menu






 «È¢Å¢Âø >> பண்டைத் தமிழர் அறிவியல் சிந்தனைகள்
 

சிறு தானியங்கள்:

நெல் வகையைப்போலப் பலவகைச் சிறு தானியங்களையும் விளைவித்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தினையும், வரகும் ஆகும். மலைப்பகுதயிலுள்ள மரங்களை வெட்டி அழித்த கொல்லையைக் கொத்திக் தினையை விளைவிப்பர் என்பது.

'மரங்கொல் கானவன் புனம் துளர்ந்துவித்திய
பிறங்குகுரல் இறடி'

என்பதனால் தெளிவாகிறது. மழைநீ¡¢ல் தினையை விளைவிப்பதோடு, அருவிநீர் பாய்ச்சியும் தினையை உற்பத்தி செய்தனர்.

'கொய்யா முன்னுகுங் குரல் வார்பு தினையே
அருவியான்ற பைங்கால் தோறும்
இருவிதோன்றின பலவே'

இந்தத் தினை உணவுப்பொருளாவதுடன் கள் தயா¡¢க்கவும் பயன்பட்டது என்பதை.

'தினைக்கள்ளுண்ட தெறிகோல் மறவர்' (அகம் 284) என்ற வா¢ தொ¢விக்கிறது. தினைக்கதிர்களைக் கொய்தபின் நிற்கும் தினைத்தாளாகிய தட்டையைக் கொண்டு குடிசைகள் வேய்ந்தனர்.
காடுகளைத் தீயிட்டுக் கொளுத்தி விளைநிலம் தயா¡¢த்து வரகுவிதைப்பதுண்டு என்பது.

'சுவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச்சுவல் மூழ்கிய கான்சுடு குருஉப்புகை'

என்ற அகம் 359 பாடல் வழித் தொ¢கிறது.

'இடுமுட்படப்பை மறமேய்ந் தொழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புலவரகின் சொன்றி'

என்பதன் மூலம் வரகு விளையும் நிலத்தைச்சுற்றி இடுமுள் வேலியிட்டுப் பாதுகாத்தமை புலனாகிறது. அவரை (மணிப்பூ அவரை - மதுரைக்காஞ்சி 293) கொள்(வெள்வரகு உழுத கொள்ளுடைக்கரம்பை -பதிற் 75), உழுந்து (பூழ்க்காலன்ன செங்கோல் உழுந்தின் குறுந் 68) பச்சைப்பயறு முதலிய பயிறுவகைகளும் புன்செய் நிலத்தில் விளைவிக்கப்பட்டன. இவற்றுள் உழுந்துப்பயறு முக்கியத்துவம் உடையதாகத் தொ¢கிறது. உழுந்து நல்ல உணவுப்பொருளாகக் கருதப்பட்டது. உழுந்தை உடைக்க 'கழந்து' என்ற பெயருடைய தடியைப் பயன்படுத்தினர்.

'உழுந்துடை கழுந்தின்'
உழுந்தப்பருப்பு பொங்கல் திருமண விருந்தில் பா¢மாறப்பட்டது.

'உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை'
உழுந்தின் சக்கை குதிரைகளுக்குத் தீவனமாகப் பயன்பட்டது.

'உழுந்ததர் உண்ட ஒய்நடைப் புரவி'
உழந்தின் புரதச்சத்து பற்றி இன்றைய அறிவியலும் சிறப்பாக உரைக்கும் பச்சைப் பயறும் உணவாகக் கொள்ளப்பட்டது.

எள்ளும் தென்னையும் :

எள், தென்னை முதலிய எண்ணெய்வித்துப் பயிர்களும் விளைவிக்கப்பட்டன. எள்ளும் தினையும் எழுபது நாள் என்பது பழமொழி. கார்ப்பருவ மழை தொடங்கியதும் விதைத்துக் கதிர்காலத் தொடக்கத்தில் அறுவடை செய்வர் எள்ளுக்கு அளவான மழை தேவை. இல்லாவிடில் எள் செந்நிறமாக மாறும் இதனை மகுளிபாய்தல் என்பர். போதிய மழை பெய்தால் ஒரு கைப்பிடிக்குள் 7 காய்கள் மட்டுமே கொள்ளும் அளவிற்கு நன்கு பொ¢தாக விளையும் இதை.

'நீலத்தன்ன விதைப்புன மருங்கின்
மகுளிபாயாது மலிதுளி தழாலின்
அகனத்தன்ன நிறைசுனைப்புறவில்
கெளவை போகிய கருங்காய் பிடியேழ்
நெய்கொள ஒழுகின பல்சுவர் ஈர்எண்'

என மலைபடுகடாம் உரைக்கும்

எள் முற்றி வரும் நிலையில் அதிகமான மழை பெய்தால் எள்ளின் உள்ளீடு உருகிவிடும் காய் மட்டும் கெடாமல் இருக்கும். இத்தகைய காய்களைச் சிதட்டுக்காய் என்பர்.

'பழமழை பொழிந்தென பதனழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயல் கடைநாள்'

தென்னையுடன் பாக்கு மரங்களையும் பயி¡¢டும் முறை பின்பற்றப்பட்டது. இளநீர் குடிப்பதற்குப் பயன்பட்டது. தென்னை ஓலைகள் கூரைவேயப் பயன்பட்டன.

தொடரும்...
இராம. சுந்தரம்