|
வேளாண்மைத் தொழில்
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்பார் வள்ளவர். பழைய தமிழ்ச் சமுதாயம் உழவுத்
தொழிலுக்குக் கொடுத்த சிறப்பு இதன் மூலம் தெளிவுறும். சங்கப் பாடங்களிலும்
குறள், பள்ளு முதலிய நூல்களிலும் பழந்தமிழ் மக்களின் வேளாண்மைத் தொழில்
நுட்பம் பற்றிய செய்திகள் பொதிந்துள்ளன.
'வேளாண்', 'வேளாண்மை' என்ற சொற்கள் பழந்தமிழ் நூல்களிலும் காணப்படுகின்றன.
'வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்'
(களவு 16) என்று தொல்காப்பியர் வேளாண் என்ற சொல்லை விருந்து உதவி என்று
பொருளில் பயன்படுத்துகிறார்.
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென
மொழிய பிறவகை நிகழ்ச்சி
பயிர்கள்
பலதிறப்பட்ட நிலங்களில் என்னென்ன பயிர் வகைகள் விளைவிக்கப்பட்டன என்பது
பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. நெல், தினை, வரகு, அவரை, கொள், உழுந்து,
கரும்பு, பச்சைப்பயறு, எள், தென்னை, பருத்தி முதலியன உற்பத்தி செய்யப்பட்டன.
நெல்
செந்நெல், வெண்ணெல், சாலிநெல், முடந்தை நெல், ஐவனநெல், கோரைநெல், குளநெல்,
தோப்பிநெல் முதலியன சங்கத்தமிழர் அறிந்த நெல் வகைகளாகும்.
'எ¡¢யகைந்தன்ன தாமரை இடையிடை
அ¡¢ந்துகால் குவிந்த செந்நெல் வினைஞர்' (அகம். 212)
செந்நெல் நீர்வளஞ்சான்ற நிலத்தில் விளையும்.
'குளக்கீழ் விளைந்த கனக்கோள் வெண்ணெல்' (புறம். 33)
என்பதிலிருந்து, வெண்ணெல் குளத்துப் பாசனத்தில் விளையும் எனத் தொ¢கிறது.
சாலிநெல் விளையும் ஊ¡¢ன் பெயர் சாலியூர் என்றே வழகங்கப்பட்டது.
'சாலிநெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டாகக்
காவி¡¢ புரக்கும் நாடு கிழவோனே' (பொருநர். 546-548)
என்பதிலிருந்து ஒரு வேலி நெல்லில் ஆயிரம் 'கலம்' சாலி நெல் விளைவிக்கும்
முயற்சி மேற்கொள்ளப்பட்ட செய்தியை அறிகிறோம்.
மற்றொரு நெல்வகை முடந்தை நெல். வளைந்த கதிர்களை உடைய இந்நெல் மூங்கில்போல
நீண்டும் பருத்தும் இருக்கிற தாள்களை உடையதாகும்.
ஐவனநெல் குறிஞ்சி நிலத்தில் விளையும். மலைச்சாரலில் காடுகளைத் தீயிட்டுக்
கொளுத்தி, பக்குவப்படுத்திய புன்செய்க் கொல்லையில் ஐவனநெல் விளையும்
அருவிப்பாசனம் கொண்டும் ஐவனநெல் விளைவிப்பதுண்டு.
'அருவிப் பரப்பில் ஐவனம் விந்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல்கட்கும்'
தோரைநெல் மேட்டுநிலத்தில் விளையும். இதன் கதிர்கள் குட்டையாக இருக்கும். இதனை,
'நறுங்காழ்கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த்தோரை நெடுங்கால்ஐயனி
ஐவன வெண்ணெலொடு அ¡¢ல்கொள்பு நீடி'
என மதுரைக்காஞ்சி (286-88) குறிப்பிடுகிறது.
சுனை நீரைக்கொண்டு விளைவிக்கும் நெல் குளநெல் ஆகும்.
'நிலநீர் ஆரக்குன்றங்குழைப்ப
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்ப'
என்ற நற்றினை வா¢கள் (5:1-2) இதனை விளக்கும் தோப்பி நெல் மேட்டு நிலத்தில்
விளையும் இதன் சோறு சிவப்பாக இருக்கும். கள் உண்டாக்க இந்நெல் பயன்படும்.
'களர்வளர் ஈந்தின் காழ்கண்டன்ன
சுவல்வினை நெல்லின் செவ்வவிழ்ச்சொன்றி'
'இல்லடு கள்ளின் தோப்பி பருகி'
இன்னும் பல நெல்வகைகளைப் பிற்காலப் பள்ளு இலக்கியங்கள் வழி அறிகிறோம்.
நெல்லின் வடிவம், நெல்விளை காலம், நிறம், விளையும் இடம் முதலியவற்றின்
அடிப்படையிலும், தலைமக்கள் பெயா¢ன் அடிப்படையிலும் பல நெல்வகைகள் பெயர்
பெற்றுள்ளன. தமிழர்களின் பெயா¢டுமுறையை அறிய இது உதவும்.
நெடுமூக்கள், மூக்கள் சம்பா முதலியன நீண்ட மூக்கை உடைய நெல்லாகும். வாலான்நெல்
நீண்ட வாலைப் பெற்றிருக்கும். கட்டைவாலான், குதிரை வாலான் என்பன வாளின் அளவு
பற்றியதாகும்.
கார்காலத்தில் விளைவது கார்நெல் என்றால், கார்த்திகை, சித்திரை மாதங்களில்
விளைவது கார்த்திகைச் சம்பா சிந்திரைக்காலி எனப்பெயர் பெறவாமின.
செம்பவளச்சம்பா, மாணிக்கச்சம்பா, பொற்சாலி முதலியன மணிகளின் பெயர்களைக்
கொண்டவையாகும். நிறத்தோடு ஒட்டிப் பெயர்பெற்றவை குங்குமச்சம்பா, கருங்குறுவை,
பாற்கருக்கள், தும்பைப்பாசி முதலியன. தில்லைக்கூத்தன். வீதி விடங்கள் முதலியவை
தெய்வங்களின் பெயர்களையும் காலிங்கராயன், சிறைமீட்டான் முதலியவை தலைமக்கள்
பெயர்களையும் கொண்டுள்ளன.
கொங்காடு என்பது கொங்கு நாட்டுக்கு¡¢யது. பாண்டிச்சம்பா பாண்டி நாட்டுக்கு¡¢யது.
கோ. 25 என இப்பொழுது வழங்கப்படும் நெல் கோவை மாவட்டத்தில் விளையக்கூடியது.
நெல் சாகுபடி இருபோகங்களில் நிகழ்ந்திருக்கிறது. சம்பா வகை நெல்கள் ஒரு
போகத்திலும் (புனுகுச்சம்பா, முத்துச்சம்பா, மாணிக்கச்சம்பா, ஒட்டன் சம்பா,
கஸ்தூ¡¢ச் சம்பா, அழகுச்சம்பா, அமிர்தச்சம்பா) குறுவைச்சாகுபடி ஒரு
போகத்திலும் (குறுவை, குறுவைக்கிளை, குறுவைக்கிள்ளையான்) விளைவிக்கப்பட்டன.
என்பதை பள்ளு இலக்கியங்கள் வழி அறிகிறோம்.
கருணா, ஆடுதுறை, கா¢காலன் என இன்று நாம் வழங்கும் நெல் வகைகள் தலைவர் மற்றும்
ஊர்ப்பெயர்களைக் கொண்டிருக்கக் காணலாம். பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட
பெயர்முறையே இன்றும் கடைப்பிடித்தல் மரபாக உள்ளது. பள்ளு இலக்கியங்களில்
ஏறத்தாழ 150 நெல் வகைகளின் பெயர்கள் கட்டப்படுகின்றன என்பார் ந.வீ. செயராமன்
தொடரும்...
இராம. சுந்தரம்
|