யானைக்கு இல்லை தானமும் தருமமும் 41
பூனைக்கு இல்லை தவமும் தயையும் 42
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் 43
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும் 44
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும் 45
அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை 46
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை 47
கேளும் கிளையும் கெட்டோ ர்க்கு இல்லை 48
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா 49
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் 50
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ் சாலை அடையினும் அடைவர் 51
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆள்வர் 52
குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர் 53
எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு
கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும் 54பெற்றமும் கழுதையும் மேய்ந்த
அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெற்பொலி நெடு நகர் ஆயினும் ஆகும் 55
மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து தம் கொழுநரைத்தழீஇ
உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர் 56
இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே 57
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே 58
நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே 59
தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சுமே 60
குன்றுடை நெடும் காடு ஊடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே 61
ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சுமே 62
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும் புலி வாழும் காடு நன்றே 63
சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே 64
காலையும் மாலையும் நான் மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே 65
குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே 66
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே 67
வித்தும் ஏரும் உளவா இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே 68
தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே 69
தன் மனையாளைத் தன் மனை இருத்திப்
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே 70
தன் ஆயுதமும் தன்கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே 71
வாய் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின் 72
பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே 73
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே 74
இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறை யுறந்தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும் மே 75
பழியா வருவது மொழியாது ஒழிவது 76
சுழியா வரு புனல் இழியாது ஒழிவது 77
துணையோடு அல்லது நெடு வழி போகேல் 78
புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல் 79
ஏழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே 80
வழியே ஏகுக வழியே மீளுக 81
இவை காண் உலகிற்கு இயலாமாறே 82
|