எலுமிச்சம்பழம் ரசம்
தேவையானவை:
எலுமிச்சம்பழம் : 2
சீரகம : 1 டீஸ்பூன்
பூண்டு : 2
உப்பு, மல்லித்தழை : சிறிதளவு
தக்காளிப்பழம : 1 டீஸ்பூன்
வற்றல : 2
செய்முறை:
1/2 லிட்டர் தண்ணீ¡¢ல் தக்காளி பழத்தை பிசைந்து கொள்ளவும். மிளகு, சீரகம்,
பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல்
தாழித்து நுரைகூடிய போது இறக்கவும். பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு
சேர்க்கவும். டிப்ஸ்; இது உடம்புக்கு நல்லது. எலுமிச்ச பழத்துக்கு பதிலாக புளி
சேர்த்து தயார் செய்யலாம்.
சுண்டைக்காய் குழம்பு
செய்முறை:
200 கிராம் சுண்டைக்காயைக் கழுவிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை
ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும் 2 பொ¢ய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2 சிகப்பு மிளகாய்களை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டை உ¡¢த்துக்
கொள்ளவும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5
மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, சிகப்பு
மிளகாய்கள், அரை தேக்கரண்டி வெந்தயம், பூண்டு, சுண்டைக்காய் இவற்றைப் போட்டு 4
நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் புளிக்காய்ச்சல், அரைத்த சீரகம், 1 சிட்டிகை
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க
விடவும். மிதமான தீயில் வைக்கவும். சுண்டைக்காய் குழம்பில் எண்ணெய் மிதந்ததும்
இறக்கி உபயோகிக்கவும்.
பட்டூரா (அல்லது) தயிர் பூ¡¢
தேவையானவை:
மைதா : 500 கிராம்
உப்பு : 1 தேக்கரண்டி
தயிர்புளிக்காதது : 1 கப்
செய்முறை:
மைதாவைச் சலித்து 1 தேக்கரண்டி உப்பைப் போட்டு தயிர் விட்டுப் பிசைந்து, நன்கு
ஊற வைக்கவும். இரவு பிசைந்து வைத்து விட்டு காலையில், பூ¡¢, சப்பாத்தி, போலன்றி
நான் மாதி¡¢ கனமாக வட்ட வடிவில் இட்டு, எண்ணெயில் பொ¡¢த்து எடுத்து சன்னா
மசாலாவுடன் சாப்பிடலாம்.
முருங்கைக்காய் அவியல்
செய்முறை:
25 முருங்கைக் காய்களை பொ¢ய துண்டுகளாக வெட்டி சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு
சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் காயிலுள்ள சதை பற்றை மட்டும்
கரண்டியால் எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு
தாளித்து வெங்காயம் 3 வெட்டிப் போட்டு 2 வற்றல் கிள்ளிப்போட்டு வதக்கி
கருவேப்பிலை போட்டு முருங்கைக்காய் கூழையும் போட்டு இரண்டு கிண்டி கிண்டி
இறக்கவும்.
சோளம் சூப்
தேவையான பொருட்கள் :
இளம் சோளம் (பேபி கார்ன்) : 6
வெங்காய தாள : 2 (பொடியாக அ¡¢ந்தது)
பிரஞ்சு பீன்ஸ் பொடியாக அ¡¢ந்தது : 1/2 கப்
காய்கறிகள் ஸ்டாக : 1/2 லிட்டர் - 3/4 லிட்டர்
உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை :
இளம் சோளத்தை (பேபி கார்ன்) பொடியாக அ¡¢ந்து, ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய்
அல்லது எண்ணெயில் வதக்கவும். பின்பு வெங்காய தாள், பீன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள்
வதக்கவும். பிறகு காய்கறிகள் ஸ்டாக், உப்பு சேர்த்து 5-6 நிமிடங்கள் கொதிக்க
வைக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி சோயாசாஸ், மிளகு பொடி அல்லது பாலாடை
(க்¡£ம்) சேர்த்து பா¢மாறுங்கள்.
|