அறுசுவை
காரட் அப்பம் :
தேவையானவை :
துருவிய காரட் 3 கப், உளுத்தம் பருப்பு 200கிராம், சர்க்கரை 100 கிராம், முந்தி¡¢ப்பருப்பு
25கிராம், திராட்சை 25 கிராம், சோடா உப்பு 1 சிட்டிகை, டால்டா 250 கிராம் தேங்காய்
துருவல் 1கப்
செய்முறை :
உளுத்தம் பருப்பை ஊற வைக்கவும். முந்தி¡¢ப்பருப்பு, திராட்சை இரண்டையும் வாணலியில்
சிறிது நெய் விட்டு பொன்நிறமாக வறுக்கவும். உளுத்தம் பருப்பை களைந்து தண்ணீர் விட்டு
கெட்டியாக அரைக்கவும். நைசானதும் சர்க்கரை, முந்தி¡¢ப்பருப்பு, திராட்சை மூன்றையும்
போட்டு அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவுடன் சோடா உப்பு, காரட் துருவல், தேங்காய் துருவல், போட்டு பிசைந்து
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அப்பம் ஊற்றி பொன்னிறமானதும் எடுத்துவிடவும்.
சு¨யாக மிருதுவாக இருக்கும் காரட் அப்பத்தை சிறுவர்கள் முதல் பொ¢யவர்கள் வரை மிகவும்
விரும்பி உண்பார்கள் செய்வது மிக எளிது.
தேங்காய் முறுக்கு :
தேவையானவை :
புழுங்கல் அ¡¢சி 1படி, வெள்ளை உளுந்து 1/4 படி, தேங்காய் 1, எள்
50கிராம், பெருங்காயம் சிறு துண்டு, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய்
தேவைக்கேற்ப,
செய்முறை :
அ¡¢சியுடன் உளுந்தை சற்று சிவக்க வறுத்த மிசினில் அரைத்து கொள்ளவும்.
தேங்காயை துருவி பால் எடுத்து அதில் உப்பு, பெருங்காயம் கரைத்து எள்
சேர்த்து மாவில் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்பு மாவை தேன்குழல் அச்சில் இட்டு முறுக்குகளாக பிழிந்து எண்ணெயில்
போட்டு வெந்ததும் எடுக்கவும். இதுவே தேங்காய் பால் தேன்குழல். பண்டிகை
நாளில் செய்து கொடுத்தால் சிறுவர் முதல் பொ¢யவர் வரை அனைவரும்
விரும்பி சாப்பிடுவர்.
ரவை சீடை :
தேவையானவை :
ரவை 1/4 படி (2 ஆழாக்கு) சீரகம் 1/2 ஸ்பூன், மிளகு 1ஸ்பூன், உப்பு
சிறிதளவு, தேங்காய்பூ 1/2 கிண்ணம், தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப,
நெய் 50 கிராம்.
செய்முறை :
மிளகு, சீரகம், உப்பை பொடிசெய்து ரவையுடன் கலந்து கொள்ளவும் பிறகு
தேங்காய் பூவையும் நெய்யையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு
கெட்டியான மாவாகப் பிசைந்து கொள்ளவும். பின்பு சீடையாக உருட்டி
தேங்காய் எண்ணெயில் போட்டு பொ¡¢த்து எடுக்கவும் சுவையானது, செய்வதற்கு
எளிதானது.
ரவை பாயசம் :
தேவையானவை :
ரவை 1 பிடி, பயற்றம் பருப்பு 1/2 கரண்டி, வெல்லம் எலுமிச்சையளவு, பால்
2 கரண்டி, ஏலக்காய் 2, முந்தி¡¢ப்பருப்பு 5, கேசா¢ப்பவுடர் 1 சிட்டிகை,
நெய் 3 ஸ்பூன்
செய்முறை :
வெண்கலத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வறுத்துக் கொண்டு அதில் 1/2
ஆழாக்கு தண்ணீரை ஊற்றி விடாமல் கிளறி, பயற்றம் பருப்பையும் போடவும்.
இரண்டும் நன்கு வெந்தவுடன் வெல்லத்தை நறுக்கி சேர்க்கவும். வெல்ல
வாசனை போக கொதித்தவுடன் கேசா¢ப்பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து முந்தி¡¢ப்பருப்பையும்
நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
இதில் வெல்லத்திற்கு பதிலாக இரண்டு கரண்டி சர்க்கரை சேர்த்தும் தயா¡¢க்கலாம்.
பயற்றம் பருப்பு சேர்க்கத் தேவையில்லை.