menu






 சமையல்
 
வெங்காய தூள் பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு : 1 கிலோ
கடலை எண்ணெய் : 300 மில்லி
பெல்லா、 வெங்காயம் : 1 1/2 கிலோ
சோடா உப்பு : 1/2 தேக்கரண்டி
மிளகாய : 25 கிராம்
உப்பு : தேவையானது
சுடுவதற்கு எண்ணெய் : தேவையானது

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டவும், கடலைமாவில், சோடா உப்பு, வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் கலந்த சிறிது தண்ணீர் சேர்த்து உதி、யாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
 


காலிப்பிளவர் பஜ்ஜி

தேவையானவை:
காலிப்பிளவர் : 1
கடலை எண்ணெய் : 1/4 லிட்டர்
பஜ்ஜி மாவு : 200 கிராம்
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

காலிபிளவர் நறுக்கி சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பஜ்ஜிமாவுடன் தேவையான அளவு தண்ணீ、ல் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும் வேக வைத்த காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொ、த்து எடுத்தால் சுவையான பஜ்ஜி ரெடி இதேமாதி、 வெங்காயம் அப்பளம், கத்தி、க்காய், வாழைக்காய் பஜ்ஜியும் தயார் செய்யலாம்.


வெங்காய மசாலா டிஷ்


தேவையானவை:

பெல்லா、 வெங்காயம் : 1/4 கிலோ
உருளைக்கிழங்கு : 3
பட்டாணி : 100 கிராம்
தக்காளி : 4
நல்லெண்ணெய் : 50 கிராம்
வற்றல : 6
சீரகம : 1 மேஜைக்கரண்டி
மல்லி : 1 மேஜைக்கரண்டி
கடுகு, உப்பு, மஞ்சள் : தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை அரைக்கவும் வற்றல், மல்லி அரைக்கவும். சட்டியைக் காயவைத்து எண்ணெய் கடுகு, கருவேப்பிலைப் போட்டு கடுகு வெடித்தபின் வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கவும். வாசனை வந்த பின் அரைத்த மசாலா போட்டு வாசனை வரும் வரை வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் போது வேக வைத்த பட்டாணி, வேக வைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டின உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும் குழம்பு எண்ணெய் தெளியவும் இறக்கவும்.