நேரு ஒரு சுதந்திரப் பறவை
சோவியத் தருகின்ற சிறை வாழ்க்கை, குறிப்பிடத் தக்க முறையில் தாங்க முடியாமற்
போகின்ற தருணங்களில் அவர் ஒரு பறவையைப் போல பூமிக்கு மேலே பறந்து செல்வதற்கு, "மேகக்
கூட்டங்களின் அமளிக்கு நடுவே வேகமாக நுழைவதற்கு", வாழ்க்கையின் விளிம்பை எட்டிப்
பார்ப்பதற்கு"
விரும்பினார்.
பூமியை இன்னும் சிறந்த முறையில் திருத்தியமைக்க, இன்னும் நியாயமானதாகவும் அன்பு
நிறைந்ததாகவும் ஆக்குவதற்காக வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சம்பவங்களில் பூமியைப்
பார்ப்பதோடு மட்டுமல்லாமல் விண்வெளியின் உச்சியிலிருந்தும் அதை ஆராய்வதற்காக
வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சம்பவங்களில் பூமியைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல்
விண்வெளியின் உச்சியிலிருந்தும் அதை ஆராய்வதற்கு அவர் விரும்பினார். இந்த உலகத்தை
மொத்தமாக, ஒரே பார்வையில் பார்த்துவிட வேண்டுமென்று அவர் கனவு கண்டார். "நான்
எல்லாவற்றையும் எடை போட்டுப் பார்த்துவிட்டேன், எல்லாவற்றையும் மனதில் நிறுத்துப்
பார்த்துவிட்டேன். இந்த வாழ்க்கையோடும் மரணத்தோடும் ஒப்பிடும் பொழுது என்னுடைய
அறிவுக்குத் தொ¢ந்தது ஒன்றுமில்லை" என்று சொல்லவும் விரும்பினார். "இந்திய தா¢சனம்"
என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய விருப்பங்களைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.
மோதிலால் நேரு
ஒரு பொ¢ய அரச மரத்தின் நீண்டு வளர்ந்த கிளைகளின் கீழ் ஒரு சிறுவன் நின்று
கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் வயதுக்கு மீறிய சிந்தனை தேங்கியிருக்கிறது.
அந்த மரத்தின் இலைகளின் நிழல் அவன் முகத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அவன்
தலையின் ஓரத்தில் வகிடு எடுத்து கவனமாக, அழகாக சீவிவிடப் பட்டிருக்கிறது. அவன்
மாலுமியின் மேற்சட்டையும் அரைக் காற்சட்டையும் முழங்கால் வரை காலுறைகளும்
அணிந்திருந்தான். அவன் வயதுச் சிறுவர்கள் ஆற்று நீ¡¢ல் குறும்புத் தனமாகக்
குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய உடைகளை அணிந்திருக்கும் இந்தச்
சிறுவன் அவர்களைக் சிறிதும் ஒத்திருக்கவில்லை. மாலுமியைப் போல உடையணிந்திருக்கும்
இந்தச் சிறுவனை நெருங்க அவர்களில் ஒருவனுக்குக் கூடத் துணிவு கிடையாது. அந்தச்
சின்னத் துரையின் கண்களில் அவர்களைப் பற்றிப் பொறாமை தோன்றி மறைந்தாலும் அவன்
வெளிப்படையான அக்கறையைக் காட்டவில்லை என்பது உண்மையே.
இளமையான, ஓரளவுக்குக் குட்டையான தோற்றம் கொண்ட அவன் தாயார் சொரூபராணி
தண்ணீருக்குப் பக்கத்தில் கரையின் மீது நின்று கொண்டிருக்கிறாள். அங்கே
காணப்படுகின்ற யாத்தி¡¢கர்கள் கூட்டத்தின் பார்வையிலிருந்து தன் முகத்தை
மறைப்பதற்காக அவன் தன்னுடைய சேலைத்தலைப்பை லேசாக உயர்த்துகிறாள். "ஜவகர், இங்கே
வா!" என்று தன் மகனைப் பார்த்து அன்பாகக் கூப்பிடுகிறாள். ஆனால் அவன் நின்று
கொண்டிருக்கும் இடத்திலிருந்து நகரவில்லை. அவள் விருப்பத்தை நிறைவேற்ற
மறுப்பதற்காகத் தன்னை மன்னிக்குமாறு கண்களாலேயே கேட்டுக் கொள்கிறான். அவன் தாயார்
அவனை வற்புறுத்தவில்லை. ஆற்றில் முங்கியெழுவதற்காக அவள் மட்டும் தனியே போகிறாள்.
"அருமை மகனே! என்ன காலமோ..." என்று அவள் முணுமுணுக்கிறாள். அவன் வர மறுப்பதற்குக்
காரணம் அவளுக்குத் தொ¢யும். அவன் தகப்பனார் மோதிலால் தான் இதற்குக் காரணம். அவர்
மதச் சடங்குகளை அங்கீகா¢க்காதவர். தன் குடும்பத்தில் பின்பற்றப்படும் மூடப்
பழக்கவழக்கங்களை மனதில் வெறுப்பவர். தன் உறவினர்களும் தன்னைப் போல அதே மாதி¡¢யாகச்
சிந்திக்க வேண்டும். நடந்துக் கொள்ளவேண்டும் என்று அவர் சிறிதும்
எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் எல்லாவற்றையும் பு¡¢ந்துகொண்டு
தன்னுடைய தகப்பனாரைப் போல இருக்க விரும்புகிறேன். "கடவுளே! இதெல்லாம் எப்படி
முடியப்போகிறதோ!" என்று சொரூபராணி மனதில் வேதனைப்பட்டபடியே கணவனையும் மகனையும்
மன்னித்துவிடுமாறு கடவுளிடம் பிரார்த்திக்கிறாள்.
ஆனால் ஜவகர் தகப்பனாரைப் பொ¢தும் போற்றுகின்றான். அவர் மற்றவர்களைப் போன்றவரல்ல
அவனுடைய தகப்பனார் பலசாலி, துணிவு மிக்கவர், பலமாக, பகிரங்கமாக சி¡¢ப்பவர்.
மோதிலால் நேரு பிராமணர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் 1899ம் வருடத்தில்
ஐரோப்பாவுக்குப் போய் விட்டுத் திரும்பிய பொழுது எல்லோரும் வழக்கமாகச் செய்கின்ற
தூய்மைப்படுத்தும் சடங்கைச் செய்ய மறுத்தார். அதனால் சக பிராமணர்களின் கோபாவே
சத்துக்கு ஆளானார் அவர். சமயக் கடமையை மீறியதாக அவருடைய நண்பர்களில் சிலர் அவரைக்
கண்டனம் செய்தார்கள். அவரோடு தொடர்பை நிரந்தரமாக வெட்டிக் கொண்டார்கள். ஆனால்
மற்றவர்கள் (அவர்கள் தான் பெரும்பான்மையினர்) பிராமணர்கள் கடல் கடந்து போகக்
கூடாது என்று விதிக்கின்ற காலாவதியான மரபுகளைத் தங்கள் குலத்தைச் சேர்ந்த
செல்வாக்குள்ள உறுப்பினர் ஒருவர் எதிர்த்துப் புரட்சி செய்ததைப் பற்றி மனதுக்குள்
மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்களில் பலர் தாங்களும் ஐரோப்பாவுக்குப் போக
விரும்பியவர்கள். ஆனால் விடுவார்களே என்ற பயத்தில் முடிவுக்கு வர இயலாது
தவித்தார்கள் மோதிலாலின் தனிப்பட்ட கலகம் இந்து மதத்தின் பழமைவாத தடைகள்
தளர்த்தப்படும் என்ற நம்பிக்கையை விதைத்தது.
மோதிலாலின் ஐரோப்பியப் பயணத்துக்கு முன்பே பிராமணர்கள் தடையை மீறி
வெளிநாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள்
வீட்டுக்குத் திரும்பியதும் கங்கைத் தண்ணீ¡¢ல் குளிக்கும் சடங்கை நிறைவேற்றித்
தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது அவர்களில் சிலர் மோதிலா லோடு
சேர்ந்து பிராமண தர்மத்தின் காலாவதியாகிவிட்ட மரபுகளைத் திருத்தியமைக்க வேண்டும்
என்று வற்புறுத்ததுகின்ற சீர்திருத்தக் குழுவை அமைத்தார்கள். ஐரோப்பாவில் கல்வி
கற்க விரும்பிய வசதியான குடும்பங்களைச் சேர்ந்த வாலிபவர்களும் பெண்களும் இத்தகைய
புது முயற்சிகளைத் தீவிரமாக ஆதா¢த்தார்கள்.
புனிதமான நதிகளான கங்கை, யமுனை, கண்ணுக்குத் தொ¢யாத நதி என்று தொல் கதைகளில்
சொல்லப்படுகின்ற சரஸ்வதி ஆகியவை ஒன்று கலக்குமிடத்தில் ஒரு காலத்தில் பிரயாகை
என்ற ஊர் இருந்தது. அது இப்பொழுது அலகாபாத் நகரமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
மாபெரும் முகலாயர்களின் சக்கரவர்த்திகளான அக்பர், ஓளரங்கசீப்பின் (தனக்கே உ¡¢ய
சிறப்பான அடையாளத்தை எதிர்காலத்துக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்று அவர்கள்
ஒவ்வொரு வரும் விரும்பினார்கள்) துருப்புகள், வெற்றிகரமான படையெடுப்புகள்,
பிரமிப்பைத் தருகின்ற சடங்குகள், துரோகமான கொலைகள், கொடூரமான சித்திரவதைகள் ஆகியன
அந்த நகரத்தைச் சும்மா விடவில்லை. ஆணவம் மிக்க ஆங்கிலேயர்கள் புனிதமான பொருள்களை
அவமதித்தார்கள். வடக்கேயிருக்கும் தீவுகளிலிருந்து வியாபா¡¢கள் என்ற பெயா¢ல் வந்த
கபடம் நிறைந்த போக்கி¡¢கள் மக்களைக் கொள்ளையடித்தார்கள். ஆங்கில வைசிராய்களின்
ஆணைகள் துப்பாக்கியையும் வாளையும் கொண்டு நிறைவேற்றப்பட்டன.
ஆனால் அலகாபாத் தன்னுடைய புனிதமான விதிமுறைகளின்படி தன் வாழ்க்கையைத் தொடர்ந்து
நடத்திக் கொண்டிந்தது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாக
வருகின்ற யாத்தி¡¢கர்களை அந்த நகரம் விருந்தோம்பலோடு, வரவேற்றது. செடிகொடிகளின்
காரமான வாசனைகள் பிரார்த்தனைப் பாடல்களின் ஒலி, பக்கி¡¢கள் மற்றும் பாம்பாட்டிகள்
காட்டும் வேடிக்கைகள், மரணச் சிதையின் நெருப்புகள் மற்றும் ஒளிமயமான கண்கவர்
திருமணக் காட்சிகள், சித்தார் வாத்தியங்களிலிருந்து வருகின்ற இனிமையான இசை ஆகியவை
கலந்து கோடைக்கால இரவுகளில் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன. ஆங்கிலேயர்களின்
படைப்பி¡¢வு அணிவகுத்துப் போய்க் கொண்டிருக்கிறது. மாபெரும் முகலாயர்களின்
வழிவந்தவர்கள் தலையைத் தாழ்த்திய படியே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழங்காலத்தின் எண்ணற்ற இரகசியங்களைப் பாதுகாத்து நிற்கின்ற தன்னுடைய நகரத்தை
ஐவகர்லால் நேசித்தான். பூமியின் அடியில் புதைந்திருக்கும் பாதாளக் கோயிலுக்குக்
செல்லும் நெடிய படிக்கட்டுகளின் வழியாக அவன் கீழே செல்லுவான். அங்கே ஒரு பாழடைந்த
இடத்தில் இந்துக்கள் மிகவும் புனிதமாய் போற்றுகின்ற அரசமரம் இருந்தது. மிகவும்
முந்தய காலமான கி.பி. 540 இல் அந்த மரத்தைப் பற்றி எழுதப்பட்டிருப்பது அதன் பழமையை
எடுத்துக்காட்டுகிறது. அந்தக் கோயிலுக்கு இலவச ஊழியம் செய்பவர்கள் அந்த
மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். முகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியான அக்பர்
அந்த இடத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டினார். ஆயினும் பல நூற்றாண்டுக் காலமாக
பூமியில் புதைந்திருக்கும் அந்தக் கோயில் இந்துக்கள் வழிபடகின்ற புனித இடமாக
என்றென்றும் இருந்து வருகிறது.
அந்தக் கோயிலுக்கும், கோட்டைக்கும் சற்று தூரத்தில் ஆற்றங்கரையின் மீது
முனிபுங்கவரான பாரதவர்ஷர் வசித்த இடம் இருந்தது. அங்கேயிருந்து பார்த்தால் ஒவ்வொரு
இந்துவின் மனதையும் குளிர்விக்கும் காட்சி, புனிதமான கங்கையும் யமுனையும் ஒன்று
கலக்கும் காட்சி தென்படும்.
நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த
பழைய பகுதியான செளக்கியில் முதலில் வசித்தது. அந்தப் பகுதியிலிருந்த வீடுகள் மிகப்
பழமையானவை. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கல்லும் அந்த நகரத்தின் வரலாற்றைச் சொல்லும்.
மோதிலால் நேரு பரந்த விருப்பார்வங்களைக் கொண்டவர், சுறுசுறுப்பான இயல்புடையவர்.
அவர் வாழ்க்கையில் பொ¢ய திட்டங்களை விரும்பியவர். அவருடைய ஆசைகளுக்கு
ஒத்திருந்தால் செலவுகளைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. ஆன்ம பலவீனத்தையும்
தாழ்வுணர்ச்சியையும் அவர் வெறுத்தார். இந்த குணங்கள் தன்னிடம் சிறிதும்
தலையெடுக்காதபடி நசுக்கிவிட்டார். விஞ்ஞானங்களுக்கு - குறிப்பாக சட்டவியலுக்கு -
அவர் தலைவணங்கினார். அவர் சட்டத்தை நன்றாகக் கற்றிருந்தார். எல்லாவிதமான சிக்கலான
நிலைமைகளிலும் சட்டத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது அவருக்கு நன்றாகத் தொ¢யும்.
பாரசீகம், அராபிய மொழி, ஆங்கிலம் உட்பட பலமொழிகளில் அவருக்கு நன்கு தொ¢யும். அவர்
நிறையப் படித்தவர். ஓரளவுக்குச் சிறப்பான கவிதைகளும் எழுதக் கூடியவர். அவர் தொழில்
நுட்பவியலில், நீரேற்றும் குழாய்களில், நீராவிக் கொதிகலங்களில், மின்சாரம் மற்றும்
கார் வண்டிகளில் அக்கறை கொண்டிருந்தார். கட்டிடக் கலையிலும் அவர் ஓரளவுக்கு
ஈடுபாட கொண்டிருந்தார். அவரால் சோம் பேறித் தனத்தை மட்டும் சகித்து கொள்ள முடியாது.
வாழ்க்கையில் ஏதாவதொரு தொழிலில் ஈடுபட முடியாதவர்களைக் கண்டால் அவருக்கு ஆத்திர
மேற்படும். வழக்குரை ஞராகத் தொழிலை ஆரம்பித்த காலத்தில் அவருக்குச் சொற்ப ஊதியமே
கிடைத்தது. இப்பொழுது அவர் ஒவ்வொரு வழக்குக்கும் ஐந்து இலக்க ஊதியம் பெற்று
வந்தார். அந்த வட்டாரத்திலேயே அதிகத்திறமையான அதிக நம்பகமான வழக்குரைஞர் என்று
பெயரெடுத்திருந்தார். அவர் இராஜாக்கள், ஜமீந்தார்கள் மற்றும் பணக்கார
வர்த்தகர்களின் வழக்குகளை நடத்தினார். அவர் அநேகமாக எல்லா வழக்குகளிலும் வெற்றி
பெற்றார். புகழும் நிதியும் அவா¢டம் குவிந்தது.
மோதிலால், செளக்கியிலிருந்து பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்குத் தன்னுடைய
இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். அங்கே அமைதியான, வசதியான மாளிகையில், செடி
கொடிகள், மலர்கள் நிறைந்த பங்களாக்களில் ஐரோப்பியர்களும் அலகபாத்திலுள்ள
செல்வந்தர்களும் வசித்து வந்தார்கள்.
யு.ம். உசேன்
தொடரும்....