menu






 தலைவர்கள >> ஜவகர்லால் நேரு


ஐரோப்பிய கல்வி

ஒரு சமயத்தில் அன்னி பெஸன்ட் அம்மையார் நேரு குடும்பத்தினரோடு தங்கியிருந்தார். அவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர். ஏழ்மையும், மனிதத் தன்மையற்ற தாழ்வுநிலையும் கோலோச்சிய பிரதேசமான லண்டனின் கிழக்குப் பகுதியில் பரோபகார நங்கை என்று பிரபலமடைந்தவர். ஆனால் அவர் பரோபகா¡¢ மட்டுமல்ல. ஆவேசமூட்டக்கூடிய பேச்சாளர், பெருந்திரளான மக்களின் தலைவர். அவருடைய சீர்திருத்தவாத ஜனநாயகச் சேவைகள் பி¡¢ட்டன் முழுமைக்குமே நன்றாகத் தொ¢ந்தவை. இப்பொழுது இந்தியாவிலும் அவை பிரபலமடைந்தன.

இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களான சுவாமி விவேகானந்தர், அரவிந்த கோஷ், லோகமான்ய திலகர் ஆகியோ¡¢ன் சமகாலத்தவர் அன்னி பெஸன்ட்.

உண்மையையும் நீதியையும் தேடித் துடிதுடிக்கின்ற ஆன்மாவைக் கொண்ட பெண் உடையிலே தோன்றிய டெமாஸ்தனிஸ் என்று தன் நண்பர்களால் அன்புடன் வர்ணிக்கப்பட்ட இந்த அம்மையார் நேரு குடும்பத்தினருடைய நண்பரானார். அவர் ஜவர்கலாலிடம் வெகுதூரத்துக்கு அப்பாலுள்ள பி¡¢ட்டனைப் பற்றியும் அங்கே ஆங்கிலேயர்கள் மத்தியில் இந்தியர்களை சகோதரர்களாகத் கருதுபவர்கள், காலனியாதிக்க அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறினார்.

மோதிலால் நேரு தன் மகனுக்கு ஐரோப்பியக் கல்வி கற்பிக்க உறுதி கொண்டார். தன் மகனுக்குக் கல்வி கற்பிப்பதற்குக் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் மத்தியலிருந்து ஒரு ஆசி¡¢யரைத் தேர்ந்தெடுக்கத் தனக்கு உதவி செய்யுமாறு அன்னி பெஸன்ட்டைக் கேட்டுக் கொண்டார்.

அன்னி பெஸன்ட் அடுத்தமுறை ஆனந்த பவனத்துக்கு வருகையளித்தபொழுது ஒரு பொ¢யவிருந்து நடைபெற்றது. மோதிலாலின் வேண்டுகோளை அந்த அம்மையார் நிறைவேற்றியிருந்தார். பாரசீகக் கம்பளங்கள் வி¡¢க்கப்பட்டிருந்த வரவேற்பு அறைக்குள் அன்னி பெஸண்டுடன் ஒரு உயரமான இளைஞர் வந்தார். அவர் புரோட்டெஸ்டென்ட் பாதி¡¢யாரைப் போலத் தோற்றமளித்தார். அவர் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை மிளிர்ந்தது. அவருடைய வயது இருப்பத்தைந்துக்கு மேல் இருக்காது. அவர் பெயர் பெர்டினான்ட் புரூக்ஸ். அவர் தகப்பனார் ஜா¢ஷ்காரர். அவருடைய தாயார் பிரான்சையோ, பெல்ஜியத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இந்தியாவில் கழித்திருக்கிறார். இந்தியத் தத்துவஞான நூல்களையும் காவியங்களையும் அவர் நன்கு கற்றவர். பகவத் கீதையை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஐரோப்பிய இலக்கியங்களையும் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகளின் நூல்களையும் அவர் நன்கு கற்றிருந்தார். அவர் பிரம்மஞானத்துக்காகத் தன்னைத் தீவிரமாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

ஆனந்த பவனத்தில் நடைபெற்ற விருந்து சாதாரணமானதல்ல. மதநம்பிக்கை வழுவாத இந்துச் சைவர்களுக்கென்று தனியான சமையல் அறையும் சமையற்காரர்களும் உணவுக் கூடமும் இருந்தன. பளிங்குத் தரையில் பந்திப் பாய் வி¡¢க்கப்பட்டிருந்தது. அதற்கு எதிரே வெள்ளியினால் செய்யப்பட்ட கலங்களில் சிறந்த முறையில் தயா¡¢க்கப்பட்ட சப்பாத்தி மற்றும் காய்கறி உணவு வகைகள், பழங்கள் பா¢மாறப் பட்டிருந்தன. காரமான அந்த உணவைக் சாப்பிட்டதும் அருந்துவதற்காக அழகான வெனிஸ் டம்ளர்களில் பனிக்கட்டி போடப்பட்ட தண்ணீரும் பழச்சாறுகளும் தேநீரும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஐரோப்பியர்களுக்கும், புலால் உணவு அருந்துகின்ற இந்தியர்களுக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே நீண்ட மேசையின் மீது பனி போன்ற வெண்மையான துணி வி¡¢க்கப்பட்டிருந்தது. அந்த மேசையைச் சுற்றி சிற்ப வேலைப்பாடமைந்த நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. மேசையில் மெழுகுவர்த்திக் கொத்து விளக்குகள், டிரெஸ்டென் பீங்கான் தட்டுகள், வெள்ளிக் கரண்டிகள், முட்கரண்டிகள் வைக்கப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் ரோஜா மலர்க் கொத்துகள் அந்த மலர்களில் மாலைநேரப் பனித்துளிகள் உட்கார்ந்திருந்தன. எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம், வானவில்லின் ஏழு வண்ணக் காட்சிகள், மனங்கவரும் வாசனை, விருந்தினர்களின் உற்சாகமான உரையாடைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு மோதிலால் நேரு சுற்றி வருவார். அவர்கள் கருத்தை ஏற்றோ அல்லது மறுத்தோ பொருத்தமான அபிப்பிராயங்களைக் கூறுவார்.

மோதிலால் நேருவின் வலது பக்கத்தில் சிறப்பு விருந்தினராக அன்னி பெஸன்ட் அம்மையார் அமர்ந்திருக்கிறார். விருந்து முடிவடைந்ததும் கிண்ணங்களில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அந்தத் தண்ணீ¡¢ல் ரோஜா இதழ்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. விருந்தினர்கள் தண்ணீருக்குள் விரல்களை நனைத்துக் கழுவிய பிறகு சிறு துண்டுகளில் கைகளைத் துடைத்துக்கொண்டு இருக்கைகளிலிருந்து எழுகிறார்கள். நூலக அறையில் மதுவகைகள், சுருட்டுகள், தேநீர் முதலியன வைக்கப்பட்டிருக்கின்றன. வட இந்தியாவிலேயே மிகச்சிறந்த தனியார் புத்தகத் தொகுப்பு அங்கே இருக்கிறதென்பது பொதுவான கருத்தாகும். அட்டையில் தங்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள், சட்டத் தொகுப்பு நூல்கள், லண்டன், பா¡¢ஸ், பெர்லின் ஆகிய நகரங்களின் வெளியீடுகள், அரபி பாரசீகம், உருது, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பழைய கையெழுத்துப் பிரதிகள், மிகவும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆங்கில நூல்ள் அலமா¡¢களில் இருந்தன. ஐரோப்பிய ஓவியங்களும் உலோகங்களும், செதுக்கப்பட்ட பழங்காலத்து இந்தியப் படங்களும், பளிங்கும் பீங்கானும், வெண்கலமும் வெள்ளியும் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு காலங்களின் கலாச்சாரங்கள் அங்கே ஒன்று கலந்திருப்பதை நினைவூட்டின.

யு.ம். உசேன்

                                      தொடரும்....
 


ஜவகர்லால் நேரு
மாவீரன் பகத்சிங்
லெனின்