menu






 இலக்கியம >> கதை >> வாழ்வெனும் நகைச்சுவை


வாழ்வெனும் நகைச்சுவை

கதை : எம். கே. மணி

சட்டென்று விழித்துக்கொண்டான் அவன்.

வழக்கத்துக்கு மாறான சந்தடிகளை நுட்பமாக உணர்ந்துகொள்ளக்கூடியவன் தான். ஒரு நிமிடம் எதுவும் பு¡¢யவில்லை. ஏன் விளக்குகள் எ¡¢கின்றன. ஆட்கள் கூட அதிகமாக.. சட்டென்று பு¡¢ந்துவிட்டது. அழுகை சப்தம். ஆமாம், சம்பதமாக அலறும் அந்தக் குரல் கோபியின் அம்மாவினுடையது தான். கடவுளே, என்ன ஆயிற்று. கமலிக்குட்டி செத்துப் போய்விட்டாளா?

இவன் கோபியைத் தொட்டுப் பார்த்தான். அடப்பாவி, உன் தங்கைக்கு என்னவோ ஆகிவிட்டிருக்கிறது. நல்ல உறக்கம். மனசில் உறைந்த அதிர்ச்சியுடன் கோபியை உலுக்கிப் பார்த்தான். வலுவில்லை. உடம்பில் ஏதோ ஒரு தளர்ச்சி வந்துவிட்டிருந்தது. இப்போது என்ன தான் செய்வது. முணுமுணுப்புடன் ஆண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது சா¢வர பு¡¢யவில்லை. 'பெரம்பூருக்கு யாரையாவது அனுப்பிவைக்க வேண்டும்' என்று கோபியின் அப்பா சொல்வது கேட்டது. அங்கே சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இவனுக்கு தொ¢யும். அப்படியென்றால்...?

கமலிக்குட்டி பிறந்து நான்கு மாதங்களாகிறது. அவள் பிறக்கும்போதே நோயைக் கொண்டு வந்திருந்தாள். பூஞ்சையாயிருந்தாள். தினமும் ¡¢க்ஷா வைத்து டாக்டர் வீட்டுக்குப் போய் வருகிறார்கள். கோபியும், இவனும் ஒன்றிரண்டு தடவை கூட போயிருக்கிறார்கள். அவ்வளவு சிறிய உடம்பில் எத்தனை ஊசிகள். கமலிக்குட்டி தன்னுடைய சிறிய வாயை முழுதுமாய் திறந்து அடிவயிற்றுக்குள்ளேயிருந்து அலறுவாள். கண்ணீர் கொப்புளிக்கும். இவன் அதை மிகவும் நடுக்கத்தோடு பார்த்து நிற்பான். எப்படி சிவந்து போகிறது குழந்தையின் முகம். வலி, அழுகையை சமாதானப்படுத்தி பாலையெல்லாம் புகட்டிய பிறகு கூட திடீர் திடீர் என அவளது உதடுகள் துக்கத்துடன் கோணலாகும். கண்களுக்குள் நீர் ததும்பும். பக்கத்தில் கவனிக்க யாரும் இல்லையென்றால் இவன் மெதுவான குரலில் அந்தக் குட்டிக் காதுகளுக்கு குனிந்து கனிவாய் ஏதேனும் சொல்வான். பு¡¢யுமா அவளுக்கு, கமலிக்குட்டிக்கு காலை நேரங்கள் மிகவும் பிடித்தமானவை போலும். நோய்களின் சமிங்ஞை இல்லாத கூர்மைமிகுந்த முகமாயிருக்கும். கண்களை வி¡¢த்து நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருப்பாள். யாராவது சேட்டையுடன் கொஞ்சும்போது சிக்கனமாக சி¡¢ப்பாள். சி¡¢க்கும் நேரத்தில் சந்தேகமில்லாமல் பேரழகி அவள். இவனுக்கு கை துருதுருக்கும். எப்படி தன் ஆசையை வெளிப்படுத்துவது என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்க, எப்போதும் உறைந்தே இருந்தான். கோபியோ பெருங்கிழவனைப் போல் வெட்கமின்றி ஏதேதோ சப்தங்களால் தன் தங்கையை சி¡¢க்க வைக்கிறவன். இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதே அவனுக்குப் போதுமானதாயிருந்தது. அப்புறம் கொஞ்சம் அந்தரங்கமாக, கமலிக்குட்டி தன்னை அடிக்கடி ஆழ்ந்து கவனிப்பதாகவும், அங்கசேஷ்டை செய்து வினோத குரல்கள் எழுப்பி அவளை சி¡¢க்க வைக்கவில்லையென்றால் கூட அவளுக்கு தன் மீது விசேஷமான அன்பிருக்கிறதென்றும் அவன் நினைத்தான். தன்னைப் பற்றி கமலிக்குட்டிக்கு தொ¢யும் என்கிற நினைப்பே பெரும்பாலும் அவனை மெளனமாக்கி நிற்க வைத்தது.

அவன் படிக்கிற பள்ளியில் மூன்றாம் வகுப்பின் ஆசி¡¢யைக்கு உட்கார்ந்து தூங்கும் பழக்கமுண்டு. எல்லோரும் அது பற்றி அறிந்துவைத்திருந்தார்கள். தூங்குகிற ஆளை எழுப்பி, அது அதிர்ச்சியோடு குச்சியை தூக்கி அடிக்க வந்து விடாமல் கிசுகிசுப்பாய் பேச கற்று வைத்திருந்தார்கள் எல்லோரும். இவன் தன்னுடைய கமலிக்குட்டியைப் பற்றி வரதராஜப் பெருமாளிடம் சொல்வான். எப்போதும் கோவிலில் கிடைக்கிற சுண்டல் கடலையைப் பற்றிப் பேசும் பெருமாள் இவன் சொல்வதை சா¢வர காதுகொடுத்து கேட்பதில்லை. அதனால் என்ன. இவன் தான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிடுகிறவன் தான். இந்த பெருமாளுக்கு ஏன் கமலிக்குட்டியினுடைய சி¡¢ப்பு விளங்க மாட்டேனென்கிறது. ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பார். அப்போ தொ¢யும். இந்த உலகத்தில் சுண்டல் என்பது அவ்வளவு பொ¢ய விஷயமா.

மணியடித்து, பள்ளியை விட்டு வீட்டுக்கு வருகிற வழியில் அன்று ஒரு நாகலிங்க மலர் கிடைத்தது. அளவில் மிகப் பொ¢யது. கம்பீரமாக மணத்தது. இப்போது தான் மரத்தில் இருந்து உதிர்ந்திருக்க வேண்டும். நல்லவேளை, யாரும் மிதித்திருக்கவில்லை. அவனுக்கு கமலிக்குட்டியின் ஞாபகம் வந்துவிட்டது. அவளுக்கு இதை இப்படி சுற்றி சுற்றிக்காட்டினால் சி¡¢ப்பாளோ. மரநிழலில் உட்கார்ந்து கிழங்குவிற்கும் அந்த பாட்டி இவனிடம் தனது வழக்கமானப் பல்லவியை பாடினாள். 'போட்ரு, வீட்டுக்கு கொண்டு போனியானா நாகம் ஒன்னைத்தேடி ஒன் வீட்டுக்கே வந்துரும்.' பொய், பொய், அப்படியெல்லாம் கிடையாது. எத்தனையோ தடவை வீட்டுக்கு கொண்டு போய் விளையாடி இருக்கிறான். எதுவும் வரவில்லை. ஆனால், இப்போது சற்று பயமாய் இருந்தது. கமலிக் குட்டி தன் கையில் நாகலிங்க பூ வைத்து விளையாடிக் கொண்டிருப்பதும், பக்கத்தில் ஒரு நாகம் படமெடுத்து நிற்பதும் ஒரு காட்சியாய் வந்தது. சின்ன நடுக்கம் ஏற்பட்டது. வராது தான். நிச்சயமாக வராது. இருந்தாலும், இருந்தாலும் அவன் பூவைத்தூக்கி எறிந்துவிட்டான். கமலிக்குட்டியின் முன்னால் நின்று மெளனமாக தனது முட்டாள்தனம் பற்றி யோசித்து புன்னகை செய்தான். அவளுக்கு விளையாட்டுக் காட்ட என்¦ன்னவோ பொருட்கள் இருந்தன. யா¡¢டமும் நாகலிங்கம் பூவைப் பற்றி சொல்ல முடியும் என தோன்றவில்லை. மனசு எதற்கோ கஷ்டப்பட்டது.

கமலிக்குட்டியின் கண்கள் அவனுக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. அவள் எல்லோரையும் போல அல்லாமல் உள்ளே இருக்கிற கருமணிகளைப் போட்டு எப்போதும் உருட்டுகிறாள்.

அவளுக்கு பால் வேணுமென்றால் அந்தக் குட்டிக் கண்கள் தா, தா என்று பேசுகிறது. வாயால் பேசுகிற வயது தான் இன்னும் வரவில்லையே. கண்கள் பேசுகின்றவை தாம். நிஜமாகவே அவள் தன் அம்மாவை அறிவாள். அப்பாவை, அண்ணனை அறிவாள். இவன் தன்னைப் பற்றி அவள் நன்றாக அறிவாள் என்பதை அந்த கண்களுக்குள் புகுந்து பார்ப்பதன் மூலமாகவே நம்பிக்கொண்டிருந்தான். சாயந்திரமாவதற்குள் குளிப்பாட்டி, பவுடர் அப்பி, பொட்டிட்டு, கண்களிலும் மை தீட்டி வைத்திருப்பார்கள். தூக்கம் போட்டு அழுத்துகின்ற நேரம் அவளுக்கு அது, மூக்கு கொர் கொர்ரென்று உறுமும். எப்போதேனும் திடுக்கிட்டு முழித்துப் பார்க்கிற அந்தக் கண்களில் மிகுந்த சோர்வு தொ¢யும். தூங்காமல் இருந்தால் எ¡¢ச்சலோடு இருப்பாள். விளையாட்டுக் காட்டுகிற கோபியை பார்த்த உடன் கி¡£ச்சிட்டு கத்தி தன் எதிர்ப்பைத் தொ¢விப்பாள். பால் கூட குடிக்க மாட்டாள் போல. அவளுடைய அம்மா உடனே தனது முலைகளை ரவிக்கைக்குள் திணித்துக்கொள்ளுவதை இவன் பார்த்திருக்கிறான். அவளுடைய நோயை பு¡¢ந்து கொண்டு இடைஞ்சல் செய்யாமல் தான் பார்த்துக்கொண்டு இருப்பது அவளுக்கு எப்போதும் தொ¢ந்திருக்கலாம். ஒரு ¨தா¢யம் கூட கிடைத்திருக்கலாம்.

யா¡¢டம் சொல்லுவது இதையெல்லாம். மூத்திரமோ, மலமோ வெளியேறி ஈரமாகும் போது பயங்கர எ¡¢ச்சல் வந்துவிடும் அவளுக்கு. எல்லாம் துடைக்கப்பட்டு சுத்தமாகி உலருகிறவரை அந்தக் கண்களில் பாவம், நிம்மதியே இருக்காது. சீக்கிரம், சீக்கிரம் என்று மனசுக்குள் படபடத்துப் போவான் இவன். யாருக்கு தொ¢யும் அது. சுத்தம் செய்கிறவர்கள் மிகவும் சாவகாசமாக செய்வார்கள். அவளுடைய கஷ்டத்தை பு¡¢ந்துகொள்ள மாட்டார்கள். அவளுக்குச் சட்டென்று நிம்மதியைக் கொடுத்துவிட மாட்டார்கள். அவன் எப்போதும் தனது மனசில் பொ¢யவர்களை சபித்தான். அவளை அழவைத்து, சுரனை இல்லாமல் பொறுமையாயிருக்கிற அவளுடைய பெற்றோர்களைக் கூட பெரும்பாலும் வெறுத்தான். சே, எப்படிப்பட்ட ஆட்கள் இவர்களெல்லாம்.

அவன் தனது கற்பனையில் வெகுதூரம் போவதுண்டு. அவளது மார்பில் காம்புகள் முளைத்து பால் வழிந்தது. கமலிக்குட்டியின் எச்சிலில் குழைந்து பெருகின அவை. அவளைத் தனது மடியை விட்டு இறக்க முடிவதில்லை. அவளது உடலெங்கும் அவன் வருடிக் கொடுத்தான். கமலிக் குட்டி, கமலிக்குட்டி என்கிற ஒரே உச்சாடனத்தில் அவன் தான் சொல்ல வேண்டியிருப்பது அனைத்தையும் சொல்ல அவளுக்கு எல்லாம் பு¡¢ந்துகொண்டிருந்தது. அவனுக்கு இவையெல்லாம் மிகுந்த ஆசுவாசத்தைக் கொடுத்தன. சுற்றி கேட்கின்ற குறட்டைச் சத்தங்களுக்கு நடுவே தூங்காத இரவுகள் இனித்தன. பள்ளியில் இருக்கும் போது நேருகின்ற பி¡¢வு சற்று பெருமையாகவே இருந்ததோ.

 

...பின்னே

Top

முன்னே...