சபலம்
- சங்கர்குமார்
'அனிதாவைக் கொன்று விடலாம்' தீவிர யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு
வந்தான் முகுந்த். அவனுக்கு வேறு வழி தொ¢யவில்லை. இதுநாள் வரை அவன்
நினைத்ததை அடைந்திருக்கிறான். எதிலும் தோல்வி கண்டதில்லை!
வாளிப்பான உடல் அழகிலும், அனிதாவின் தேன் பேச்சிலும் மயங்கிப் போய்,
அவள் மீது தீராத மோகம் கொண்டான் முகுந்த்.
ஒருநாள் தயங்கித் தயங்கி தன் விருப்பத்தை அவளிடம் சொன்ன போது, அவள்
எ¡¢மலையாய் வெடித்தாள்.
"நீங்க கல்யாணமானவர்.. உங்களுக்கு மனைவி, குழந்தைகள்னு குடும்பம்
இருக்கு.. நீங்க எம்மேல சபலப்படறது தப்பு"
தொடர்ந்து தன் ஆசைக்கு இணங்க முகுந்த் அவளை வற்புறுத்தவே அவள்
கோபத்தில் கர்ஜித்தாள்.
"த்தூ.. நீயெல்லாம் ஒரு மனுஷனா? இதுதான் லாஸ்ட் வார்னிங்.. மறுபடி
எங்கிட்டே இப்படி அநாகா¢கமா நடந்துக்கிட்டீங்கன்னா, உங்க நடத்தையைப்
பற்றி ஊர் உலகத்துக்கெல்லாம் சொல்லி நாறடிச்சிடுவேன் ஜாக்கிரதை!"
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான். முகுந்த் அவனுக்கு அவமானமாய்ப்
போயிற்று!
உடனே, அணிதாவைக் கொல்லத் தீர்மானித்தான். விஷயம் கேள்விப்பட்டு,
முகுந்த்தின் மனைவி சரளா சாமியாடினாள்.
"உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? இப்பதான் உங்க 'சபலம்' சீ¡¢யல்
சூப்பர்ஹிட்டாகி டி.ஆர்.பி. ரேட்டிங் ஏறியிருக்கு... அதுக்குக் காரணம்
அனிதா கேரக்டர்.. அவளைப் போய் சாகடிக்கணும்ங்கிறீங்களே! எதுக்காக?"
காரணம் சொல்ல முடியாமல் தன் திட்டத்தைக் கைவிட்டான் சீ¡¢யல் டைரக்டர்
முகுந்த்.