menu






 இலக்கியம >> கதை >> தூக்கம் கண்களைத் தழுவட்டுமே


தூக்கம் கண்களைத் தழுவட்டுமே

- உமா லட்சுமண் சங்கர், கேத்தனூர்.

சின்ன பையன் ரங்கசாமி கூவிக்கொண்டே மூச்சிரைக்க வந்தான். வேலை முடியப் போகிற நேரம். களையெடுத்துக் கொண்டிருந்த அம்சவேணி நிமிர்ந்து பார்த்தாள்.

"அக்கோவ்... கணேசு போன கூண்டு வேன் கவுந்து போச்சாம்... ஆசுபத்தி¡¢யிலே சேத்துருக்காங்களாம்.. போலீசுக்காரரு வந்து சொல்லிவிட்டுப் போறாரு..."

அதிர்ச்சியடைந்து போனால் அம்சவேணி... 'நம்ம கணேசு போன வேனா...?' திக்கித் தடுமாறி வார்த்தைகள் பாசத்தைக் கிளறியவாறு வந்து விழுந்தன.

'வாக்கா போகலாம்... நேரமாச்சு... திருப்பூருக்கு பஸ்சுப் பிடிச்சுப் போயி ஆசுபத்தி¡¢க்குப் போறக்கே இன்னும் ஒண்ணரை மணிநேரம் ஆகும்...' ரங்கசாமி கூறிய வார்த்தைகள் காதில் விழாதவள் போல் நின்றாள் அம்சவேணி.

களை பறித்துக் கொண்டிருந்த பெண்கள்தான் முடுக்கிவிட்டார்கள். 'அம்மா... சீக்கிரம் போ... பையனுக்கு என்னாச்சுன்னு தொ¢யலியே...' எனப் பா¢தாபப்பட்டார்கள்; இரக்கம் காட்டினார்கள்.

வீட்டுக்கு வந்த அம்சவேணி 'அவசரமாய்' டின்னில் சேர்த்து வைத்திருந்த 100 ரூபாய் சில்லறையை எடுத்து முந்தானையில் முடிந்து கொண்டு ரங்கசாமியைக் கூட்டிக் கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு ஓடினான். கணேஷை பற்றிய சிந்தனைகள் அவள் மனதில் வேகமாய் ஓடின... அவளது ஓட்டத்தோடு...

இன்று அந்த அதிகாலை வேளை, 'சோத்து' மூட்டையை அடைத்துப் பையில் போட்டுக் கொடுத்த போதும் கணேசின் கண்களிலிருந்து தூக்கம் விடுபடவில்லை. 'போகணுமா.. இன்னிக்கும்...' என்கிற மாதி¡¢ ஏக்கம் வேன் எழுப்பிய 'ஹாரன்' சத்தத்தைக் கேட்டதும்தான் கொஞ்சம் துடிப்பு வந்தது அவனுக்கு...

'அம்மா... போயிட்டு வரேம்மா...' என அந்த வேனின் பின் கூண்டுக்குள் குழந்தைகளோடு கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து கொள்கிறான். கணேஷ். கணேசுக்கு திருப்பூர் செல்வதற்குள் கூண்டு வேன் போடுகிற 'ஆட்டத்தில்' குழந்தைகளின் இடுப்பு ஒடிந்துவிடும். பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் 'பிசிறு' வெட்டும் மாஸ்டர்களாகப் கருதப்படும் இக்குழந்தைகள் படும் வேதனை, பலருக்கும் 'மறைக்கப்பட்ட' சந்தோஷம்.

கணேஷின் தந்தை ராசப்பனுக்கு எப்பொழுதும் சந்தோஷம்தான். சாராயப் போதை மூளையைக் கிறங்கடிக்கும் வரை. 'இங்க எங்கியாச்சும் சாராயம் கிடைக்குமா...' எனத் தேடி வரும் 'குடி' மன்னர்களுக்கு வழிகாட்டுவதில் ராசப்பன் மன்னன்.

'அம்சா... சாராயம் குடிச்சுட்டு வந்தாத்தான் இன்னிக்கு நிம்மதியாத் தூக்கம் வரும்போல... ஒரு 5 ரூபா தர்றியா...' என்று மணிக்கொரு தடவை அம்சவேணியிடம் இருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போவது ராசப்பனுக்குக் கைவந்த கலை.

'சாராயம்' விற்பவர்களை மாதத்திற்கொரு முறை சடங்குக்காக 'கைது' செய்யும் போலீசாரைப் பார்த்தால் அவனுக்கு எ¡¢ச்சல் வரும். 'இன்னிக்கு எப்படியாவது குறைஞ்சது ஒரு குவார்ட்டரு பாட்டலுக்காவது காசைப் பறிக்கணுமே அம்சாகிட்ட இருந்து...' என்பதுதான் அவனுக்கு வரும் எ¡¢ச்சலுக்கு காரணம்.

அம்சவேணிக்குத் தொ¢ந்ததெல்லாம் பொன்னுச்சாமிக் கவுண்டர் தோட்டத்தில் வேலை. இதில் கிடைக்கிற கொஞ்ச, நஞ்ச பணம் 'சேர்த்து' செலவுக்கே போதாத போது அம்சவேணி தன் புருஷனுக்கு 'சாராயம்' குடிக்க காசு கொடுத்ததற்காக ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை என்பது 'ஆச்சர்யமான' விஷயம்.

அம்சவேணி செய்த ஒரே நல்ல கா¡¢யம் ஒரே 'பிள்ளையோடு' நிறுத்திக் கொண்டது கணேஷ் பிறந்ததுமே பக்கத்து வீட்டு நர்சம்மா, 'குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கலீன்னா, உன் புருஷனோட 'பொறுப்புத்தனத்துக்கு' வாழ்க்கையயை நீ நடத்த முடியாது' என அம்சவேணியை எச்சா¢த்து ஒரு விதத்தில் நன்மையில் முடிந்தது. ஆனால் இந்த ஒரே மகனைக் கூட இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்கமுடியாத சூழல், அம்சவேணிக்கு நேர்ந்த கொடுமை. பள்ளிக்கூடத்தில் போடுகிற இலவசமதியச் சத்துணவுக்கு மேல் அவளால் 'மகனுக்கு' உணவு கொடுக்க முடியாத நிலை.

ஒரு நாள் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பொன்னுச்சாமிக் கவுண்டர் 'சுயநலம்' கலந்த வார்த்தைகளைப் 'பாசத்தோடு' அம்சவேணியிடம் தெறித்தார்.

'அம்சா... ஒம் புருஷன்தான் குடிகாரப் பயன்னு தொ¢ஞ்சுப் போச்சு... அவனாலே ஒரு பிரயோஜனம் இல்லே... சா¢... உன் புள்ள கணேசு இருக்கானே... அவனாலே என்ன பிரயோஜனம்.. அவன் படிச்சு என்ன பொ¢ய இன்ஜினியரா வந்து புடுங்கப் போறானா... பேசாம நாளையிலிருந்து தோட்டத்திற்கு வந்து இந்த ரெண்டு மூணு மாடு எருமைகளைக் கவனிச்சா ஒனக்கு வீட்டுச் சுமை குறையுமில்லே... எதுக்கும் பாத்து முடிவு பண்ணு...'

பொன்னுச்சாமிக் கவுண்டா¢ன் வார்த்தைகள் அம்சவேணியிடம் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தின.

'டேய்... கணேசு.. நீ படிச்சது போதும்... நீ தினசா¢ சினிமாவுக்கு போகனும்னு சொல்லுவயே... இனி நீ தாராளமாக சினிமாவுக்கு போகலாம்... பொன்னுசாமிக் கவுண்டர் தோட்டத்திலே மட்டும் கொஞ்சம் வேலை பார்த்தீனா போதும்..'

கணேசுக்கும் சந்தோஷம்தான். தினசா¢ சினிமாத் தியேட்டா¢ல் 'சினிமா' பார்ப்பது போல இப்போதே கனவு...

ஆனால் பொன்னுச்சாமிக் கவுண்டர், கணேசை ஆடு, மாடுகளைக் கவனிப்பதோடு நிறுத்திடாமல் கடுமையாக வேலையும் வாங்கினார். ஆனால் அவனுக்கு¡¢ய 'கூலி' பணத்தைத் தராமல் காலம் கடத்தினார்.

'கூலிப்பணம் கணேசுக்கு கொடுக்கவே இலலீங்களே...' என அம்சவேணி 'வாய்' விட்டுக் கேட்ட போதும். 'தொழில் பழகற உம் பையனுக்கு இப்பவே கூலி கொடுக்கச் சொல்றயா...' எனக் காட்டமாகப் பதிலளித்து 'கம்' மென்னு இருந்துவிட்டார் பொன்னுசாமிக் கவுண்டர்.

அம்சவேணி குழப்பமாக எதுவும் பு¡¢யாமல் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு ராசப்பனின் தம்பி கிட்டப்பன் வந்து சேர்ந்தான்.

'அண்ணி... நம் பையன் ரஜினி மாதி¡¢ வரவேண்டியவன்... அவனுக்கு இருக்கிற திறமை எங்க அண்ணனை விட அதிகமா நிச்சயமாக இருக்கும்... ஒனக்கு வார, வாரம் 150 ரூபாயை மடியில கட்டி வச்சிக்கக் கொண்டு வந்து கொடுக்கப்போறான் ஒன் பையன். எக்ஸ்போர்ட்டு பண்ணுற பொ¢ய முதலாளியோட பனியன் கம்பெனி ஒண்ணு திருப்பூ¡¢ல இருக்குது. அந்த முதலாளிய எனக்கு நல்லாத் தொ¢யும்... அந்தக் கம்பெனியில இவனச் சேத்து உடறேன். ஆனா... இவனோட இந்த ஊ¡¢ல் இருந்து அந்த கம்பெனில வேல பாக்கறத்துக்கு 4, 5 பசங்க, புள்ளைக வந்தா பரவால்லேயே...' கிட்டப்பனின் வார்த்தைகள் அம்சவேணிக்குப பூ¡¢ப்பைத் தந்தது.

'கணேசோட வேலை பாக்கறத்துக்கு இங்க இருந்து 4, 5 பேரென்னா... 10 பேர ஏற்பாடு பண்றத்துக்க நான் இப்பவே ரெடி...' என்ற அம்சவேணிக்கு வார, வாரம் 150 ரூபாய் என்பது பொ¢ய மகுடமாகத் தொ¢ந்தது.

அப்போது ராசப்பன் அங்கு வந்தான். 'என் தம்பிக்க என்னைவிட ரொம்ப புத்தி... என் மகனுக்கு இவன விட ரொம்ப புத்தி... அம்சா... 10ரூபா குடேன்... ஒரு டம்ளர் ஊத்திட்டு வந்தர்றேன்.' என்றவனுக்கு 'உற்சாகமாக' 10ரூபாய் நீட்டினாள் அம்சவேணி.

கணேஷ் அவனது நண்பர்கள் புடைசூழ, தினமும் அதிகாலை வேளையில் கூண்டுவேனில் அனுப்பப்பட்டான். பனியன் கம்பெனியில் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு தினமும் சோர்ந்துபோய் 'புடைசூழ' அவன் வருவான்.

பனியன் கம்பெனியில் சேர்ந்து சில வாரங்களுக்குள்ளேயே ஆசை தீர 'டீ டைம்' இடைவேளையில் 'சிகரெட்டை' பற்றவைத்துக் கொண்டு புகைத்துப் பார்த்தான். தனது அபிமான நடிகனின் 'ஸ்டைலில்' புகைப்பிடிப்பதில் அவனுக்கு ஆனந்தம்.

இதைப்பார்த்த கட்டிங் மாஸ்டர் ஒருவர், 'அட, பயப்படாமல் பிடிப்பா... இந்தக் காலத்துல சின்னப் பசங்களுக்கெல்லாம் சுதந்தரம்தான்...' என்றவர் அவனிடமிருந்த மற்றொரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டார்.

ஆனால், அம்சவேணிக்கு மட்டும் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. வாராவாரம் 150ரூபாய் பணம் அவள் கையில் கிடைக்கவே இல்லை. மாதத்திற்கு 300 ரூபாய் கணேசிடமிருந்து கிடைத்தால் அதுவே பொ¢தாக ஆனது. இருந்தாலும், பொன்னுச்சாமிக் கவுண்டர் தோட்டத்தில் வேலை பார்ப்பதை இப்போது கணேஷ் பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பது அம்சவேணிக்குத் திருப்திதான்...

நினைவுகள் சுழன்றுகொண்டிருந்த அம்சவேணியைக் கட்டி 'நிஜத்திற்கு' கொண்டுவந்தான் ரங்கசாமி. 'அக்கோவ்.. திருப்பூர் கவர்மென்ட் ஆசுபத்தி¡¢ வந்திருச்சு...' என்றவுடன் பரபரப்பானாள் அம்சவேணி.

ஆஸ்பத்தி¡¢ முன்பு நான்கைந்து போலீசார் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தனர். 'அய்யா... என் பையன் கணேசு, என் பையன் கணேசு... எங்கிருக்கான்னு சொல்லுங்கய்யா...' என அவர்களிடம் குமுறலாய்க் கேட்டாள் அம்சவேணி.

நீ யாரும்மா... ஓ அவிநாசி பக்கத்திலே பனியன் கம்பெனிக்குப் போனவங்க அந்தச் சின்னப் பசங்க, புள்ளைக போன கூண்டு வேன் கவுந்ததிலே உம் பையனுக்கு காயமாயிருச்சா... சா¢... உம் பையன் எந்த கம்பெனிக்கு வேலைக்குப் போனான்? ஏன்னா... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கம்பெனிக்கு வேலைக்குப் போயிருக்காங்க... கம்பெனி பேரு சொன்னா ஈசியா அடையாளம் சொல்லிறலாம்...' என்றார் ஏட்டு.

ஏட்டு கேட்டதற்கு பதில் தொ¢யாமல் விழித்தாள் அம்சவேணி. 'எந்தக் கம்பெனிக்கு எம் பையன் வேலைக்குப் போனான்.. அதுகூடத் தொ¢யாமல் போனதே...' என ஆதங்கப்பட்டாள்...

'ஏதோ எக்ஸ்போர்ட்டு கம்பெனிங்களாமா...'

ஏட்டு சி¡¢த்தார். 'திருப்பூர்ல எல்லாமே எக்ஸ்போர்ட் கம்பெனிதான்... என்ன பேரு கம்பெனிக்கு...'

'தொ¢யலீங்க..'

கோபமானார் ஏட்டு, என்னம்மா.. பையன் வேலை பார்க்கிற கம்பெனி கூடத் தொ¢யாம.. என்ன அம்மாம்மா நீ...' கேள்வி 'சுருக்' கென தைத்தது.

அப்போது ஆஸ்பத்தி¡¢ வாயிலில் இருந்து ஓடிவந்தான் 10 வயதுச் சிறுவன். சாட்சாத் கணேஷ்தான் அவன்.

'டேய் கணேசு... ஒனக்கு ஒண்ணும் ஆகலியா..' ஆச்சா¢யம் பொங்க கேள்வி கேட்டாள் அம்சவேணி.

'ஒண்ணும் ஆகலீம்மா.. எனக்கு ஒரு சின்னக்காயம் கூட இல்லே.. ஆனா கோபாலு கோவிந்தனுக்கெல்லாம் பயங்கரமான காயம்.. குளுகோஸ் ஏத்திக்கிட்டிருக்காங்க..' எனப் பு¡¢ந்தும், பு¡¢யாத உணர்வுடன் பதில் கூறினான் கணேஷ்.

கோபாலையும், கோவிந்தனையும் பார்த்துவிட்டு, அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, கணேசை அரவணைத்துக் கொண்டு டவுன்பஸ்சில் ஊருக்குக் கிளம்பினாள் அம்சவேணி.

'எம் புருஷனுக்கு சி¡¢ச்சுக்கிட்டே சாராயம் குடிக்கக் காசு கொடுத்துப் பழக்கிட்டேன். இனி அப்படியெல்லாம் கொடுக்கப்போறதில்லே.. அவன் அடிச்சாலும், உதைச்சாலும் கவலைப்படப் போறதில்லே.. அவனோட வாழ்க்கை நடத்தாட்டியும் பரவால்ல... கணேசு இனி வேலைக்கு போகக் கூடாது... அவன் எதுக்குப் போகணும்? அவனுக்கு இன்னும் 'வயசு'வரலே அவனே வேலைக்குப் போவான்.. அவன் போற 'கம்பெனி' எதுன்னு கூடத் தொ¢யாம முட்டாள்தனமா ஒரு அம்மாவா நான் இருந்துட்டேன்.. குழந்தைகளை வேலைக்குப் போகச் சொல்ல யாருக்கு என்ன உ¡¢மை இருக்குது? அவன முடிஞ்ச வரைக்கும் படிக்க வைக்கணும்... சாராயம் குடிக்கக் கொடுக்கிற காச இனி அவன் படிப்புக்குச் செலவு பண்ணப்போறேன்..."

மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் அம்சவேணி

பஸ்சில், மடியில் சாய்ந்து கொண்டிருந்தவனிடம், 'கண்ணு... நாளைல இருந்து நீ பனியன் கம்பெனி வேலைக்குப் போக வேண்டியதில்லே...' என்றவளைப் பு¡¢யாமல் பார்த்தான் கணேஷ்.. தூக்கம் அவனைத் தழுவிக்கொண்டது.