menu






சமையல்

மல்டி புரூட் டெக்

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் பழம்-2, வாழைப்பழம்-2, அன்னாசிப்பழம்-1/4 பங்கு, மைதா மாவு-150 கிராம், கார்ன் பிளேக்ஸ் - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - 25 கிராம்.

செய்முறை :

ஆப்பிள் பழத்தையும், அன்னாசிப் பழத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் வாழைப்பழத்தையும் சர்க்கரையும் சேர்த்து மிக்சியிலிட்டு கூழாக அடித்து எடுத்துக்கொள்ளவும். கார்ன் பிளேக்சை பொடியாக்கி, அத்துடன் மைதா மாவையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மாவாக பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவு கலவையை உள்ளங்கை அளவு வட்டமாக மெல்லியதாகத் தட்டி, தோசைக்கல்லில் சிறிது நெய் தடவி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
இதில் ஒன்றை எடுத்துவைத்து, இதன் மீது சிறிது பழக்கூழ் கலவையை சமமாக பரப்பவும், பின்னர், இன்னொன்றை எடுத்து இதன் மீது வைத்து மீண்டும் பழக்கூழைப் பரப்பவும். இது இரண்டு அடுக்குடெக் ஆகும். இந்த 'மல்டி புரூட் டெக் இனிப்பு' மிகவும் சுவையாக இருக்கும்.
மாலை நேர டிபனுக்கு மிகவும் ஏற்றது. குழந்தைகள் மிகவும் விரும்பித் தின்பார்கள். விருந்தின்போது செய்து தந்தால் சபாஷ் உங்களுக்குத் தான். இதைச் செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் மிக்கது.

 


மிளகு மோர் சாம்பார்

தேவையான பொருட்கள் :

மிளகு - 25 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், பொட்டுக் கடலை மாவு - 50 கிராம், கெட்டியான மோர் - 3 கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா - 50 கிராம், வெந்தயம் - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 2 கப், நெய் - 100 கிராம், பெருங்காயம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், உப்பு (தேவைக்கேற்ப), கருவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :

முதலில் துவரம் பருப்பை குழைய வேகவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும். கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
 


முந்தி、 வடை  

தேவையான பொருட்கள் :

முந்தி、ப் பருப்பு - 200 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 6, எண்ணெய் - 300 கிராம், கொத்தமல்லித் தழை - 1 சிறுகட்டு, கருவேப்பிலை - 1 கொத்து, தேவையான அளவு உப்பு.

செய்முறை :

கடலைப் பருப்பை ஊறவைத்து பின் அம்மியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். முந்தி、ப் பருப்பையும் எடுக்கவும். முந்தி、ப் பருப்பையும் அதுபோலவே அரைத்து கடலைப் பருப்பு மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மாவுடன் சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறுசிறு துண்டுகளாக உருட்டி வாழை இலை மேல் வைத்து வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும். இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும். சுடச்சுட சாப்பிட இந்த 'முந்தி、 வடை' மிக சுவையாக இருக்கும். சத்தானது. விருந்தினர்களுக்கு ஏற்றது. மாலை சிற்றுண்டிக்கு உகந்தது.
.