menu






 சமையல்
 

கற்கண்டு பொங்கல்:

தேவையானவை:
கற்கண்டு (டைமண்டு) : 1/4 கிலோ
பச்சா¢சி : 1 ஆழாக்கு
பாசி பருப்பு : 1/2 ஆழாக்கு,
தட்டிய ஏலக்காய் : 1 டீஸ்பூன்
காய்ந்த திராட்சை : சிறிதளவு
முந்தி¡¢ : 100கிராம்
எண்ணெய் : 50 கிராம்
நெய : 100 கிராம்
பால : 1/2 டம்ளர்

செய்முறை:

முதலில் அ¡¢சி பருப்பை கழுவி 4 டம்ளர் தண்ணீருடன் பால் சேர்த்து குக்கா¢ல் வேக விட வேண்டும். பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும். பிறகு வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்தி¡¢ திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும் பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி பண்டிகை நாட்களில் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து சாப்பிட இது மிகவும் உகந்த உணவாகும்.
 


சர்க்கரைப் பொங்கல்:

தேவையானவை:
பச்சா¢சி : அரைகிலோ
பால :  150மி.லி
வெல்லம : 350 கிராம்
முந்தி¡¢ப் பருப்பு : 15 கிராம்
ஏலக்காய : ஐந்தாறு
குங்குமப்பூ : சிறிதளவு
பச்சைக் கற்பூரம் : சிறிதளவு
பயிற்றம் பருப்பு : 125 கிராம்
நெய : 125 மி.லி
தேங்காய் : 1 மூடி
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

அ¡¢சி, பறிற்றம் பருப்பு, இரண்டையும் தனித்தனியே ஒரு வாணலியில் சிறிது வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை வாணலியில், கொஞ்சம் நெய் விட்டுத் தேங்காயைத் துருவிப் போட்டுச் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முந்தி¡¢ப் பருப்பையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். நீர் கொதித்ததும் அ¡¢சியையும் பருப்பையும் கலந்து போட வேண்டும். இவை வெந்ததும் பாலை ஊற்றி ருசிக்கு ஏற்ப உப்பைப் போட்டு நன்றாகக் கிளறி வறுத்த முந்தி¡¢ப் பருப்பையும் 50 கிராம் திராட்சைப் பழத்தையும் காம்பு நீக்கிச் சாதத்தில் போட்டு அடக்க மான அளவில் வேகவிட வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை உடைத்துப் போட்டுச் சிறிது நீர் விட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதமானதும் அடுப்பில் வேகும் சாதத்தில் பாகை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளற வேண்டும். பிறகு தேங்காய்ப்பூ, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, நெய் இவற்றைச் சேர்த்து மேலும் கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி விட வேண்டும்.
 


கொள்ளுப் பருப்பு பொங்கல்


தேவையானவை:

கொள்ளப் பருப்பு  : 1/2 ஆழாக்கு
அ¡¢சி : 1 ஆழாக்கு
நெய :  100 கிராம்
உப்பு : தேவையான அளவு
மிளகு : ஒரு ஸ்பூன்
சீரகம : ஒரு ஸ்பூன்

செய்முறை:

கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள், அதை அ¡¢சியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வே விடுங்கள். பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடுங்கள். பின், நெய் விட்டு, கூடவே சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொங்கலின் ஸ்பெஷல் என்ன தொ¢யுமா..? இது ஊளைச் சதையைக் குறைக்கும்.

 




இஞ்சி பொங்கல்

இஞ்சி பொங்கல் சுவையில் மிகவும் சிறந்தது. பொ¢யவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏற்படும் உபாதைகள் வயிற்று போக்கு, வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் டாக்டர் இஞ்சி பொங்கல் என்றால் மிகையில்லை.

தேவையானவை:

பச்சா¢சி : 2 டம்பளர்
பாசி பயிறு : 1 டம்பளர்
இஞ்சி துருவியது : 1 கப்பு
உப்பு : தேவையான அளவு
மிளகு : 2 ஸ்பூன்
சீரகம : 2 ஸ்பூன்
பெருங்காய பொடி : 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை : சிறிதளவு
நெய : 100 கிராம்
எண்ணெய் : 1 கப்பு
முந்தி¡¢ : 50 கிராம்

செய்முறை:

குக்கா¢ல் பச்சா¢சி, பாசிபயிறு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீர் 5 டம்பளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.

வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்தி¡¢ மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும் பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.