என் நெஞ்சுக்குள் உட்கார்ந்து
கொண்டு
நான் எதையும் செய்து முடித்தவுடன்
இது தப்பு, இது சா¢, இது ஏன் தப்பு, இது
ஏன் சா¢ என்று ஒலிக்கும் அருவமாக
டிக் டிக் கென்று ஏதேதோ சொல்லிக்
கொண்டிருக்கும் நீதிக் கிளியே!
நீ உன் வாதத்தையெல்லாம் அறிவுடன்
எடுத்து நான் எதையும் செய்ய
ஆரம்பிக் குமுன் சொல்வதற் கென்ன?
ஏன் எதையும் செய்த பின்
சொல்லித் தொலைத்து என் அமைதியையும்
தொலைக்கிறாய்? சா¢ தப்பு
என்று நான் செய்து விட்டது பற்றித்
தீர்மானிக்க முடியாமல்
தவிக்கும் போது நீ வேறு குட்டையைக்
குழப்புகிறாயே - அது ஏன்?
செய்யலாமா வேண்டாமா? எப்படிச்
செய்யலாம் என்று நான்
யோசிக்கும் வேளையில் நீ எங்கேதான்
போயிருந்தாய்? அப்போது
உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும்
இல்லாதது போல் இருந்து
விட்டாயே! - அது ஏன்? உன் பொறுப்பு
அப்போது உனக்குத் தொ¢யவில்லையா?
என் உள்ளத்தில் ஓயாத சந்தேகங்கள்
எழுந்து இது இப்படி நடந்திருந்தால்
சா¢யாகியிருக்குமா. இப்படி என் நடக்க
வில்லை. ஏன் இப்படி நடந்தது என்று
சஞ்சலப்பட்டு ஊசாலடிக் கொண்டு என்னை
அலக்கழிக்கும் போது நீயும் உன்
குற்றம் சாட்டும் குரலை எழுப்புகிறாயே
சனியனே - நீ ஏன்
துருத்திக் கொண்டு வருகிறாய்?
உன்குரலை அமுக்குவது எப்படி?