menu






சமையல்


இட்லி

தேவை:

புழுங்கல் அ¡¢சி - 300 மி.லி.
உளுத்தம் பருப்பு - 75 மி.லி.

செய்முறை:

அ¡¢சி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுத்தம்பருப்பு போட வேண்டும். அ¡¢சியை நன்றாகத் தண்ணீர் விட்டு நனைய வைத்து உரலில் இட்டு நன்றாக ஆட்டவும். உளுந்தம் பருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் உரலில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும். இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைத்து, இட்லி தட்டிவிட்டு வேக வைக்கவும். இட்லி மாவையே தோசைக்கும் உபயோகப்படுத்தலாம். தோசைக்கு அ¡¢சியின் அளவில் மூன்றில் ஒரு பாகம் உளுத்தம் பருப்பு போட்டால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும்.
இட்லிக்கு உளுந்தம் பருப்பு புதிய பருப்பு என்றால் சற்று குறைத்துப் போட்டால் நல்லது.


ஆம வடை

செய்முறை:

250 மி.லி கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரம் நனைய வைத்துக் களைந்து ஒரு வடித்தட்டில் தட்டி தண்ணீரை வடிய வைக்கவேண்டும். உரலை நன்றாக துடைத்து விட்டு பருப்புடன் உப்பு 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் 6, கருவேப்பிலை மல்லிச் செடி பொட்டு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு நன்றாகச் சிவந்தவுடன் எடுக்கவும். கடலைப்பருப்புக்குப் பதில் பட்டாணிப் பருப்பை உபயோகித்தும் இதேமாதி¡¢ சுடலாம்.


பால் பணியாரம்

தேவை:

பச்சா¢சி : 100 கிராம்
உளுந்து : 75 கிராம்
பசும்பால : 200 கிராம்
தேங்காய் பால் : ஒரு டம்ளர்
சர்க்கரை : 100 கிராம்
ஏலக்காய் பொடி : சிறிதளவு
பொ¡¢க்க (எண்ணெய்) : தேவையான அளவு

செய்முறை:

பச்சா¢சியையும், உளுந்தையும் ஐந்து மணிநேரம் ஊற வைத்து, கிரைண்டா¢ல் ஒரே சமயத்தில் போட்டு மை மாதி¡¢ அரைக்கவும். இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். வெள்ளை நிறமாக பொறித்து எடுக்கவும். பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீ¡¢ல் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும் சுவையான பால் பணியாரம் ரெடி.

பால் செய்முறை:

பசும் பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும் அதில் சர்க்கரை ஏலப்பொடி சேர்க்கவும்.


குழிப்பணியாரம்

தேவை:

பச்சா¢சி : 1கப்
புழுங்கலா¢சி : 1கப்
உளுந்தம்பருப்பு : 1மேஜைக்கரண்டி
தேங்காய : 1 முடி
வெந்தயம : சிறிது
உப்பு : சிறிது

செய்முறை:

அ¡¢சி உளுந்தம்பருப்பு வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து, இரவு தோசை மாவு போல் ஆட்டி வைக்கவும். காலையில் தேங்காய்ப்பூ கலந்து குழிப்பணியாரம் சட்டியில் ஊற்றி வைக்கவும்.
குறிப்பு: கருப்பட்டி கலந்தும் சுடலாம்.