menu






 இலக்கியம >> கதை >> வாழ்வெனும் நகைச்சுவை


நேற்று இரண்டு மூன்று தடவை ஹாஸ்பிட்டலுக்கு போய் வந்தார்கள். காலையில் கூட அவள் சோர்வாகத்தான் இருந்தாள் சி¡¢க்கவே இல்லை. கண்கள் நொந்து போயிருந்தன. எனினும் அவை எண்ணவோ சொல்லின என்ன ஆயிற்று என்னுடைய கமலிக் குட்டிக்கு. தொ¢யும். அதுதான் அவளுடைய அம்மா ஏன் அழ வேண்டும். ஏன் இவ்வளவு ஆண்கள் கூட்டம். எல்லோருக்கும் இது பற்றி தொ¢யுமா அதனால் தான் அவனுடைய அம்மா அவன் கோபியின் பக்கத்தில படுக்கச் சொல்லி அவளுடைய அம்மாவோடு அவள் இருக்கின்ற அறையில் ராத்தி¡¢ படுத்துக் கொண்டார்களோ. எப்படி தூங்கிப் போனேன். எப்போது இப்படி ஆயிற்று. அய்யோ, செத்துத் தான் போய் விட்டாளா கமலிக் குட்டி.

இவன் எழுந்து உட்கார்ந்தான். இப்போதே அவளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை அடக்கி தூக்கத்தில் இருந்து விழித்த சின்னப் பையனாகவே நடந்து கொள்ள வேண்டியிருந்தது. இவன் கண்களைக் கசக்கி நடிப்பை துவங்கிய அடுத்த கணத்திலேயே யாரோ படுத்துக்கோ தம்பி தூங்கு என்றார்கள். அடப்பாவி, எனக்கு தொ¢யும் என்னால் தூங்க முடியாது என் கமலிக் குட்டி செத்துப் போய் விட்டாள் நான் படுக்க மாட்டேன். அவனுடைய அப்பா வந்து அருகே குனிந்து கொண்டார் என்னடா, படுத்துக்கறது தானே என்றார். கோபி தூங்கறான் பார் படுத்துக்க அவன் மூர்க்கமாக முடியாது என்று தலையை அசைத்தான். அவனுடைய அப்பா அவனை உற்றுப் பார்க்க அவனுக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பு¡¢ந்தது. "மூத்திரம் வருது" என்றான் "சா¢ எழுந்துரு"

எழுந்தவன், அழுகைகள் பீறிட்டு வெளியேறும் அறையை பார்க்க முற்பட்ட போது அப்பாவின் வலுவான கைகள் அதை தடுத்துவிட்டன. அனைத்துக் கொண்டிருக்கிற மாதி¡¢யான வன்முறையோடு கூடிய ஒரு நெம்புதலில் இவன் வெளியேற்றப்பட்டு விட்டான். "பெய்டா" என்கிறார் அப்பா, உணர்வுகளை மறைத்துக் கொண்டு உடலின் நடுக்கத்தை அவர் பார்த்து விடக் கூடாது என்று தோன்றியதில் அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறே தன் அரைடிராயரை விலக்கினான். வெட்டி எடுத்ததைப் போல துண்டாய் அம்புலியும், கொஞ்சம் நட்ஷத்திரங்களும். "நாயே எங்கே வேடிக்கை பாக்கறே நீ"

மனசு, அழுகையுடன் கூறப்படுகின்ற வார்த்தைகளை மிகக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தது. செத்துப் போய்விட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. இனி என்ன செய்ய முடியும். இனி அவ்வளவு தானா. எதுவுமே இல்லையா. தன்னை ஏதோ ஒன்று வந்து சூழ்ந்து கொண்டு நெருக்கிக் கொண்டிருப்பதை அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. மூத்திரம் பெய்வதை நிறுத்திக் கொண்டு ஒரு காலடி எடுத்து வைத்து நடப்பதில் கூட ஒரு அர்த்தமும் இல்லையென்று தோன்றிற்று. ஓடிப்போய் ஆவேசமாக கமலிக் குட்டியை வா¡¢ எடுத்துக் கொண்டு அழ விரும்பினான்.

"அப்பா, கமலிக் குட்டி. . ."

"என்னது?" அவர் கொஞ்ச நேரம் அந்த திசையைப் பார்த்துக்கொண்டு யோசித்தார் "வா, நம்ப ரெண்டு பேரும் ஜாலியா போயி பால் குடிச்சிட்டு வரலாம்."

தெருவுக்கு வந்தாயிற்று. எல்லாக் கடைகளும் அடைத்துக் கிடந்தன. அப்பா எந்த கடைக்கு அழைத்துப் போவார் என்பது தொ¢யும். "அப்பா, எனக்கு பால் வேனாப்பா" என்றான். சா¢ வா சாப்பிடறதுக்கு ஏதாச்சும் வாங்கித் தரேன். நடந்தார்கள். கமலிக்குட்டியினுடையக் கண்கள் அடைந்து போயிருக்கும். உருளாது என்றைக்குமே இனி நாகலிங்கப் பூவை ¨தா¢யமாக கொண்டு வர வேண்டியது இல்லை.

அவர்கள் திரும்பிய போது வாசலில் கோபியின் அப்பா கோபியோடு நின்றிருந்தார். இரண்டு அப்பாக்களும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டார்கள் கன்னையன் வந்தவுடன் சதி பு¡¢ந்தது. வாடா புள்ளைங்களா, எங்க வீட்டுக்குப் போலாம் என்றார் அவர்.

கன்னைய்யனின் வீட்டுக்குப் போகிற வழியில் கோபி தன் நண்பனிடம் முகத்தை ஒரு மாதி¡¢யாக வைத்துக்கொண்டு சொன்னான். "நீ பாத்தியா, எங்க கமலிக்குட்டி செத்துப் போயிருச்சாம்"

இவன் பேசவில்லை.

கன்னையா சோ¢ப்பகுதியை சேர்ந்தவர். பொம்மைகள் விற்கிறவர். கொஞ்சம் இங்கிலீஷ் எல்லாம் கூட பேசுவார். இவனுக்கும் கோபிக்கும் அவர் மீது ப்¡¢யம் தான். அவரது வீட்டுக்கு செல்லக் கிடைக்கின்ற தருணங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தவை ஆனால்...

"என்னடா எதுவுமே பேசாம வரே?"

கன்னைய்யன் தள்ளிக் கொண்டு வருகின்ற பொம்மை வண்டியில் ஏகப்பட்ட அற்புதங்கள். ஒரு நாள் இவனுடைய கேள்விக்கு கன்னைய்யன் சொன்னார் அது கொழந்தைடா கிளின்னா என்னன்னு தொ¢யாது. மோட்டார் கைக்கிள்னா தொ¢யாது. கொஞ்ச நாள் போவட்டும் அப்புறம் எல்லா பொம்மையும் நம்ம கமலிக் குட்டி வெளியாடறதுக்கு தான் அவனுக்கு ஒன்று தொ¢ந்தது. இனிமேல் பொம்மைகளோடு விளையாட முடியாது.

சூ¡¢யன் வந்து விட்டது. ஆட்கள் கன்னைய்யனிடம் விசா¡¢ப்பது பற்றி பு¡¢கிறது. விதி. ஒரு வார்த்தை மறுபடி மறுபடி அதை சொல்லிக் கொண்டிருந்தான். மனதிற்குள் மனனம் ஆகி வெளியேறாமல் பிடிவாதம் பிடித்தது. விதி எல்லாமே விதி தானோ. கோபி இரண்டு பையன்களுடன் வந்து விளையாடக் கூப்பிட்ட போது கன்னைய்யனின் மனைவி கொடுத்த இட்லிகளை வழியற்று விழுங்கிய போது, மதியத்தில் பாயை வி¡¢த்துக் கொடுத்து தூங்குங்கள் என்று இருவரையும் படுக்க வைத்த போது, விதியால் செத்துப் போன அவனது கமலிக் குட்டியின் பிணம் அவனோடிருந்தது. இனி எதுவும் யா¡¢டம் சொல்ல வேண்டியிருக்கவில்லை உண்மையிலேயே எதுவும் இல்லை. எல்லாம் பு¡¢ந்து விட்ட மாதி¡¢ கூட மிகவும் நுட்பமாய் வந்து அனைத்தது உறக்கம்.

சாய்ந்திரத்துக்கு மேல் அப்பா வந்தார். எதையுமே அறியாத தனது அப்பாவின் வரவுக்கு அவனால் சந்தோஷப்பட முடியவில்லை. தொ¢யும். அங்கே எதுவும் இருக்காது கடைசியாக கமலிக்குட்டி மறைந்து விட்டாள் பிணத்தைப் பார்த்த சித்தார்த்தன் கெளதம புத்தனாக ஆன கதை பாடபுத்தகச் சித்திரங்களுடன் யோசனைகளாக ஒரு வார்த்தை பேசாமல் நடந்தான்.

கமலிக் குட்டியின் அறையில் ஒரு தீபம் மட்டும் தான் எ¡¢கிறது.
இரவில் அவன் குமுறி குமுறி அழுதான். அது கமலிக் குட்டிக்காக மட்டுந்தானா

நான் புத்தனாகவில்லை

கமலிக்குட்டிக்காக கடவுளிடம் பிரார்த்தித்த நான் இன்று பொ¢யவன். வயது ஆகி விட்டது கண்ட மாத்திரைகளை விழுங்கி கருவிலேயே அவளது அழிவை எதிர்பார்த்தவர்கள் பற்றித் தொ¢ந்து கொள்ளாமல் பூமிக்கு வந்து நான்கே மாதங்கள் தங்கி கிளம்பிப் போனவளுக்காக அழுத நான் இன்று எதற்கும் பிரார்த்திப்பதோ அழுவதோ இல்லை அப்படி அழுவதாகவோ, பிரார்த்திப்பதாகவோ இருந்தால் எதிர்ப்பார்க்கிற மரணம் என்னை வந்து சேர வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இருக்கும். வேறு என்ன சொல்வது இப்போதும் உங்களிடமெல்லாம் சொல்ல எனக்கு எதுவுமேயில்லை.

 

...பின்னே

Top

முன்னே...