menu






 இலக்கியம >> கதை >> அதிர்ஷ்டமற்ற பயணி


அதிர்ஷ்டமற்ற பயணி

- ஜீ. முருகன்.

நகரத்தைத் தாண்டி வெகு தொலைவுக்கு வந்து விட்டிருந்தது பேருந்து. அதுவரை என் கவனமெல்லாம் அருகில் தொ¢ந்த மலைகளின் மேலேயே இருந்தது. பயணத்தின் வெகு தொலைவுவரை அவை காணக்கிடைக்கும் என்று ஆறுதலூட்டும்படி அவை நீண்டு கிடந்தன. அப்போது பேருந்துப் பயணத்தின் சீரான இயக்கத்தில் ஏதோ தடங்கல் உண்டாகும்படி நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து திரும்பி என் இருக்கைக்கு நான்கைந்து இருக்கைகள் முன்னே நடத்துனர் ஒரு பயணியிடம் எதுவோ விசா¡¢த்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

இப்ப டிக்கட் வாங்கப் போறயா, இறக்கி விடட்டுமா? என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார் அவர் யாரை நோக்கி இந்தக் கேள்வியைத் தொடுத்தார் என்பது தொ¢யவில்லை. அதற்கு வாய்ப்பேற்படுத்தும்படி பிரச்சினைக்கு¡¢ய பயணி இப்போது எழுந்து நின்றுகொண்டார்.

அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். முகத்தில் லேசான தாடி. வறுமையின் சுவடு எதுவும் அவா¢டம் காணப்படவில்லை. ஏமாற்றுக்காரர் போலவும் தொ¢யவில்லை. பணத்தை எங்கேயாவது தொலைத்து விட்டு எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்றுகூட நினைத்து பேருந்தில் ஏறிவிட்டிருக்கலாம்.

நான் எதற்காக டிக்கட் வாங்க வேண்டும்? என்று அவர் கேட்டார். எகத்தாளமாக இல்லாமல் சாதாரணமாகத்தான் அவர் கேட்டார்.

இது என்ன கேள்வி என்பதுபோல எல்லோரும் வியப்புடன் அவரைப் பார்த்தார்கள். சில கேள்விகள் சாதாரணமாகத் தோன்றினாலும் ஆச்சா¢யப்படுத்துபவையாகத்தான் இருக்கின்றன. ஏதோ ஒரு புதிதான ஒன்றைப் பெறுவதற்காக வெட்டவெளியை நோக்கி வலைவீசுகின்றன. இடைவெளி சம்பத்தைப்போல அவர் அடிப்படையான கேள்விகளில் உழல்பவராக இருக்கலாம்.

எதுக்காகவா?, இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்சுன்னு நெனைச்சியா? இந்த லொள்ளெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றயா?

அவர் குடித்திருப்பது போலத் தொ¢யவில்லை.
அவர் சொன்னார்.

கலாட்டவெல்லாம் பண்ணவரல, நிஜமாகவே நான் டிக்கட் வாங்க வேண்டுமா என்று எனக்குத் தொ¢யவில்லை. ஒரு வேளை அவருக்குத் தொ¢ந்திருக்குமென்று நினைக்கிறேன்.

யாருக்கு?
பின்னால் திருப்பி ஆட்களை நோட்டம் விட்டவர் அவர் தான் என்று நானிருந்த திசையில் கைகாட்டினார்.

யாரு அந்த நீலக்கலர் சட்ட போட்டிருக்கிறாரே அவரா? அவருக்குப் பக்கத்தில் தாடி வச்சிருக்கிறாறே அவரு.

என்னைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். நான் பயந்து போனேன். என்னை ஏன் இப்படி வேண்டாத சிக்கலில் மாட்டிவைக்க வேண்டும்?

அவர எதுக்காகக் கேட்கணுங்கிற? டிக்கட் எடுன்னா எடுக்க வேண்டியதுதானே தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். இந்த விஷயம் அவருக்குத் தான் தொ¢யும் நடத்துனர் என்னைத் திரும்பிப் பார்த்தார். நான் சங்கடத்துடன் நெளிவதை அவர் பு¡¢ந்து கொண்டிருக்க வேண்டும்.

அவரென்ன உன் கூட வந்தவரா? என்று அந்த ஆளையே கேட்டார். ஆமாம். அவர்தான் என்னை அழைத்து வந்திருக்கிறார் என்றவர் என் பக்கம் திரும்பி சார் நான் டிக்கட் எடுக்க வேண்டுமா? என்று கேட்டார்.

இந்தக் கேள்வியை எதற்காக என்னைக் கேட்க வேண்டும் இந்த ஆளுக்குக்கென்ன பைத்தியமா? ஏதாவது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இத்துடன் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதாலும் ஆமாம், டிக்கட் எடுக்க வேண்டும் என்றேன்.

"அப்படியானால் எனக்கும் நீங்கள்தானே டிக்கட் எடுக்க வேண்டும்?" என்று அவர் கேட்டார் நான் அதிர்ந்து போனேன்.

ஓட்டுனர் அவ்வப்போது திரும்பிப் பார்த்து சி¡¢த்துக்கொண்டே பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு இதெல்லாம் வேடிக்கையாகத் தொ¢ந்திருக்க வேண்டும். பயணிகளுக்கு இப்போது நானும் ஒரு வேடிக்கைப் பொருள் போல ஆகிவிட்டதை உணரமுடிந்தது. சிலர் என்மேல் பா¢தாபப்பட்டிருக்கலாம். சிலர் என்னை துரோகியாகவும் நினைத்திருக்கக்கூடும்; உடன் அழைத்துக்கொண்டு வந்துவிட்டு இப்படிக் கஞ்சத்தனம் செய்கிறானே என்று.

அவர் ஏதோ சதியுடன் செயல்படுவதாகப் பு¡¢ந்துகொண்ட நான் அதிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்களை செய்ய முயற்சித்தேன்.

நீங்கள் யாரென்றே தொ¢யவில்லை, எதற்காக உங்களுக்கு நான் டிக்கட் எடுக்கவேண்டும்? ஏன் வீணாக என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று கேட்டேன்.

என்னைத் தொ¢வில்லையா? அவர் வருத்தத்துடன் கேட்டார். இந்தவிதமான கேள்வி எனது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இப்போதுதான் முதன்முதலாக அவரைப் பார்க்கிறேன். பத்துரூபாய் டிக்கட்டுக்காகத் தொ¢ந்த ஒரு மனிதரைத் தொ¢யாதது போலக் காட்டிக்கொள்ளக்கூடிய அளவுக்கு சுயநலம் கொண்ட மனிதனா நான்? எப்படி இதை மற்றவர்களுக்குப் பு¡¢யவைப்பது.

திரும்பவும் அவர் கேட்டார், நிஜமாகவே உங்களுக்கு என்னைத் தொ¢யவில்லையா?

ஆமாம், தொ¢யவில்லை என்றேன்.

அவர் சி¡¢த்தார். அதில் வருத்தம் கலந்திருப்பது போலத்தான் இருந்தது. ஒரு டிக்கட் விஷயத்திற்காக சகமனிதர்களை இப்படிக்கூட சங்கடத்திற்குள்ளாக்கி கா¡¢யம் சாதித்துக் கொள்ளக்கூடிய மனிதரா இவர்?

அவர் கேட்டார், என்னை ஏன் தொ¢யாதது போல நடந்து கொள்கிறீர்கள் என்று தொ¢யவில்லை, நீங்கள் யாரென்று நான் சொன்னாலாவது நம்புவீர்களா?

அவர் ஏதோ திட்டத்துடன்தான் செயல்படுவது போல எனக்குத் தோன்றியது.

நீங்கள்தான் ஜீ. முருகன். மேலும் அவர் சொன்னார். நீங்கள் ஒரு எழுத்தாளர். இதுவரை உங்களது இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. நாவல் ஒன்றும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும்.

நான் அதிர்ந்து போனேன். ஆமாம் அவருக்கு என்னைத் தொ¢ந்திருக்கிறது. சந்தேகமில்லை. அவா¢டமிருந்து இனி நான் தப்பிக்க முடியாது. ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறோம். போர்ஹேவைப்போல நிச்சயம் இன்னொரு வயதான நானாக அது இருக்க முடியாது. என்னுடைய முகத்திற்கும் அவருடைய முகத்திற்கும் சம்மந்தமேயில்லை. அந்த ஆள் நல்ல கறுத்த நிறம். கேசத்திலிருந்து தொங்கும் தேன்கூடு போன்ற வடிவத்தில் முகம். மேலும் என்னுடைய கடந்த காலம் மட்டும்தான் இவருக்கு தொ¢ந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் நான் எழுதப்போகும் புத்தகங்களைப் பற்றியோ நான் ஆகப்போகும் விதம் பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவேளை இவர் எனது வாசகராகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய பிரபல்யத்தைப் பற்றி எனக்கே தொ¢ந்திருக்கையில் இது எவ்வளவு மடத்தனமான எதிர்பார்ப்பு அப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.

நான் கேட்டேன் உண்மைதான் உங்களுக்கு என்னை நன்றாகத் தொ¢ந்திருக்கிறது. ஆனால் உங்களை யாரென்றே தொ¢யவில்லையே.

என்னைத் தொ¢யவில்லையா? வியப்புடன் கேட்டார்.

நான் என்ன சொல்வது? ஏதோ ஒரு விபா£தம் வெளிவரப்போகிறது என்று அச்சத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நீங்கள் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டமற்ற பயணி கதையின் பிரதான கதாப்பாத்திரம்தானே நான்? இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு நீங்கள்தானே அழைத்துவந்திருக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

அப்போதுதான் எனக்கு விளங்கிற்று இந்தக் சூதர்க்க விளையாட்டுக்குள்தான் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேனா? தர்க்கப்படி அவர் சொல்வதும் சா¢தான். நான்தான் அவருக்கு டிக்கட் எடுத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பயணிக்கும் கதாபாத்திரங்களுக்கெல்லாம் டிக்கட் வாங்க வேண்டுமென்றால் எந்த எழுத்தாளனும் கதையில் அவர்களை நடக்க வைத்தே அல்லவா கூட்டிக்கொண்டு போவான்? நிலைமையைப் பாருங்கள் என்னிடம் இப்போது ஒரு குவாட்டர்க்கு மட்டும்தான் காசு இருக்கிறது. அங்கே நண்பர்கள் எனக்காகக் எப்படியிருக்கிறதோ தொ¢ய வில்லை. இந்த அழகில் இவருக்கு நான் டிக்கட் எடுக்க வேண்டுமாம்.

அவர் சொன்னார்

உங்கள் உதாசீனம் உண்மையாகவே என்னை வருந்தச் செய்கிறது. ஒரு மனிதனின் யதார்த்த இருத்தலைப் பற்றியோ, அவனுடைய துயரமிகு மனோபாவத்தைப் பற்றியோ நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதை மட்டும்தான். அதுவும் அதிநவீன பாணியில்.

அதிர்ஷ்டமற்ற பயணி

எங்களுடைய உரையாடல் மற்ற பயணிகளை வியப்படையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடத்துனர்கூட இது எப்படி முடியப் போகிறதோ பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் இருப்பது போலப்பட்டது.

நான் சொன்னேன் நீங்கள் சொல்லும் அந்தத் துயரம் ட்ராஜடி எல்லாம் கடந்த நூற்றாண்டோடு காலாவதியாகிவிட்டது. அன்பையும் தர்மத்தையும் அறத்தையும் மறுதலிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

ஒரு எழுத்தாளனுக்கு¡¢ய தார்மீகப் பொறுப்புகள். . .?

எழுத்தாளன் அவனுடைய கலைக்கு மட்டும்தான் பொறுப்பேற்க முடியும். மற்றபடி அவன் கருணையற்றவனாகவும் இருக்கலாம் என்று வில்லியம் ·பாக்னர் சொல்லியிருக்கிறார். அவனுக்கு வேண்டியதெல்லாம், காகிதம், உணவு, சிகரெட் கொஞ்சம் விஸ்கி.

நிதானம் தவறிய ஒரு குடிகாரனாகவோ வறுமையின் இயலாமையில் கெளரவத்தை இழந்து நிற்கும் மனிதனாகவோ ஏமாற்றுக்காரனாகவோகூட இருந்திருக்கலாம். நானோ அதிர்ஷ்டமற்ற ஒரு பயணியாகிவிட்டேன் என்று அவர் முணுமுணுக்கையில்தான் அந்தத்துயரச் சம்பவம் நடந்தேறுகிறது. இப்போது நாங்கள் பயணம் செய்யும் பேருந்து பயங்கர விபத்தொன்றில் சிக்கிக்கொள்கிறது. எதிரே வந்த லா¡¢ ஒன்றைத் தவிர்க்கும் பொருட்டு இடதுபக்கமாகத் திரும்பி ஒரு புளியமரத்தின்மேல் மோதிவிடுகிறது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிர் துறக்கிறார்கள். நான்கு பேருக்குப் பலத்த காயம் ஏற்படுகிறது. இறந்தவர்களில் ஒருவர் யாரென்று தொ¢யவில்லை. இன்னொருவர் டிரைவர் மற்றவர் அதுவரை டிக்கட்டே வாங்கியிராத நம் பயணி. இந்தக் கதையின் முடிவில் ஏதோ சதி நடந்திருப்பதாக உங்களுக்குத் தோன்றக்கூடுமென்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்தப் பயணி திரும்பி நின்று தேடிய கண நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட பதற்றத்தில் தான் இந்தப்பிரச்சனை தொடங்கியிருக்க வேண்டும்.