தயிர் உருளை
தேவையானவை:
சிறிய உருளைக்கிழங்கு
:
அரை கிலோ
பொ¢ய வெங்காயம்
:
2
சற்று புளித்த தயிர்
:
அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது
:
2 டீஸ்பூன்
மிளகாய்தூள :
அரை டீஸ்பூன்
மிளகுதூள :
அரை டீஸ்பூன்
கரம்மசாலா :
அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள :
கால் டீஸ்பூன்
எண்ணெய :
4 டேபிள் ஸ்பூன்
உப்பு :
தேவைக்கு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலு¡¢த்துக் கொள்ளுங்கள். பொ¢ய வெங்காயத்தை பொடியாக
நறுக்குங்கள் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை
வதக்குங்கள். பின்னர் மிளகாய்தூள், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு, உருளைக்கிழங்கு
சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் நன்கு வதக்குங்கள். பின்னர் தயிர், கரம் மசாலா
சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.
பிரெட் சப்பாத்தி, பூ¡¢க்கு சூப்பரான சைட் டிஷ் இந்த தயிர் உருளை
கோஸ் பனீர் கறி
தேவையானவை:
கோஸ் :
கால்கிலோ
பனீர :
200 கிராம்
மிளகாய்தூள் :
2 டீஸ்பூன்
மஞ்சள்தூள :
கால் டீஸ்பூன்
உப்பு :
தேவைக்கு
கறிவேப்பிலை :
சிறிது
தாளிக்க : கடுகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், பட்டை 1, எண்ணெய் 4
டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கோஸை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். பனீரை சற்று கனமாக நீளவாக்கில்
நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, சீரகம், பட்டை தாளித்து கோஸை சேருங்கள்
10 நிமிடம் நன்கு வதக்கியபின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பனீர் சேர்த்து பச்சை
வாசனை போய் சுருளும் வரை கிளறி கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.
உளுந்து தக்காளி மசாலா
தேவையானவை:
முழு உளுந்து :
அரை கப்
தக்காளி :
2
பச்சை மிளகாய்
:
3
மஞ்சள்தூள :
கால் டீஸ்பூன்
எலுமிச்சைபழம் சாறு
:
1 டேபிள்ஸ்பூன்
உப்பு :
தேவைக்கு
கறிவேப்பிலை :
சிறிது
மல்லித்தழை :
சிறிது
தாளிக்க : கடுகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், நெய் அரை டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
உளுந்தை மஞ்சள்தூள் சேர்த்து 3கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவையுங்கள், குக்கர்
என்றால் 2 விசில் போதும். குழைந்துவிடக்கூடாது. தக்காளி, பச்சைமிளகாயைப் பொடியாக
நறுக்கிக்கொள்ளுங்கள், நெய் எண்ணெயை ஒன்றாகக் காயவைத்து கடுகு, சீரகம், தாளித்து,
பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி, வெந்த உளுந்து,
உப்பு கறிவேப்பிலை மல்லிதழை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி,
எலுமிச்சம்பழம் சாறு சேருங்கள்.
நாவைக் கட்டிப் போடச்செய்யும் அசத்தலான சைட் டிஷ் இது.
க்¡£ன் கறி வெஜ் கோப்·தா
தேவையானவை:
உருளைக்கிழங்கு
:
2
கேரட :
1
பட்டாணி :
1 கைப்பிடி
பீன்ஸ :
2
மைதா :
3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் சாறு
:
1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள :
அரை டீஸ்பூன்
கரம்மசாலா :
அரை டீஸ்பூன்
மல்லித்தழை :
சிறிது
உப்பு :
ருசிக்க
எண்ணெய் :
தேவைக்கு
பிரட் ஸ்லைஸ் :
2
அரைக்க: தேங்காய் - 1மூடி, முந்தி¡¢ - 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்க வேண்டும்),
புதினா - அரை கட்டு, மல்லித்தழை - 1 கைப்பிடி, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய்- 6 (இவை அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்)
தாளிக்க : பட்டை -1, லவங்கம்-2, பொ¢ய வெங்காயம் - 2, எலுமிச்சம்பழம் சாறு - 1 டேபிள்
ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
கிழங்கை வேக வைத்து தோலு¡¢த்து மசித்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை பொடியாக நறுக்கி
வேகவைத்து தண்ணீ¡¢ல்லாமல் வடித்து மசியுங்கள். அத்துடன் எண்ணெய் நீங்கலாக மற்ற
பொருட்களை ஒன்றாக சேர்த்து பிசையுங்கள். சிறுசிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.
எண்ணெய்யைக் காயவைத்து உருண்டைகளைப் பொ¡¢த்தெடுங்கள் கோ·ப்தா ரெடி
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக
நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் சேர்த்து
நன்கு வதக்குங்கள். அத்துடன் புதனா மசாலாவை சேர்த்து பச்சை வாசன¨ போக வதக்குங்கள்.
அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள். பின்னர் தேங்காய், முந்தி¡¢ விழுதை
சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பா¢மாறும் பொழுது உருளைக்கிழங்கு
கோ·ப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு பா¢மாறுங்கள்.