menu






 இலக்கியம >> கவிதை >>
  • அனுபவம்

    - க.நா. சுப்ரமணியன் கவிதைகள்.

மழை பெய்யும் போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்
காற்று அடிக்கும் போது தொண்டையில்
புழுதிபடியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்தி விட்டேன்.

யரோ எழுதிய நூல்களைக் கிடைக்கும் போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப் போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்தி விட்டேன். புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக் கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகி விட்டேன்
காதலிகள் தேடி வந்தபோது ஆசை
அடித்துக் கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆ§க்ஷபிப்பாள் என்று
பயந்த ஒதுங்கி ஒதுங்கிப்
போய் விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய் விட்டான். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.
சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவா¢க்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.