menu






 «È¢Å¢Âø >> பண்டைத் தமிழர் அறிவியல் சிந்தனைகள்
 

கரும்பு

கரும்பு பணப்பயிர் வகையைச் சார்ந்ததாகும். கரும்பைத் தமிழகத்துக்கு கொண்டு வந்தவர்கள் அதியமானின் முன்னோர்கள் ஆவர் என்பதை அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பிவன் தந்தோன் பெரும்பிறங்கடையே என்ற புறநானூற்று வா¢ மூலம் அறிகிறோம். கரும்பு இந்தியாவில் உற்பத்தியான ஒன்றே என்று ·பிலியோசா கூறுவார்.

'Sugarcane, like cotton, has always been
essentially an Indian product. The Greek
name for sugar, sakcharon is derived from
a popular form, sakkara from Sanskrit name
carkara...'

கழைக்கரும்பு, கழனிக்கரும்பு, கா¡¢க்கரும்பு என மூவகைக் கரும்புகள் குறிக்கப்படுகின்றன. கரும்பு வயல்கள் அகலமாக இருக்கும். பாத்தியமைத்து நடுவர். கரும்பை அறுத்தபின் அதன் அடிக்கட்டையையே மீண்டும் பயிராக வளர்ப்பர். இதற்கு மறுதாம்புப்பயிர், கட்டைப்பயிர் என்று பெயர். சிலசமயம் கட்டைகளை அகழ்ந்து எடுத்துப் புதிதாகவும் பயிர் செய்வர்.

'காலமன்றியும் கரும்பறுத்து ஒழியாது
அ¡¢கால் அவித்துப் பலயூ விழவில்
தேம்பாய் மருதம்'

கரும்புச்சாறு எடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்திய பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பழந்தமிழர்களின் எந்திர அறிவு நுட்பத்துக்கு இது எடுத்துக்காட்டாகும். கரும்புச்சாறு எடுக்கப் பயன்படும் எந்திரம் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அந்த ஒலி யானை பிளிறுவது போல ஒலிக்கும்.

'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்'
'எந்திரம் சிலைக்கும் துஞ்சாக்கம்பலை'

கரும்பஞ்சாற்றிலிருந்து காய்ச்சிய, மணக்கின்ற பாகைக் கட்டியாகவும் பொடியாகவும் செய்வதுண்டு.

பருத்தி விளைச்சலும் மேற்கொள்ளப்பட்டது பருத்தி வேலிச் சீறூர் பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கிப் பஞ்செடுப்பர். நூல் நூற்பர். பஞ்சிலிருந்து நூல் எடுக்கும் பெண்டிர் பருத்திப்பெண்டிர் என அழைக்கப்பட்டனர். நூல் நூற்கும் தொழில் நுட்பம் சங்ககாலத்தே அறியப்பட்டிருந்தது என்பது அண்மையில் கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட தக்களி மூலம் உறுதிப்படுகிறது.

உழவு முறை

பண்டைத் தமிழர் கடைப்பிடித்த உழவுமுறை பற்றி அறிதல் அவர்தம் வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றித் தொ¢ந்துகொள்ள உதவும் அகல உழுதலினும் ஆழ உழுதல் நன்று என்ற பழமொழி. உழலில் அகல உழுதல், ஆழ உழுதல் என இரு முறை உள்ளதைக் காட்டுவதோடு இரண்டில் எது சிறந்தது என்பதையும் உரைக்கிறது. இன்றைய வேளாண்மைத் தொழில் நுட்பம் ஆழ உழுதல் (more tillage) கிளறி உழுதல் (minimal tillage) பொய்யுழவு (no tilllage) என மூவகை உழவு முறைகளைச் சொல்லும்

உழவு முறையில் உழுதல், உரமிடுதல் (fretilization) களை நீக்குதல் (Weed control), நீர் பாய்ச்சுதல் (irrigation), பயிர் பாதுகாப்பு (Crop production) என்ற ஐந்தும் முக்கியமானவை திருவள்ளுவர் இதை ஏ¡¢னும் நன்றால் எருவிடுதல்; விட்டபின் நீ¡¢னும் நன்றதன் காப்பு என்பார் இக்குறளுக்கு விளக்கம் எழுதிய பா¢மேலழகர் உழுதல், எருப்பெய்தல், களைக்கட்டல், நீர்கால்யாத்தல், காத்தல் என்ற இம்முறையாயய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம் என்றார். இவ்வைந்துடன், நிலத்தைப் பக்குவப்படுத்துதல், விதைத்தல், நாற்றுநடுதல், அறுவடை முதலியவற்றையும் சேர்த்தால் உழவுமுறை நிறைவுறுகிறது எனலாம்.

பக்குவப்படுத்திய நிலத்தில் நன்கு உழுகின்ற எருதுகளை நுகத்தில் பூட்டி, யானையின் வாய்போன்று வளைந்துள்ள கலப்பையில் உள்ள கொழு முழுமையும் நன்றாக மண்ணில் முழ்கும்படி பலசால் உழுவர்\

'நடைநவில் பெரும்பகடு புதலில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றி'

என்பது இதற்குச் சான்று கூறும் உழுத நிலத்தைப் பரம்பு என்ற கருவிகொண்டு சமப்படுத்துவர். இதனைப் பரம்படித்தல் என்பர்

ஆடு, மாடு, எருமை முதலிய கால்நடைகளின் சாணம் உரமாகக் பயன்பட்டது. இதனை தாது-எரு என வழங்கினர்.

'இரும்புனிறு எருமைப் பெருஞ்செவிக்குழவி
பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனை'

புன்செய்ப் பயிர்களை விளைவிக்கும் நிலங்களைச் சுற்றி வேலியமைப்பர். விதைக்கு முன் வேலியடை என்பது பழமொழி

'வாழ்முள் வேலி சூழ்மிளைப் படைப்பை
'இடுமுள்வேலி எருப்படு வரைப்பின்'

நலத்தில் தானே வளரும் செடி கொடிகளைக் கொண்டு அமைக்கப்படும் வேலி வாழ் முள் வேலியாகும். முட்களை வெட்டிக்கொண்டு வந்து இட்டு அமைக்கப்பட்ட வேலி இடுமுள் வேலி ஆகும். மேல்மண் கீழும் கீழ் மண் மேலும் புரளுமாறு ஆழமாகவும் அகலமாகவும் உழுதபின், எருஇட்டு, தினை, வரகு முதலியவற்றை விதைப்பர். விதைக்கும்போது இடைவெளிவிட்டு விதைப்பர் என்பதை

'தனிபதம் பெற்ற கான் உழுகுறவர்
சிலவித்து அகல இட்டெனப் பல விளைந்து'

என்பதால் அறியலாம்.

தொடரும்...
இராம. சுந்தரம்