'மூன்று பாத்திரம் மட்டும்தான். ஒன்று கடவுள், மற்ற ஒன்று சவரக்காரன்.
மூன்றாவது நபர் காத்திருப்பவன்... நாடகம் கடவுளுக்கும் சவரம்
செய்பவனுக்கும் நடக்கும் உரையாடல். உங்களுக்கே தொ¢யும் தானே...
முகத்தில் மயிர் இருப்பது எந்தக் கடவுளுக்குத் தான் பிடிக்கும்
சொல்லுங்கள். மழிக்கப்பட்ட கடவுள் முகம்தான் எல்லாருக்கும் வேண்டும்...
இங்கே கூட அப்படித்தான். உங்களுக்குத் தொ¢யும்தான்'
அவர்கள் அவளிடம் உரக்கப் பேசினார்கள்.
நாங்கள் இதை நாடகம் போடக் கேட்கவில்லை... விசாரணைக்காகக் கேட்கிறோம்..
இதன் பிரதிகள் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்... நிச்சயம் உனக்குத்
தண்டனை கிடைக்கும்.
இதை நானாக எழுதவில்லை. சவரம் செய்யும் இடத்தில் பேசிக்கொண்டவை. இவை
நாவிதனின் வசனங்கள் நான் அவற்றைக் குறித்து வந்தேன்... அவ்வளவு தான்.
அவர்கள் திரும்ப ஒரு முறை பிரதியைச் சா¢பார்த்துக் கொண்டார்கள். பின்
அவர்கள் கிளம்பிப் போனார்கள். நள்ளிரவாதலால் தெருவில் ஜன
நடமாட்டமில்லை. வெறிச்சோடிய தெரு. காவலர்களில் ஒருவன் பேசினான்.
"அந்த ஆளை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்."
"நமக்கு சம்பந்தமில்லாதது"
"நாளையும் நாம் சதுக்கத்திற்கு வரவேண்டுமா?"
"தினமும் நம் வேலை அதுதான்..."
ஞாயிற்றுக் கிழமையன்று ஜானின் நாடகத்தில் நூறு பேர்கள் நடித்தார்கள்.
இடைவிடாத சப்தம், கூக்குரல், நிறைய பெண்கள், பெண் பாத்திரங்களில் சில
ஜானிடம் வந்து நின்று ஏங்கி கேட்டன.
காதல் நாடகம் எழுதேன் ஜான்.
எனக்குத் தொ¢யாதது அது.
ஜான் காதல் இல்லாத நாடகம் வேண்டாம்... இளம் உள்ளங்களை வதைக்கும் காதல்
நாடகம் போடு ஜான்
மிகச் சிறந்த நடிகையாக இருக்கிறாய் நீ...
அந்தப் பெண் வெட்கப்பட்டாள் ஜானிடம் ஒருவயதான நபர் வந்து நின்று
பேசினார்.
ஜான் என் கண்ணே... நான்தான் அப்பா...
யாருடைய அப்பா...
நாடகத்தில் வரும் அப்பா... நான். நீ நாடகங்களே பார்த்ததில்லையா..
இருக்கலாம்.
அப்பா பாத்திரம் ஜானை விட்டு விலகிப்போனதும் ஜான் காகிதங்களைப்
புரட்டினான். கோழிமயிர்சொருகி, வைக்கோல் தொப்பி வைத்த பாத்திரம் ஒன்று
மஞ்சள் சட்டையிட்டு கறுப்புப் பேண்ட்டை கால்வரை மடித்துவிட்டு,
பழையகால பூட்ஸ்போட்டு, கிடாரோடு வந்து நின்று சி¡¢த்தது. அவன் கிடா¡¢லிருந்து
சப்தம் விநோதமாக வந்தது. அவன் ஜானிடம் மண்டியிட்டுக்கேட்டான். ஜான்
என்பி¡¢ய நண்பனே, நான் தான் சாகசக்காரன். கோமாளி, என் பாத்திரம் என்ன
சொல் ஜான். அவனைப் பார்த்ததும் ஜானுக்குச் சி¡¢ப்பு வந்தது. உனக்கு
எதற்குப் பாத்திரம். உன் சாகஸங்களை நீ காட்டுவது தானே உன் இயல்பு.
உன்னை நான் பழைய நாடகங்களில் பார்த்திருக்கிறேனே என்றான். கிடா¡¢லிருந்து
இனிய சப்தம் வர அவன் பேசினான். என் தாத்தாவின் தாத்தாவின் தாத்தா
கப்பில் நாடகம் நடித்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் அவர் தான்
நடித்தார். அவா¢டம் ஹாம்லெட்டின் கத்தி இருந்தது. ஒத்தல்லோவின்
கர்சீப் இருக்கிறது. நீண்ட கால் கொண்ட மதுக் கோப்பைகள் இருந்தன.
ஒத்தல்லோவின் கர்சீப்பை தான் என் தாத்தா தலையில் கட்டிக்கொண்டு
வருவார் ஒத்தல்லோ என்று கறுப்பனின் இசைப்பாடல் இதோ. படுவேகமாக
வாசித்தான். கூட்டம் சி¡¢த்தது. அவன் தன் வைக்கோல் தொப்பியை எடுத்துச்
சுழற்றி வீசினான்.
ஜானின் பேனா பலவாறாக முயன்று புதிய நாடகம் எழுதப்பார்த்தது. யாருடைய
கதையை நாடகமாக்குவது என யோசித்தான். சிறையில் இறந்து போன நாடகக்
காரனைப்பற்றிய நாடகத்தை எழுதலாம் என நினத்தான். அவனுக்கு நாடகத்தில்
கோரஸ்பாடுவது பிடித்திருந்தது. ஜானுக்கு கோரஸ் பாடல்கள்
பிடித்திருந்தன. கோரஸ்காரர்கள் சுழன்று சுழன்று பாடும் நாடகம் எழுத
விரும்பினான். சதுக்கத்தில் வெயில் மிஞ்சியிருந்தது. இன்றைக்கு நிறைய
பாத்திரங்கள் நடிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். கடற்கரையில்
உலவும் யானை என ஒருவன் அவனாக நினைத்துக் கொண்டு கைகளை உயரே தூக்கி
பிளிறிக்காட்டி நடித்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வேடிக்கைப்
பார்க்க குழந்தைகள் நிறைய வந்திருந்தன. அவை ஜான், ஜான் எனக்
கூச்சலிட்டன. சிறு கண்ணாடி கொண்டு ஜான் மீது வெயிலைப் பாய்ச்சி
கண்களைக் கூச வைத்தன.
ஜான் சதுக்கமெங்கும் அலைந்தான். அவ்வளவு பொ¢ய நகரத்தில் மக்கள்
கூட்டம் நிறையவேயிருந்தது. எல்லாவற்றையும் ஆட்கள் விசா¡¢த்தார்கள்.
ஜானிடம் அப்பா பாத்திரம் வந்தது.
ஜான்... ஆசிர்வதிக்கப்பட்ட மகனே... என்னை என்ன செய்யப் போகிறது...
வயதான அப்பாவிற்கு தனிமை தானா.
நீங்கள் பேசுவது எனக்குப் பு¡¢யவில்லை..
நீ நாடகம் எழுதுபவன், ஜான். நான் பாத்திரம்.... பலா¢ன் நாடகத்திலும்
வந்த பாத்திரம்...
நீங்கள் மட்டுமா...
நான் மட்டுமில்லை. அம்மா, அக்கா, காதலி, காதலன், நீதிபதி, அச்சுகா;
பாலி எல்லாம் பாத்திரங்கள் என் ஜானே... நான்லியர்... எனக்கு
மூன்றுபெண்கள் உண்டு.
நான் என்ன செய்ய வேண்டும்..
அப்பாவை எதிர்க்கும் மகன் நாடகம் எழுதாதே ஜான், அப்பா வயதானவர்,
நோயாளி சிடுசிடுப்பானவர். இப்படிவசனம் எழுதாதே ஜான்... அப்பா நல்லவர்,
சி¡¢ப்பாளி, ஜான்.
போய்விடுங்கள் இப்போது நான் நாடகம் எழுத வில்லை.
ஜான் என்னை மறக்காதே.. ஜான்.. ஜான்.. பலகுரல்கள் கேட்டன. ஜான்
மேஜைமீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் பக்கம்
திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் சிலர் சி¡¢த்தார்கள். ஜான்
சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். நாயை வைத்துக் கொண்டு உலவும்
ஒருவயதானவன் கூட இன்றைய நாடகத்தில் இருந்தான். ஜானிடம் ஒருவன்
கேட்டான்.
இந்த நாடகத்தின் பெயரென்ன..
கூட்டம்
பேப்பர் வாசிக்கும் ஜான் பக்கம் திரும்பிக் கேட்டான்.
எங்கே நடக்கிறது கூட்டம். யார் பேசுகிறார்கள்?
தொ¢யவில்லை.
மாலைப்பேப்பா¢ல் செய்திவரவில்லையே... இரண்டு காணாமல் போன பையன்கள்
படம்தான் வைத்திருக்கிறது.
ஜான் காவலர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். உடன் வேறு ஒரு ஆள்
வேறு வந்தான். அவன் உயர மானவனாக இருந்தான். அவர்கள்
சதுக்கத்தின்பக்கம் வந்து நின்று கேட்டார்கள்.
ஜான் உன் நாடகத்தை நிறுத்து.
நான் எந்த நாடகமும் நடத்தவில்லை.
உன் கூட்டத்தை நிறுத்து.
அது என் வேலையில்லை... உங்களுடையது.
காவலர்கள் உரக்கக்கத்தினார்கள். சதுக்கம் விரைவில் காலியானது. உயரமான
நபா¢ன் கையில் நாடகப்பிரதி இருப்பதை ஜான் பார்த்தான். உயரமான நபர்
மீசை மழிக்கப்பட்டு பொ¢யகண்களோடு இருந்தார். அவர் ஜானைப் பார்த்துக்
கேட்டார்.
இது உன்னுடைய நாடகம்தானே.
இல்லை .. குறிப்பு...
சவரக்குறிப்பு... இதை நிகழ்த்திக்காட்டு... எதுவுமே பு¡¢யவில்லை
வாசிக்க.
என்னிடம் நடிகர்கள் இல்லை.
எங்கே போனார்கள்.
நான் நடிகர்களைத் தேடுவதுமில்லை... அவர்கள் என்னுடன் நடிப்பதுமில்லை.
இப்போது என்ன செய்வது.
நீங்கள் நினைத்தால் நாம் மூவரும் நடிக்கலாம்... மூன்று பாத்திரங்கள்...
நீங்கள் கடவுள் நான் நாவிதன்.. மூன்றாம் ஆள் காத்திருப்பவன்.
சதுக்கத்தில் பலர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஐ¡ன் தன்னுடைய
சட்டையை கழட்டிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்தான். அவன் எதி¡¢ல்
இரண்டு கல்லை தூக்கிப்போட்டு அதிகா¡¢யை உட்காரச்சொன்னான். மற்றொரு ஆள்
தள்ளி நின்றான்.
ஐ¡ன் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான்.
அதிகா¡¢யின் சட்டையும் கழட்டப்பட்டது. ஜான் அவருடைய முகத்தைக் கைகளால்
தடவிவிட்டுக் கேட்டான்.
கடவுளே உங்கள் முகம்தான் எவ்வளவு வழவழப்பானது... நீங்கள்தானே
எல்லாவற்றிற்கும் அதிகா¡¢.. ஜானின் நாடகத்தில் கடவுளுக்கு வசனம் இல்லை.
கடவுளின் மொழி பற்றி யோசிக்க யோசிக்க யோசிக்க ஜானுக்குக் குழப்பமே
மிஞ்சியது. அதனால் கடவுள் தலையை மட்டும் ஆட்டினார்.
காத்திருப்பவன்தான் அதிகம் பேசினான். காத்திருப்பவன் ஒரு கைதியைப்போல,
குடும்பஸ்தனைப்போல கல்லூ¡¢ மாணவனைப்போல பல குரலிலும் பேசினான். ஜானின்
கத்தி கடவுளின் கன்னங்களில் உரசியது ஜான் இப்போது நாவிதனாகவே மாறிப்
போயிருந்தான். அவன் குரல் உயர்ந்து கேட்டது.
நீசத்தனமானவனே... உன் பெயர் கடவுளா... முட்டாள்.. சவரக்கத்தியின்
முனையால் எந்த சா¢த்திரத்தையும் மாற்ற முடியும் தொ¢யுமா.. உன் பெயர்
என்ன? கர்னலா... சக்கரவர்த்தியா, எண்ணெய் வயலுக்கு சொந்தக் காரனா,
உளவாளியா யாராயிருந்தாலும் சவரக்கத்தியின் நுனியில் உன் தலை எப்போதும்
இருக்கிறது தொ¢யுமா...
காத்திருப்பவன் அவசரப்படுத்தினான்.
இன்னுமா சவரம் செய்கிறாய். நேரமாகிறது... சினிமா போகவேண்டும்.
காதலியைச் சந்திக்கவேண்டும்.. தப்பிக்கவேண்டும்.. வேகம்..
கடவுளகாக இருந்த அதிகா¡¢யின் முகம் வெளுத்துக் கொண்டு வந்தது.
சதுக்கத்தில் ஆட்கள் குறைந்து கொண்டிருந்தார்கள். சோடியம் விளக்கு
வெளிச்சத்தில் ஜானின் கண்கள் மின்னின. அதில் இனம் பு¡¢யாத குரூரம்
தோன்றுவதைக் கண்ட அதிகா¡¢ சப்தமிட்டான். ஜான்... நாடகம் போதும்..
நிறுத்து
கடவுளுக்குப் பேச உ¡¢மையில்லை.. இன்னமும் சவரம் பாக்கியிருக்கிறது.
காத்திருப்பவன் ஜானின் முதுகில் அறைந்து பேசினான்.
கிழப்பிணமே.. அவசரமாக சிரைத்துவிடு.. அவசரம் ஜானின் கத்தி அதிகா¡¢யின்
தொண்டையின் கீழே போனது. ஜானின் கண்களை அவர் பார்த்தபடியிருந்தார்.
ஜான் சரால் என ஒரு இழு இழுத்தான். ரத்தம் பெருகியது காவலர்கள் தன்னிலை
பெற்றார்கள்.
ஐ¡ன்.. டேய்... என்ன செய்கிறாய்.
அதிகா¡¢ ஜானை எட்டி உதைத்தார். ஜான் தள்ளிப் போய் விழுந்தான். அவர்கள்
ஜானை பிடித்துக் கொண்டார்கள். அதிகா¡¢ கர்சீப்பால் கழுத்தை
ஒத்திக்கொண்டார். ஜான் முகத்தை உலுக்கிக் கேட்டார். ஜான் தலையை
திருப்பாது சொன்னான்.
நாடகம் அது.
என்ன நாடகம்... மடையனே.. உன்விரல் நகங்களை பிடுங்கினால் தான் உனக்கு
சொரனை வரும்.
அவர்கள் ஜானைத் தள்ளிக் கொண்டுபோனார்கள். ஜானின் மேஜை, பேப்பர்
அப்படியே கிடந்தது. ஜான் தெருவில் நடக்கும் போது நாடகத்தில் நடிப்பது
போலவே அவனுக்குத்தோன்றியது உடன்வரும் மூன்று பாத்திரங்களுடன் தான்
போவது போலவேயிருந்தது. ஒருவன் கையில் நாடகப்பிரதியிருந்தது. ஜான்
முடிவடையாத தன் நாடகத்தை நினைத்துக்கொண்டே போனான். ரத்தம் வழிந்த
இடத்தில் எ¡¢ந்தது அதிகா¡¢க்கு ஜான் நாடகப் பாத்திரம் போலவே மெதுவாக
உடன் நடந்து போனான்.
(எஸ். ராமகிருஷ்ணன்)