பிழைக்கத் தொ¢யாதவன்
- சங்கர்குமார்
அன்று தேதி ஒன்று.
அந்த போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்து, முதல் மாத
சம்பளம் வாங்கப் போகும் சந்தோஷத்தில் இருந்தான் சரவணன்.
மாலையில் அவனுக்கு சம்பளக் கவர் தரப்பட்டது. பி¡¢த்து பணத்தை எண்ணிப்
பார்த்தவனுக்கு ஆச்சா¢யம். இரண்டாயிரம் ரூபாய் கூடுதலாக இருந்தது.
நேராய் இன்ஸ்பெக்டர் ரவியின் டேபிள் முன்பு போய் நின்றான் கான்ஸ்டபின்
சரவணன்.
"என்னய்யா?"
"சார்... என் சம்பளப் பணத்தில் ரெண்டாயிரம் ரூபாய் அதிகமாய் இருக்கு"
சரவணன் சொன்னதைக் கேட்டு, பகபகவெனச் சி¡¢த்தார் இன்ஸ்பெக்டர் ரவி.
பக்கத்து டேபிளில் இருந்த ஏட்டுவைப் பார்த்து, "யோவ் ஆறுமுகம்.. பையன்
புதுசா வேலையில் சேர்ந்திருக்கான். அதான் அவனுக்கு விவரம் பு¡¢யல.
நீயாவது இவனுக்கு சொல்லக் கூடாதா?" என்றார்.
ஏட்டு விஷயம் என்னவென்று பு¡¢ந்தவராய், தன் டேபிள்லிருந்து எழுந்து,
சரவணனின் அருகில் வந்தார்.
"தம்பி.. உன் சம்பளப் பணம் போக கூடுதலாக இருக்கிறது இந்த
மாசத்துக்கான உன்னோட பங்குத் தொகை அதாவது கிம்பளம்"
"கிம்பளமா? என்ன சார் சொல்றீங்க?" "அது வந்து தம்பி.. இந்த திருட்டு
வி.சி.டிக் காரனுங்க, கள்ளச் சாராயம் விக்கிறவங்க, கள்ள மார்க்கெட்
வியாபா¡¢கள், அப்புறம் சில விபச்சார புரோக்கர்கள் இன்னும் சிலர் மாதா
மாதம் ஸ்டேஷனுக்கு ஒரு அமெளன்ட்டை மாமூலா தருவாங்க அதை பங்கு போட்டு
எல்லோரும் எடுத்துக்கிறது வழக்கம்"
"ஐயோ... லஞ்சப் பணமா? எனக்கு வேணாம் சார்" என்று பதட்டத்துடன் அந்த
இரண்டாயிரம் ரூபாயை இன்ஸ்பெக்டர் டேபிள் மீது வைத்தான் சரவணன்.
"அட... இது எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் நடக்கிற விஷயம்தான்யா" என்றார்
ஏட்டு.
"இன ரத்தம் இல்லே. அதான் பயப்படுறான்" என்று சி¡¢த்தார் இன்ஸ்பெக்டர்
ரவி.
ஏட்டு,"தம்பி.. இந்தப் பணம் யாரையும் வற்புறுத்தியோ, துன்புறுத்தியோ
வாங்குறது இல்லே. அவங்களா ஸ்டேஷனுக்கு வந்து கொடுத்துட்டுப் போறாங்க,
இதனால எந்தப் பிரச்சினையும் வராது பயப்படாதே" என்றார்.
"நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும், நான் ஒப்புக்கமாட்டேன் சார்.
சட்டத்தைப் பாதுகாக்கா வேண்டிய நாமளே, குற்றவாளிகள் கிட்டே லஞ்சம்
வாங்குறது நியாயமில்லே என்று ஆதங்கப் பட்டான் கான்ஸ்டபிள் சரவணன்.
"சா¢ விடுங்க ஏட்டு பாவம் நினைக்கும் போலீஸ்காரன் பிழைக்கத் தொ¢யாதவனா?"
சரவணன் யோசனையில் ஆழ்ந்தான்.
சரவணனின் அப்பா முத்தையாவும் ஒரு போலீஸ்காரர்தான், தன் சர்வீசில்
நேர்மையான மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவர் ¡¢ட்டையர்ட் ஆகும்போது
கறைபடாத காக்கிச் சட்டை என்று கமிஷனரே பாராட்டினார். அப்பாவைப்
பார்த்துதான் சரவனுக்கு போலீசில் சேரும் எண்ணமே வந்தது.
'எந்தச் சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் பணியாற்ற வேண்டும்' என்பது
அப்பாவின் கொள்கை. எனவே அப்பாவைப் போலவே நேர்மையான போலீஸ்காரன் என
பெயர் எடுக்க நினைத்தான் சரவணன்.
அன்றொரு நாள், யாரோ ஒரு சமூக ஆர்வலர். எழுதிய பெட்டிஷனுக்கு
மதிப்பளித்து திடுதிப்பென்று விஜிலென்ஸ் அதிகா¡¢கள் சிலர் அந்த போலீஸ்
ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் ரவியும் ஏட்டு ஆறுமுகமும்,
பிற போலீஸ்காரர்களும் வெலவெலத்துப் போனார்கள். காரணம்.. சற்று
நேரத்திற்கு முன்புதான் ஸ்டேஷனுக்கு வந்த லஞ்சப் பணம் பங்கிடப்பட்டு
எல்லோர் பாக்கெட்டுக்கும் கைமாறி இருந்தது.
இது விஜிலென்ஸ் அதிகா¡¢களின் செட்டப் தான் என்பது இப்போது பு¡¢ந்தது.
"மிஸ்டர் இன்ஸ்பெக்டர்.. உங்கள் ஸ்டேஷனில் பணியாற்றும் அனைவரையும்
சோதனையிட வேண்டும். உங்களிடம் கைமாறியுள்ள லஞ்சப் பணத்தை ஆதாரப்
பூர்வமாக நிரூபிக்க நாங்கள் அதில் சில ரசாயன பவுடர் தூவியுள்ளோம்.
மேலும்.. ரூபாய் நோட்டுக்களின் எண்களையும் குறித்து வைத்துள்ளோம்
என்றார் ஒரு அதிகா¡¢.
சோதனை முடிவில் கான்ஸ்டபிள் சரவணன் தவிர மற்ற போலீஸ்காரர்கள் அனைவரும்
கையும், களவுமாக பிடிபட்டு, அவமானத்தில் தலைகுனிந்து நின்றனர்.
நேர்மையாக இருந்ததால் லஞ்சக் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்த நானா,
பிழைக்கத் தொ¢யாதவன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சரவணன்
இன்னும் சற்று நேரத்தில் சஸ்பென்ட் ஆகப்போகும் இன்ஸ்பெக்டரையும்,
மற்ற போலீஸ்காரர்களையும் பா¢தாபமாய் பார்த்தான்.