கருவியாகும். அ¡¢வாள், கொழு முதலியன இரும்பால் ஆகியவை எனலாம்.

மேலே தொகுத்துக்கூறிய செய்திகள் பண்டைத் தமிழர்தம் வேளாண்மைத் தொழில் நுட்பத்தைத் தெளிவுற எடுத்துக்காட்வல்லன எனலாம். இந்தத் தொழில்நுட்பத்தில் பல இன்றும் கையாளப்படுகின்றன. இயந்திரங்கள் பொ¢ய அளவில் வந்துள்ளன என்றாலும் சில பழைய முறைகளும் அங்குமிங்குமாக கையாளப்படுகின்றன எனலாம்.

உலோகத் தொழில்

பண்டைத்தமிழர் இரும்பு, பொன், வெண்கலம், பித்தளை, வெள்ளி முதலிய உலோகங்களைப் பன்படுத்திப் பல பொருட்களை உருவாக்கினர். தமிழ் வினைஞர்களுடன் பிற நாட்டு வினைஞர்களும் கூடித் தொழில் செய்தனர் என்பதை,

'மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக கொல்லரும் யவனத்தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி'

இரும்புத் தொழில்

இரும்புத் தொழில்நுட்பம் மனித குல வரலாற்றில் ஒரு மாபெரும் வளர்ச்சிப் போக்கை ஏற்படுத்தியது என்பர். வேளாண்மைப் பொருளாதாரம் செழித்தோங்க இரும்பு உழுகருவிகள் பொ¢தும் பயன்பட்டன. மண்ணாசை பிடித்த வேந்தர்களின் வேட்கை தணிய இரும்புப் போர்க் கருவிகள் உதவின. சமுதாயத்துக்குத் தேவையான பல்வேறு கருவிகளையும் இரும்பில் வடித்து எடுத்துப் பயன்படுத்தினர். மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட இந்த இரும்புப் பயன்பாடு கி.மு. 1800ஐ ஒட்டி ஆசியா மைனர் பகுதியில் தோன்றியது. கி.மு. 1000ஐ ஒட்டி இந்தியாவில் அறிமுகமாயிற்று. கருநாடகத்திலுள்ள ஹல்லூர் பகுதியில் கி.மு. 950ஐ ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூ¡¢லும், பெருமாள்மலையிலும் (மதுரைக்கு அருகில்) இதே காலத்தை ஒட்டிய இரும்புப்பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கி.மு. 700- கி.பி 200 இரும்புக்காலம் எனலாம்.

சங்க காலத்தில் இரும்பு நன்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதற்குச் சங்கப்பாடல்கள் சான்று பகருகின்றன. கொடுமணல் அகழ்வாய்வு இதை உறுதிப்படுத்துகிறது. வேளாண்மைக் கருவிகளும், போர்க்கருவிகளும், வீட்டுக்குத் தேவையான சாமான்களும் இரும்பால் செய்யப்பட்டன. இரும்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் கொல்லர் என்றும் கருங்கைக் கொல்வர் என்றும் அழைக்கப்ட்டனர்.

'கருங்கைக் கொல்லன் இரும்பு விசைத்தெறிந்த கூடம்'
'வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே'

கொல்லன் வேலை செய்யும் இடம் கொற்றுறை என அழைக்கப்பட்டது.

வாள், வேல், ஈட்டி, அம்பு முதலிய படைக்கருவிகள் அன்று மிகுதியும் வேண்டப்பட்டன. அவற்றைப் பழுதுபார்த்தும் கொடுத்தனர் எனத் தொ¢கிறது. வளைவில்பொறி, கருவிரலூகம், கல்லுமிழ்கவண் முதலிய போர்க்கருவிகளையும் இவர்கள் தயா¡¢த்துத் தந்தனர்.

கொல்லன் தனது உலைக்களத்தே துருத்தியை அமுக்கி ஊதி வேலை செய்த காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை மென்தோல் மிதியுவைக் கொல்லன் முறி கொடிற்று எனப் படம் பிடித்துக் காட்டும். கொடிறு என்பது கொல்லன் பயன்படுத்திய குறடு என்ற கருவியைப் குறிக்கிறது துருத்தி விசைக் கயிற்றால் இழுக்கப்படுதலை ஊதுலை விசை வாங்குதோல் என கட்டுகிறது.

தொடரும்...
இராம. சுந்தரம்