|
பிரண்டை துவையல்
தேவையானவை:
பிஞ்சு பிரண்டை (பொடியாக நறுக்கியது) : அரை கப்
உளுத்தம்பருப்பு : 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய : 5
பூண்டு : 5 பல்
புளி : சிறிய நெல்லிக்காயளவு
உப்பு : தேவையானது
பெருங்காயம் : அரை டீஸ்பூன்
சுடுவதற்கு எண்ணெய் : தேவையானது
செய்முறை:
பிரண்டையை ஒரு டேபிள்ஸ்பூன் காயும் எண்ணெயில் நன்கு வதக்கி எடுங்கள். (நன்கு
வதக்கவில்லை. எனில் நாக்கில் அ¡¢ப்பு ஏற்படும்) மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து,
மிளகாய், உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றைப் பொன்னிறமாகும் வரை வறுத்து, பூண்டு, புளி,
பிரண்டையைச் சேர்த்து, மீண்டும் நன்கு வதக்கி ஆறவையுங்கள். இத்துடன் உப்பு சேர்த்து
அரைத்தால் ருசியான பிரண்டை துவையல் ரெடி.
வடகம்
தேவையானவை:
தாளிக்கும் கருவடாம் : அரை கப்
உளுத்தம்பருப்பு : 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல : 2 டேபிள்ஸ்பூன :
புளி : பொ¢ய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய : 6
எண்ணெய : 2 டேபிள்ஸ்பூன
உப்பு : தேவைக்கு
செய்முறை:
எண்ணெயைக் காயவைத்து சிறு தீயில் உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுங்கள்.
பின்னர் அதில் வடகத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் தேங்காய்
துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் அரைத்தால், வாசமான வடகத்
துவையல் தயார். கட்டுசாதத்துக்கு ஏற்ற ஜோடி.
மிக்ஸ்டு
தேவையானவை:
மல்லித்தழை : 1 கட்டு
புதினா : 1 கட்டு
கறிவேப்பிலை : 1 கப்
இஞ்சி : 1 பொ¢ய துண்டு
தாளிக்கும் வடகம் : 1 டேபிள்ஸ்பூன்
புளி : சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு : தேவைக்கு
எண்ணெய் : 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் : 8
கடுகு : 1 டீஸ்பூன்
செய்முறை:
கறிவேப்பிலை, மல்லி, புதினாவை சுத்தம் செய்யுங்கள். நன்கு அலசுங்கள். 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெயைக் காயவைத்து, மிளகாயை வறுத்து எடுங்கள். இஞ்சியைப் பொடியாக நறுக்கி, மிளகாய்
வறுத்த எண்ணெயிலேயே வதக்கிக்கொள்ளுங்கள். மீதமுள்ள எண்ணெயில் வடகத்தை பொ¡¢யுங்கள்
மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்த, கறிவேப்பிலை, புதினா, மல்லியை வதக்கி
எடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக உப்பு, புளி சேர்த்து அரையுங்கள் மீதமுள்ள
எண்ணெயைக் காயவைத்து, கடுகுக் தாளித்து, அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு கிளறி
இறக்குங்கள்.
|