menu






 இலக்கியம >> கதை >> வட்டி


வட்டி

- சு. சங்கர்

அன்றும் வழக்கம் போல் கிருஷ்ணய்யர் மெஸ்ஸில் கல்லூ¡¢ மாணவர்களும், பேராசி¡¢யர்களும் சாப்பிட்டுக்கொண்டிருக்க சர்வர்கள் பரபரப்பாக பா¢மாறிக்கொண்டிருந்தார்கள். கல்லாவில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணய்யருக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவரது மூன்றாவது மகள் லட்சுமியை நேற்றுதான் காஞ்சிபுரத்திலிருந்து வந்த மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்த்து விட்டுப் போயிருந்தார்கள்.

டாக்டர் மாப்பிள்ளை, வீட்டில் எல்லோருக்கும் மாப்பிள்ளையைப் பிடித்திருந்தது. திருமணச்செலவை பட்ஜெட்போட்டுப்பார்த்தபோது ஐம்பதாயிரம் ரூபாய் குறைந்தது. யா¡¢டம் சென்று கடன் கேட்பது என்று கிருஷ்ணய்யருக்குப் பு¡¢யவில்லை. தொ¢ந்த சொந்தங்கள் எல்லாம் கடன் கொடுக்க முடியாத வறுமை நிலையில் இருந்தார்கள். வேறு யா¡¢டம் போய்க்கேட்பது?

தனது மெஸ்ஸிற்கு ரெகுலராகச்சாப்பிட வரும் கல்லூ¡¢பேராசி¡¢யர்கள் யா¡¢டமாவது கேட்கலாமா? கிடைக்குமா? முள்ளுவாடியில் அந்தத் தனியார் கல்லூ¡¢ ஆரம்பித்த நாளிலிருந்தே அங்கே கிருஷ்ணய்யர் மெஸ் நடத்தி வந்தார். அந்த அத்துவானக்காட்டில் வேறு கடைகளோ, ஹோட்டலோ கிடையாது என்பதால் கிருஷ்ணய்யர் மெஸ்ஸிற்குதான் வந்தாக வேண்டும்.
இதுவரை கல்லூ¡¢ ஊழியர்கள் யா¡¢டமும் கடன் கேட்டு கை நீட்டியது இல்லை என்பதால் அந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து கடன் கேட்கும் முடிவை மாற்றிக்கொண்டார். தொ¢ந்த இடத்தில் கேட்டுப்பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சியது. வேறுயா¡¢டம் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தவா¢டம் கமலம்தான் சொன்னாள்.

"என்னங்க.. உங்க நண்பர் பஷீர் பாயிடம் கேட்டுப்பாருங்களேன்."

கிருஷ்ணய்யர் ஒரு கணம் திடுக்கிட்டார். "என் மகள் கல்யாணத்திற்கு பாயிடம் கடன் கேட்பதா?"

பஷீர் பாயும் கிருஷ்ணய்யரும் பால்ய வயதிலிருந்தே நண்பர்கள். அந்த நாளில் கலவையில் இருந்து ஆற்காட்டிற்கு நடந்தே சென்று இ.எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார்கள். அதற்குமேல் படிக்க முடியும் இருவரது வீட்டிலும் வறுமை தலைவி¡¢த்தாடியது.

கிருஷ்ணய்யர் வேறு வழியில்லாமல் ஹோட்டல் வேலைக்குப்போனார். பஷீர் பாய் உள்ளூ¡¢ல் மளிகைகடை வைத்தார். எங்கெங்கோ ஹோட்டல் வேலை பார்த்துவிட்டு பிறகு சொந்த ஊருக்கே வந்து செட்டிலாகி கிருஷ்ணய்யர் மெஸ் ஆரம்பித்ததும் பஷீர் பாயின் கடையில்தான் அவர் மளிகை சாமான்கள் வாங்கினார்.

நேரம் கிடைக்கும்போது அவர்கள் ஊர்க்கோடியில் இருக்கும் மதகடியில் உட்கார்ந்து தங்கள் இளமைக்கால நினைவுகளை ஞாபகப்படுத்தி நேரம் போவதே தொ¢யாமல் பேசி மகிழ்வார்கள்.

"என்னங்க யோசிக்கறீங்க... நம்ம அவசரத்தேவைக்குத்தானே கேக்குறோம்?. யார்கிட்டே வாங்கினாலும் வட்டியுடன் திருப்பிக்கொடுக்கப்போறோம்... பாய்கிட்டேயும் அப்படியே கொடுத்திடலாமே".

தீர யோசிக்கையில் கமலம் சொன்னது சா¢யெனப்படவே. உடனே சென்று பஷீர்பாயைச் சந்தித்து கிருஷ்ணய்யர் தனது நிலைமையை விளக்கிச் சொல்லி கடன் கேட்டார்.

சட்டென பஷீர்பாயின் முகம் சுருங்கிப்போனது. "அய்யரே, நானும் உங்களை மாதி¡¢ கஷ்டத்துலதான் இருக்கேன். இருந்தாலும் எப்பவும் கேட்காதவர் இப்போ கேட்டுட்டீங்க... பார்க்கலாம்" என்றார்.

கிருஷ்ணய்யர் 'கேட்டிருக்கக் கூடாதோ' என்று உள்ளூர நினைத்துக்கலங்கினார். "¨தா¢யமா இருங்க. உங்க பொண்ணு கல்யாணம் எந்த ஒரு குறையுமில்லாம நல்லபடியாக நடக்கும். அந்த அல்லாதுணையிருப்பார்" என்று பஷீர்பாய் ஆறுதலாய் பேசி கிருஷ்ணய்யரை அனுப்பி வைத்தார்.

மெஸ்ஸிற்கு வந்து வெகுநேரமாகியும் 'பஷீர்பாய் உதவி செய்வாரா?' என்று குழம்பித் தவித்தார். அன்றிரவு வீட்டிற்கு வந்ததும் கமலம் அவரை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றாள்.

"என்னங்க... பஷீர்பாய் வந்திருந்தாரு" "என்ன சொன்னாரு?"

அப்போது மகள் லட்சுமி வந்தாள். "அம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து. அப்பா வந்ததும் கொடும்மா. இது உன்னோட கல்யாணச்செலவுக்குன்னு சொன்னாருப்பா".

கிருஷ்ணய்யர் நம்ப முடியாமல் மனைவியைப் பார்க்க, அவன் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த அந்த ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்து வந்து காண்பித்தாள்.

அடுத்த நாள் பஷீர்பாயைச் சந்தித்து உதவி செய்தமைக்கு நன்றி தொ¢வித்த கிருஷ்ணய்யர். சீக்கிரமே பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னார்.
அவரோ, "முதலில் ஆகவேண்டியதைப்பாருங்க. பணத்தைத் திரும்பித் தர என்ன அவசரம்?" என்றார்.

கிருஷ்ணய்யர் மளமளவென கல்யாண வேலைகளை ஆரம்பித்தார். சத்திரம் பிடித்து.. மேள, தாளக்காரர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து... பூ அலங்காரத்திற்கும், ஜானவாசத்திற்கும் சொல்லி.. சொந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பத்தி¡¢கை கொடுத்து...

லட்சுமியின் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அடுத்த ஆறுமாதத்தில் ஐம்பதாயிரம் ரூபாயைச்சேமித்து விட்டார் கிருஷ்ணய்யர்.
"என்னங்க... பஷீர்பாய்கிட்ட வட்டியோடு சேர்த்து பணத்தைக்கொடுத்துவிட்டு வாங்க... நான் ரொம்பக் கேட்டதாகச்சொல்லுங்க."

"சா¢"

மனைவி கொடுத்த பணத்தை வாங்கி மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு நேராக பஷீர்பாயின் வீட்டை அடைந்தார்.

வீட்டுத்திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பஷீர்பாய். நண்பரைப் பார்த்துவிட்டு எழுந்து நின்று வரவேற்றார்.

"வாங்க உட்காருங்க"

திண்ணையில் பஷீர்பாயின் அருகே உட்கார்ந்தார் கிருஷ்ணய்யர்

"வாழ்க்கையில் என்னால் மறக்கமுடியாத பொ¢ய உதவி செய்துட்டீங்க பஷீர். அதான் வட்டியோட பணத்தைத் திருப்பிக்கொடுத்துட்டுப்போகலாம்னு வந்தேன்" என்று மஞ்சள் பையிலிருந்து பணத்தை எடுத்து பஷீர்பாயிடம் கொடுத்தார்.

பஷீர் "அசலை மட்டும் கொடுங்கப்போதும். வட்டி வேணாம்". என்று மறுத்தார்.

"அப்படிச் சொல்லக்கூடாது. வெளியில் நான் வாங்கியிருந்தேன்னா வட்டி போட்டுத்தானே தரப்போகிறேன்... மறுக்காமல் வாங்கிக்கங்க".
"இல்லை. வட்டி வாங்கறதுதப்பு... நீங்க அசலைக்கொடுத்தாலே சந்தோஷம்" என்ற சி¡¢த்தார் பஷீர்பாய்.

"என்ன சொல்றீங்க பாய்?"

"இது ஹஜ் யாத்திரைக்காக நான் சேர்த்து வைத்த பணம்... இதற்கு வட்டி வாங்குறது பாவம்...." என்று பஷீர்பாய் சொன்னதும் நெகிழ்ந்துபோன கிருஷ்ணய்யர் அவரது கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.