menu






 தலைவர்கள >> ஜவகர்லால் நேரு


மகனே! நாம் காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தாயார் பெருமையோடு கூறுவாள். "காஷ்மீர் இந்தியாவின் வட பகுதியிலுள்ள அழகான மலைப் பிரதேசம். அங்கே மலைச் சிகரங்களில் பனி உறைந்திருக்கும். கீழேயுள்ள பள்ளத் தாக்குகளில் எங்கு பார்த்தாலும் ஏராளமான மலர்கள் இருக்கும். காஷ்மீ¡¢கள் மிகவும் பழமையான, பெருமைமிக்க மரபைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்திற்கு முன் ஜவகர்லாலின் முன்னோர்களில் ஒருவரான ராஜ் கவுல் புகழும் பணமும் அடைவதற்காக இந்தியாவின் செழிப்பான சமவெளிப் பிரதேசத்துக்கு வந்தார். அப்போது சக்கரவர்த்தி ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு முகலாயப் பேரரசின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. சக்கரவர்த்தி பரூக்சியார் காஷ்மீரப் பள்ளத்தாக்குக்கு வந்தபொழுது சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் பாண்டித்தியம் உடையவர் என்று புகழ் பெற்றிருந்த ராஜ்கவுலைச் சந்தித்தார். சக்கரவர்த்தியின் அழைப்பின் போ¢ல் ராஜ் கவுல் அரசவைக்குப் பக்கத்திலிருப்பதற்காக டெல்லிக்கு வந்தார். பரூக்சியார் ஆற்றங்கரையில் ஒரு பண்ணையை அவருக்கு மானியமாகக் கொடுத்தார். அன்று முதல் அவர்கள் தங்களுடைய குடும்பப் பெயரோடு நேரு என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டார்கள்.

டில்லி அரசவை வீழ்ச்சியடைந்த பொழுது கவுல் நேருவின் பண்ணையும் அழிந்துவிட்டது. மோதிலால் நேருவின் தாத்தா டில்லியிலிருந்து பேரரசா¢ன் வழக்காடு மன்றத்தில் "சர்க்கார் கம்பெனியின்" சார்பில் வாதாடும் முக்கியமான வழக்குரைஞராக இருந்தார். அவருடைய தகப்பனாரான கங்காதர் நேரு டில்லி போலீஸ் துறையில் தலைமை அதிகா¡¢யாக இருந்தார். இவருடைய படத்துக்கு முன்னால்தான் ஜவர்கலால் அடிக்கடி நின்று சிந்தித்துக் கொண்டிருப்பான். அவர் மோதிலால் பிறப்பதற்கு முன்பே தன்னுடைய இளமைப் பருவத்தில் -முப்பத்து நான்காம் வயதில்-இறந்து விட்டார்.

1857-1859ம் வருடங்களில் ஏற்பட்ட சிப்பாய்களின் எழுச்சிக்குப் பிறகு பி¡¢ட்டீஷ் இராணுவம் பழிவாங்கும் நோக்கத்தில் கைகளில் அகப்பட்டவற்றையெல்லாம் அழித்தது. எ¡¢த்தது. அந்த சமயத்தில் நேரு குடும்பம் அநேகமாகத் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டது.

தலைநகரமான டில்லியிலிருந்த அந்தக் குடும்பம் ஆக்ராவுக்குத் தப்பியோடிய பொழுது நடைபெற்ற சம்பவங்களை அவர்கள் வெகுகாலம் வரை நினைவில் வைத்திருந்தார்கள். மோதிலாலின் தமக்கைக்குப் பொன்னிறத்தில் முடியிருந்தது. அவர்களை வழியில் சந்தித்த ஆங்கிலப் படையினர் அவர்கள் ஒரு ஆங்கிலப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போவதாக நினைத்தார்கள். அந்த பயங்கரமான காலத்தில் விசாரணைகள் கிடையாது அந்த இடத்திலேயே தண்டனை கொடுக்கப்படும். அந்த குடும்பத்தார் தூக்கிலிடப்படாமல் தப்பியது அதிசயமே. அவர்களுடைய ஆங்கில அறிவும் டெல்லியில் அவர்களைத் தொ¢ந்திருந்த ஒருவர் அந்த வழியாகப் போனதும் ஆதரவாக சாட்சியமளித்ததுமே அந்தக் குடும்பத்தை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றியது.

மோதிலால் ஆக்ராவில் 1861 மே 6ந் தேதியன்று பிறந்தார். அவருடைய மூத்த சகோதரர்கள் உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். அவர்களில் இளையவர் வழக்குரைஞர் பதவி வகித்தார். அவர்களுடைய அன்பு நிறைந்த மேற்பார்வையில் மோதிலால் நேரு வளர்ந்தார்.

அவர் இந்தியாவின் வடபகுதியில் பிறந்தார். அங்கே மொழி, பழக்கவழக்கங்கள், உடை, உணவு முதலிய பல அம்சங்களில் இந்து மற்றும் முஸ்லிம் கலாச்சாரங்கள் இணைந்திருக்கின்றன. அவருடைய வீட்டில் மதப் பகைமையின் சிறு அறிகுறிகூடத் தோன்றியதில்லை. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே தாய்நாட்டில் வசிக்கிறார்கள். ஒன்றாகவே துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். 1857-1859ம் வருடங்களில் மக்கள் எழுச்சியின் போது நடைபெற்றத்தைப் போல இந்தியாவின் விடுதலைக்காக ஒன்றாகவே போராடினார்கள்.

முபாரக் அலி என்ற மதப் பற்றுடைய முஸ்லிம் காஷ்மீர பிராமணரான மோதிலால் நேருவிடம் வந்து சேர்ந்தார். அவர் நேருவிடம் எழுத்தராக வேலை செய்த போதிலும் அந்தக் குடும்பத்தில் எல்லோருமே அவரைத் தங்களில் ஒருவராகவே கருதினார்கள்.

1857-1859ல் நடைபெற்ற சம்பவங்களை முபாரக் அலி நோ¢ல் பார்த்தவர். ஆங்கிலப் படைவீரர்கள் அவருடைய தாயா¡¢ன் கண்களுக்கு முன்னால் அவரது தகப்பனாரைத் தூக்கிலிட்டார்கள். அவருடைய மற்ற உறவினர்களையும் கொன்றார்கள். வாழ்க்கையில் அவர் அன்புக்கு¡¢யதாகக் கருத எஞ்சியது நேரு குடும்பம் மட்டுமே. அவர் இளம் ஜவகர்லாலிடம் தனியான அன்பு கொண்டிருந்தார். அதைப்போலவே ஜவர்கலாலும் அவா¢டம் பேரன்பு கொண்டிருந்தான். முபாரக் அலியின் அன்பு நிறைந்த கண்கள், பனி போன்ற வெண்மையான தலைமுடி, அதே போன்ற வெண்மையானதாடி அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜவகர்லால் அவரை ஒரு மாபெரும் ஞானியாகவும் பழங்காலக் கதைகளின் கருவூலமாகவும் கருதினான்.

யு.ம். உசேன்

                                     தொடரும்....
 


ஜவகர்லால் நேரு
மாவீரன் பகத்சிங்
லெனின்