புதியதாய்...
பெரணமல்லூர் சேகரன்
ஓட்டல் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. எந்த மேசையும் காலி
இல்லை. தொழிற்சாலை இயந்திரத்தைப் போல இடைவெளியின்றி முதலாளி பணத்தை வாங்கி
கல்லாவில் போடுவதும் சீட்டுக்களை நீளமாய் உயர்ந்து நிற்கும் கம்பியில்
குத்துவதுமாக இருந்தார். பையன்களே சீட்டுக்களைக் கொண்டுவந்தால் அதற்கென ஜனங்கள்
டிப்ஸ் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு இடங்கொடுக்கக் கூடாதென கறாராக
இருந்தார். ஒருமுறை வந்து போனவர்கள் மீண்டும் இதே ஓட்டலுக்கு வர அதுவும் ஒரு
காரணம். கடுகு போவது தொ¢யாது. பூசணிக்காய் போவதுதானே தொ¢யும். டிப்ஸ்க்குப்
பயந்து வேறு ஓட்டலுக்குச் செல்லாதவர்கள் இந்த ஓட்டலில் பண்டங்களின் விலை அதிகம்
என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.
ராமு ஒரே நேரத்தில் மூன்று மேசைகளை கவனித்தான். சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தபோது
உட்கார்ந்திருந்த இரண்டு பேர்களின் மீது கவனம் திரும்பியது. வெள்ளை பேண்ட்,
நீலச்சட்டை, வெள்ளை டை என யூனிபார்ம் சகிதமாய் ஒரு பையன். ஏறக்குறைய இவன் வயதை
ஒத்தவன். அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்த
இன்னொருவர் அனேகமாக அவனுடைய அப்பாவாக இருக்க வேண்டும். முகசாடை அச்சில்
வார்த்தாற்போல் ஒத்திருந்தது.
மலரும் நினைவுகள் அவனோடு சேர்ந்து இயங்கியது.
ஒரே செட்தான் யூனிபார்ம்... ஆனால் அது நீல டிரெளசர், வெள்ளைச்சட்டை, நீலடை தினசா¢
மாலை வீட்டுக்கு வந்ததும் அவன் அம்மா துவைத்துக் காயம் போட்டுவிடுவாள். மறுநாள்
காலை கையிலேயே மடித்துக் தேய்த்துக் பொட்டி போட்டுத் தருவாள். அதைப்போட்டுக்
கொண்டு பள்ளிக்குப் பறந்து விடுவான் ராமு.
அற்புதமான காலமல்லவா அது... இரண்டாண்டு இடைவெளியில் என்னென்னவெல்லாமோ அல்லவா
நடந்துவிட்டது. கடுமையான உழைப்பாளி அப்பா.. அவரது சின்ன வயசிலிருந்தே பழகிப்போன
பீடி சுற்றும் தொழிலில் அவருக்கு நிகர் அவரே.. அதே நேரத்தில் உ¡¢மைகளுக்காக
முன்னனியில் நின்று போராடுபவராக இருப்பார். பீடியும் கையுமாய் பி¡¢யாமலிருந்தது
போல் பின்னாளில் ஆஸ்த்மாவும் அவரோடு சட்டைபோல் ஒட்டிக்கொண்டது. பெரும்பாலான
பீடித் தொழிலாளர்கள் அப்படித்தானிருந்தார்கள். அவன் அம்மாவுக்கு எப்போதவாது கூலி
வேலை கிடைக்கும் நடவுகளை பறிப்பது என இந்த மாதி¡¢ வேலைகள்தான் அவனால் முடியும்.
அறுவடை வேலை அவளால் முடியாது அறுத்துவிடுவாள். ஆனால் கட்டெடுத்துக் களத்து
மேட்டுக்குச் சுமந்து வருவது என்பது அவளால் முடியாதது.
லிட்டில் பிளவர் மெட்¡¢குலேசன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் அது
நடந்தது. ஒரு மழை இரவில் ஆஸ்த்மா அதிகமாகி பீடி சுற்றிக் கொண்டிருக்கும்போது
ராமுவின் அப்பா அவனை விட்டுப் பி¡¢ந்துவிட்டார். அதுமுதல் வீடே சூன்யமாய்
இருந்தது. ராமுவும் அவனது அம்மாவும் சதா அழுதபடியே இருந்தார்கள். கா¡¢யம் முடிந்த
கையோடு ஆறுமுக செட்டியார் வீட்டுக்கு வந்தார். அந்த ஊ¡¢ன் மிகப் பொ¢ய ஓட்டல்
முதலாளியின் கணக்குபிள்ளை செட்டியார் ஆறுமுகம்.
"அன்னம்... உங்க வீட்டுக்காரர் வாங்கிய கடன் அசலும் வட்டியும் சேர்ந்து
பத்தாயிரம் ரூபாய் ஆச்சு... ஏதாச்சும் வழி பண்ணு... முதலாளி கண்டிப்பா சொல்லிட்டு
வரச்சொன்னார்"
இடிமேல் இடியாய் இறங்கியதும் நிலைகுலைந்து போனாள் ராமுவின் அம்மா.
"அண்ணாச்சி... எங்கிட்டே இப்போ என்ன சொத்து இருக்கு... இந்த வீட்டையும் என்
பிள்ளையையும் தவிர... எப்படியாவது நான் உழைச்சி சம்பாதிச்சி கடனை அடச்சிடறேன்"
"இப்படியெல்லாம் சொன்னா அவர் விடமாட்டாரும்மா... ஒண்ணு... பணம் தரணும்...
ரெண்டு... வீட்டைக் கிரயயோ அடமானமோ பண்ணிடனும்.. மூணு... உங்க பிள்ளைய முதலாளியோட
ஒட்டல்ல வேலைக்கு விட்டருணும்... இது மூணுத்துல ஏதாச்சும் பண்ணிணத்தான் விடுவாரு"
சொல்லிவிட்டு விருட்டென்று நடையைக் கட்டினார் செட்டியார். செட்டியார்
சொல்லிவிட்டுப் போனதிலிருந்து தூக்கமில்லை அன்னத்திற்கு... தன்னை மறந்து தூங்கும்
ராமுவைத் தட்டிக் கொடுப்பாள்... தூங்கிக் கொண்டிருந்தாலும் தன் திருப்திக்கு
எதையாவது செய்வாள். தலையை வருடி கண்ணீர் சிந்துவாள். தன் புருசன் தொழிலாளர்
கூட்டத்தில் எடுத்த போட்டோ ஒன்று மட்டும் இருந்தது. அதையே பார்த்துக்
கொண்டிருப்பாள். இப்படியாகத் தூங்காத இரவுகள் அவளது துக்கத்தைக் கூட்டின. அரசு
உத்யோகத்தில் இருந்திருந்தால் குடும்ப பென்சன், கிராஜுடி அது இது என்று
கிடைக்கும் ஆனால் தம் புருசன் வேலை பார்த்த பீடிக் கம்பெனி முதலாளியோ சவத்திற்கு
மாலைபோட்டு ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டுப் போனதோடு சா¢... தொழிலாளர்களெல்லாம்
தாங்களாக வசூலித்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்
போனார்கள். அந்தப் பணத்தில்தான் சாவு கா¡¢யம் எல்லாம் முடிக்க முடிந்தது.
மூன்றாவது முறையாய் செட்டியார் வீட்டுக்கு வந்தபோது அவளால் எதையும் சொல்ல
முடியவில்லை. திகைத்து நின்றாள். செட்டியார் சொல்லிவிட்டுபோன மூன்று வழிகளும்
முகத்தில் மோதி மோதி அறைந்தது. இல்லாத பணத்திற்கு எங்கு போக... அவர் இருக்கிற
வரைக்கும் அவர் சம்பாத்தியத்தில் ஏதோ குடும்பம் நடந்துகிட்டிருந்தது. சேமிப்போ
ஏதாச்சும் சொத்து வாங்கறதோ கனவாய்ப்போனது. இருக்கிறது. இந்த மச்சுவீடு
மட்டும்தான் இதை விற்றவிட்டோ அல்லது அடமானம் போட்டுவிட்டோ நடுத்தெரு நாராயண
கதியாவதா? ஒரே மகன் ராமுவை கடனை ஒட்டலில் விட்டுவிட்டு அவன் எதிர்காலத்தைப்
பாழாக்குவதா.. சூறாவளியில் சிக்கித் தவித்தாள்.
"அம்மா... இந்தமாத £பீஸ் நான் மட்டும் இன்னும் கட்ல.. ரெண்டு நாளில் கட்லண்ணா
ஸ்கூலுக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்கம்மா..."
கண்ணீரோடு ராமுவிடமிருந்து பையை வாங்கி ஆணியில் மாட்டிவிட்டுத் திரும்பினாள். ஷ¤
சாக்ஸ் கழட்டிக்கொண்டே செட்டியாரைப் பார்த்தான் ராமு...
"தம்பி... உங்கம்மா காசுக்கு எங்க போகும்.. உனக்கெல்லாம் எதுக்குப்பா இங்கிலிஷ்
மீடியம் கான்வெண்ட் எல்லாம். பேசாம என்னோட வந்துரு.. ஓட்டல்ல மூணு வேளை
சாப்பாடும் கிடைக்கும். உங்கப்பன் பட்ட கடனை நீ அடைச்சு மாதி¡¢யாவும் இருக்கும்."
திருதிருவென்று விழித்தான் ராமு. அம்மாவின் கண்களில் கண்ணீர் பொலபொலவென வழிந்தது.
ராமுவும் கலங்கினான்.
"போயிட்டு வாங்க செட்டியாரே.. யோசிச்சி முடிவெடுக்கிறேன்" விருட்டென்று எழுந்த
செட்டியாரோ "ஏம்மா நீ என்ன ஐந்தாண்டு திட்டமா போடப்போற" துண்டை உதறித் தோள் மீது
போட்டபடி நடந்தார்.
ஐந்தாண்டு திட்டத்தை விட பொ¢தல்லவா... இளங்குருத்தின் வாழ்க்கைப் பிரச்சனையும்
இதில் அடங்கியுள்ளது என்பது செட்டியாருக்கும் அவன் முதலாளிக்கும் தொ¢யுமா..
அவர்கள் தான் பிறரை மனிதர்களாகவே மதிப்பதில்லையே...
இரண்டு வருசமாய் ஓட்டலே உலகமானது உடன் வேலை செய்பவர்கள் எல்லாம் சற்றேறத்தாழ இவன்
வயதை ஒத்தவர்களே.. அத்தனை போ¢லும் இவள்தான் விசயஞானி படிப்பிலும் அறிவுக்
கூர்மையிலும் சுறுசுறுப்பிலும் இவனைப் பிடித்துவிட்டது முதலாளிக்கு பிடித்ததற்காக
பச்சாதாபப்பட்டு படிப்பைத் தொடர அனுமதித்து விடுவானா என்ன? மாதம் இருநூறு ரூபாய்
சம்பளம் போட்டு ரெண்டு வருசமாய் நாலாயிரத்து எண்ணுறானது. தந்தையின் கடனில் வரவு
வைக்கப்பட்டு மீதி அசலும் வட்டியும் இவன் உழைப்பை எதிர்நோக்கி நின்றது. இந்த வருச
துவக்கத்திலேயே சப்ளையர் புரோமாசேன் கிடைத்தது. ராமுவுக்கு மற்ற பையன்கள் சுத்தம்
செய்யும் வேலையையே தொடர்ந்தார்கள். சப்ளையர்கள் கூட பொ¢ய மனிதர்கள் கிடையாது.
பதினைந்து வயசுக்குள்தான் அட்டைக்குத்தானே தொ¢யும் உழைப்பை எப்படிச்
சுரண்டுவதென்று.
இப்போதெல்லாம் அத்திப்பூத்தாற்போல் வயக்காட்டுவேலை கிடைத்தால் கஷ்டஜீவனமாகிப்
போனது. ராமுவின் அம்மா பீடிக்கு நூல்கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தாள். பையன்
வாழ்க்கை ஓட்டலிலேயே கழிகிறது. தன் வயிற்றைக் கழுவ வேண்டுமல்லவா.
நாளை தீபாவளி.. ஓட்டல் விடுமுறை.. மூர்த்தியைப் போல ஒரு நாள் லீவு எடுத்துக்
கொண்டு நேற்றே வீட்டுக்குப் போயிருக்கலாம்.. முதலாளி ஒருத்தருக்கொருத்தன் லீவு
என்று சொல்லிவிட்டார். மூர்த்திக்கு விட்டுக் கொடுத்துவிட்டான் ராமு. இந்த
தீபாவளியிலாவது வீட்டில் கரண்ட் லைட் எ¡¢யவேண்டும்.. இதுதான் மூர்த்தியின் நீண்ட
நாள் ஆசை. அதற்கேற்றாற்போல அவன் அம்மாவும் வாயைக் கட்டி வயித்தைக்கட்டி
மிச்சப்படுத்தி பற்றாக்குறைக்கு முதலாளியிடம் மூர்த்தி வாங்கிக் கொடுத்த கடன்
எல்லாம் சேர்ந்து மின்னாளியாய் பயப் போகிறது. சிறிய கூரை வீடானாலும் சிம்னி
விளக்கில் தன் அம்மா கஷ்டப்படுவது அவஸ்தையாய் இருந்தது ராமுவுக்கு தானும்
மூர்த்தியைப் போல பொங்கலுக்காவது எப்பாடுபட்டேனும் கரண்ட் லைட் போட என்ன அவைகளை
ஓடவிட்டான் ராமு.
"ராமு..."பஸ்ஸரை அழுத்தியும் குரல் மூலமாகவும் கூப்பிட்டார் முதலாளி.
"மணிகண்டனுக்கு ஒரு தபால் வந்திருக்கு.. அவன் விறகு கொண்டு வர பின்கூட்டுக்குப்
போயிருக்கானாம்.. அவன் கிட்டே கொடுத்திரு."
கவரை வாங்கிய ராமு கடிதம் மணிகண்டனின் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்கும் என்பதை
ஊகித்துக் கொண்டான். டேபிள் சர்வீஸை முடித்துக் கொண்டு பின்கட்டுக்குப் போனாள்.
விறகு அடுக்கப்பட்ட அறைக்குள் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது. வாயில் நுரை
தள்ள சிதறிய விறகுகளுடன் மணிகண்டன். இதயம் படபடத்தது ராமுவுக்கு மணிகண்டனின்
மூக்கருகே கைவைத்துப் பார்த்தாள். வாயில் நுரை வழிந்து கொண்டிருந்தது. தீயாய்ப்
பரவியது செய்தி, மணிகண்டனைக் சுற்றி கண்ணீரும் கம்பலையுமாய் பையன்கள். அவன்
செத்துப் போனது ஊர்ஜிதமானது. கணக்குப் பிள்ளை ஆறுமுகத்திடம் சவம்
ஒப்படைக்கப்பட்டது. மணிகண்டனின் தாயா¡¢டத்தில் ஒப்படைக்க முதலாளி உத்திரவிட்டு
கையில் ஐநூறு ரூபாய் கொடுத்தனுப்பினார். கூடவே பத்துப் பையன்களுக்கு மேல்
போனார்கள்.
கண்ணீர் தீபாவளியில் ஒரு நாள் விடுமுறை கழிந்து தங்கள் உலகத்திற்கு மீண்டார்கள்.
யாருக்கும் வேலை ஓடவில்லை. எப்போதும் புன்சி¡¢ப்புடன் காட்சிதரும் மணிகண்டன்
ஞாபகம் எல்லோரையும் வாட்டி வதைத்தது.
"ராமு.. என்ன ஒரு கொடுமை பாத்தியா... ஓட்டல் பின்கட்டில் நல்லபாம்பு, எலாவுறதா
கேள்விப்பட்டிருக்கோமே தவிர இதுவரைக்கும் நாம யாரும் பார்த்ததில்லை.. ஆனா இப்ப
நம்ம நண்பனை பலி வாங்கிடுச்சி"
"டேய்.. அவன் செத்த மாதி¡¢யே இல்லடா.. தூங்கற மாதி¡¢யே இருந்ததுடா."
"ஏண்டா ராமு.. மூணு வருசமா இந்த ஓட்டலில் உழைச்சவன் செத்துப் போனதுக்குப்
பெருந்தொகையை அந்த குடும்பத்துக்கு நேர்ல போய் கொடுத்திருக்கலாமில்ல.. மொதலாளி
ஆளும் போகல... பணங்கூட மணிகண்டனுக்குச் சேரவேண்டிய கூலியைத்தான்
கொடுத்னுப்பியிருக்கார். இரக்கமில்லாத ஜென்மம்டா"
ராமுவைச் சுற்றி மூன்று பையன்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த முதலாளி
பெல்லடித்து ராமுவைக் கூப்பிட்டான்.
"என்ன ராமு.. வெட்டிப் பேச்சு வேண்டிக் கிடக்கு... அவனவன் போய் வேலையைப்
பார்க்கச் சொல்லு"
சற்றும் நிற்காமல் திரும்பினான். பு¡¢ந்து கொண்ட மூன்று பேரும் தத்தம் வேலைக்குப்
போனார்கள். மனம் ஒரு நிலையில் இல்லை ராமுவுக்கு வேலையே ஓடவில்லை.
இவ்வளவு காலம் உழைச்ச மணிகண்டன் சாவப்பத்தி முதலாளி கவலைப்பட்டதாகத் தொ¢யவில்லை.
அதுவும் வேலை செய்யும்போது செத்திருக்கான். சவத்தை எடுத்துக்கிட்டு இவர் அவன்
ஊருக்குப் போய் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அந்தக் கும்பத்துக்குக் கணிசமா
குடுத்திருந்தா நல்லா இறந்திருக்குமில்ல.. அதெல்லாம் கிடக்கட்டும். சாவுக்குப்
போயிட்டு வந்த நம்மகிட்ட கூட மணிகண்டனுக்காக பா¢தாபப்பட்டு ஒரு வார்த்தை கூட
பேசலியே.. சுவர்கடிகார பெண்டுலம் போல் ராமுவின் மனம் ஆடீக் கொண்டிருந்தது.
இரவு மணி பத்தடித்தது.. வேலை பார்க்கும் 20 வையன்களும் தங்குவதற்கென்று ஓரு அறை
இருந்த்து. வா¢சையாய் பாய்போட்டு படுத்துக்கொள்ள வேண்டியதுதான். வழக்கமாய்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிடுவார் கணக்குப்பிள்ளை ஆறுமுக செட்டியார்
அதனால் வதைப் பற்றியும் அதிகமாக பேசச் தோன்றாது அவர்களுக்கு நின்னகால்
நெடுங்காலாய் நாளபூராவும் நின்றபடியே வேலை பார்ப்பதால் அசதியாய் அடித்துப்
போட்டது போல் தூங்கிவிடுவார்கள்.
இன்று லைட்டை அணைக்காமல் சுவா¢ல் சாய்ந்தபடியே உட்கார்ந்திருந்தான் ராமு. அவனைப்
போலவே யாருக்கும் உறக்கம் வரவில்லை. எப்படி வரும். தூக்கமும் பிடிக்கவில்லை.
எல்லார் எண்ணமும் மணிகண்டன் மீதே இருந்தது.
"ராமு.. இந்த மொலாளியோட கல்மனசைப் பார்த்தியாடா" சொல்லிக்கொண்டே நெருங்கி வந்தான்
சோமு.
நேருக்கு நேராய் கவலைதோய்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டார்கள் இப்போது இவர்களைச்
சுற்றி எல்லோரும்.
நிர்க்கதியாய் நிற்கும் மணிகண்டனின் அம்மா ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்கை மீனா
இவர்களைச் சுற்றியே இவர்கள் வலம் வந்தார்கள்.
"இன்னிக்குக் காலையில் ஓட்டலுக்கு ரெண்டு பேரு வந்தாங்கடா.. அவங்க பேசிக்கிட்டே
சாப்பிட்டாங்க நம்மைக் காட்டி ஏதோதோ பேசினாங்க.. கடைசியா ஒண்ணு மட்டும் நல்லா
கேட்டுச்சு.. சிறார் தொழிலாளர்களுக்கு ஆதரவா சுட்¡£ம் கோர்ட்ல
தீர்ப்பாகியிருக்குன்னாங்க. வேலை பார்க்கிற சிறுவரோட குடும்பத்துக்கு
சம்மந்தப்பட்ட முதலாளி உதவணும்.. உழைக்கிற சிறார் இறந்துட்டா அந்த குடும்பத்துல
ஒருத்தருக்கு வேலை தரணும்.. நிவாரணம் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டே போனாரு..
அதைக் கேட்டதிலிருந்து எங்க அப்பா ஞாபகம்தான் வந்து"
ராமு பேசியதும் சோமு பு¡¢யமால் புருவத்தை சொறிந்தான்
"என்ன ராமு.. மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடறே"
சோமுவுக்கு விளக்கமாய்ச் சொன்னாள் ராமு.
"சோமு.. எங்க அப்பா அடிக்கடி உ¡¢மைக்காக ஒன்றுபட்டுப் போராடினா வெற்றி
கிடைக்கும்னு சொல்வாரு. எனக்கு நல்லா நினைவிருக்க.. நெறையபேர் வீட்டுக்கு
வருவாங்க.. அப்பாவுக்குத் துணையிருக்கிறதா.. அந்த பலத்தில் பீடித்தொழிலாளர்கள்
எல்லாரையும் ஒண்ணு சேர்த்து சில பவனும் கிடைக்கிற தலைமைதாங்கி போராடியிருக்காரு."
அவன் வாயையே மற்றவர்கள் அபூர்வமாகப் பார்த்தார்கள். இருக்கும் இருபது பையன்களில்
அதிகம் எழுதப்படிக்கவும் விவரம் தொ¢ந்தவர்களாக ஓரளவுக்கிருப்பது ராமுவும்
சோமுவும்தான்.
"மொதல்ல நாமெல்லாம் ஒண்ணு சேரணும் பிரச்சனைகளை பு¡¢ஞ்சிக்கனும் அதுக்குத் தீர்வு
காணப் போராடனும்"
"ஆமா ராமு.. கொஞ்ச நாளைக்கு முன்னால போஸ்டாபீஸ். டெலிபோன்காரங்க எல்லாம் சேர்ந்து
போனஸ் கேட்டு ரோட்ல ஊர்வலம் போனாங்க இல்லியா.. அந்த மாதி¡¢ நாமகூட ஏதாவது பண்ணினா
என்ன.."
சோமுவின் பேச்சு ராமுவுக்குக் கி¡¢யாவூக்கியாய் அமைந்தது. மணிகண்டனின் மறைவுத்
துன்பத்தில் லேசாயத் சி¡¢த்தான் ராமு.
"மணிகண்டன் குடும்பத்துக்கு நிவாரணம் மட்டுமில்லாம நமக்குக்கொடுக்கிற அற்ப
சம்பளத்தை உயர்த்தணும்.. இதுதான் இப்போதைக்கு நம்ம பிரச்சனை.. நாளைக்கு
கும்பலாய்ச் சேர்ந்து மொலாளிகிட்டே பேசுவோம். இப்போதைக்குப் படுக்கலாம்"
ராமு முடிந்ததும் கலைந்து சென்றார்கள் லைட் அணைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மனதில்
விளக்கு ஏற்ப்பட்டது.
இன்று காலை புதியதாய் பிறந்தாய் ஒரு உள்ளுணர்வு எல்லாச் சிறுவர்களுக்கும்
முன்பெல்லாம் வேலைக்குப் போகும்போது தனித்தனியே போய் அவரவர்கள் தத்தமது வேலையைப்
பார்ப்பார்கள். ஆனால் இன்று எல்லாரும் கம்பலாய்ப்போனார்கள்
கம்பீரமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்த முதலாளிக்கு நெற்றி சுருங்கியது
என்றைக்கும் இல்லாத அளவிற்கு சிறுவர்கள் கும்பலாக வருவதும் முன்பாக வந்து
கொண்டிருந்த ராமுவின் கையில் நீளமாய் மடிக்கப்பட்ட பேப்பர் இருந்ததும் முதலாளியை
நெளியச் செய்தது.