menu






 இலக்கியம >> கதை >> நிகழ்காலம்


நிகழ்காலம்

சங்கர்குமார்

நன்றி : கணையாழி மாத இதழ்


‘ஹலோ.. குமாரா...? இன்னைக்கு ஈவ்னிங் என் ரூமுக்கு வந்திடு... ஆவடி போகலாம்...’

அவ்வளவுதான் செய்தி. எதிர்முனையில் போனை வைத்துவிட்டார் துரையண்ணன். போனில் மட்டுமல்ல, நோขலும் ரத்தினச் சுருக்கமாகப் பேசுவது அவரது வழக்கம்.

சினிமாவில் பதினெட்டு ஆண்டுகளாக அஸோஸியேட் டைரக்டராக இருப்பதால் துரைசாமியை என் போன்ற உதவி இயக்குனர்கள் பாசத்துடனும், மாขயாதையுடனும் ‘அண்ணன்’ என்கிற அடைமொழி சேர்த்து ‘துரையண்ணன்’ என்றே அழைப்போம்.

நான் சினிமாவில் உதவி இயக்குனராக நுழைந்த புதிதில் எனக்கு ‘க்ளாப்’ அடிக்க, எடிட்டிங் กขப்போர்ட் எழுத, கன்டினியூடி பார்க்கக் கற்றுக்கொடுத்தது எல்லாமே துரையண்ணன்தான். அவர் வேலை பார்க்காத இயக்குனர்களே கிடையாது என்று சொல்லும்படி இண்டஸ்ட்กขயில் கிட்டத்தட்ட முன்னணி இயக்குனர்கள் அனைவாขடமும் வேலைபார்த்துவிட்டார்!

ஏ.வி.எம்.மிலோ, பிராசத்திலோ, லீமொขடியன் ஹோட்டலிலோ, பிலிம் சேம்பர் தியேட்டாขலோ சினிமா பூஜை எங்கு நடந்தாலும் துரையண்ணன் அங்கே இருப்பார். அந்தப் படத்தின் இயக்குனரோ.. கேமிராமேனோ அவாขன் தோளில் கை போட்டபடி நிற்க, அவர்களை துரையண்ணன் ‘வாடா.. போடா!’ என ஒருமையில் அழைத்து.. சில அறிவுரைகள் வழங்கிக்கொண்டிருப்பார்.

அவருக்குப் பின்னால் சினிமாவிற்கு வந்தவர்களில் எத்தனையோ பேர் இயக்குனராக.. கேமிராமேனாக.. கதாசிกขயராக.. எடிட்டராக வெளிச்சத்திற்கு வந்துவிட்டார்கள். இதற்காக அவர்கள் மீது துரையண்ணன் பொறாமைப்பட மாட்டார்.

‘அததுக்கு நேரம் வரணும்டா.. அவன் நல்ல நேரம் படம் பண்றான்.. எனக்கு ஏழரை.. அதான்.. படம் பண்ண முடியலை..’ என்று சமாதானம் சொல்வார்.

நான் சினிமாவில் சேர்ந்து ஐந்து வருடம்தான் ஆகிறது. நானும்கூட ஒரு கதையைத் தயார் செய்துகொண்டு பிரபல ஹீரோக்களையும், சில தயாกขப்பாளர்களையும் துரத்திக்கொண்டிருக்கிறேன்.

‘இவனுக்கு என்ன தொขயும்? படம் பண்றேன்னு, கதை சொல்ல ทபைலைத் தூக்கிகிட்டு வந்துட்டான்..? அவனை வெளியே போகச் சொல்லுங்க..’ என்று பல இடங்களில் விரட்டினார்கள்.

நான் பணிபுกขந்த இயக்குனர் கூட, எப்படியோ நான் கதை சொல்லப்போகும் செய்தி அறிந்து, அந்த பிரபல தயாกขப்பாளாขடம், ‘அவனுக்கு க்ளாப்பே ஒழுங்கா அடிக்கத் தொขயாது.. இந்த லட்சணத்தில் கதை சொல்ல வந்துட்டானா..? அவனையெல்லாம் நம்பி படம் கொடுத்தீங்க.. அவ்ளோதான். க்ளோஸ்!’ என்று போனிலேயே வத்தி வைத்தார்.

ஆனால், துரையண்ணன்தான் என்னை என்கரேஜ் செய்தார்.

‘பார்க்கிறதுக்கு ஒல்லிப்பிச்சானா தொขயறான்..ம்.. உருவத்த வெச்சு யாரையும் எடைபோடக் கூடாது. நாளைக்கு இவனே ஒரு பாலா, செல்வராகவன், எஸ்.கே. சூர்யா, தரணி மாதிกข வரலாம்.. யார் கண்டது?’ என்று என்னைப் பற்றி அபிப்ராயம் சொல்லி, உற்சாகப்படுத்தினார்.

உடனே நான், ‘அண்ணே.. நீங்க எப்போ படம் பண்ணப் போறீங்க..?’ என்று பேச்சை மாற்றினேன்.

‘புரொட்யூசர் ரெடி, ஹீரோ கால்ஷீட்டுக்கு தான் வெயிட்டிங், விக்ரம், சூர்யா, இல்லேன்னா சிம்புன்னு முடிவு பண்ணியிருக்கேன், விக்ரம் ‘மஜா’வுல பிசி, சூர்யா ‘கஜினிக்காக’ ทபாกขன் போயிருக்கார். சிம்பு டைரக்டராகிட்டார்..’

‘அண்ணே, பொขய ஹீரோக்கள்லாம், நம்ம மாதிกข புது டைரக்டர்களுக்கு ‘டேட்’ தருவாங்களா..?’

‘இதே கேள்வியைத்தான் புரொட்யூசர் கேட்டாரு..ம்.. நான் சினிமாவுக்கு வரும்போது ‘சிம்பு’ பிறக்கவேயில்லை.. இன்னைக்கு அவர் பொขய ஹீரோ, அவர் கால்ஷீட் கேட்டு நான் அலையுறேன், நம்ம நிலைமையைப் பார்த்தியா, குமாரு?’ என்று துரையண்ணன் புலம்பினார்.
 

...பின்னே

Top

முன்னே...