menu






 இலக்கியம >> கதை >> அவனுக்கு இவனே மேல்


அவனுக்கு இவனே மேல்

காலையில் இருந்தே "கண்ணாத்தா" ரேஷன் அட்டையை தேடித் தேடி அலுத்துக்கொண்டு இருந்தாள். அந்தக் குடிசையில் ஓலைகள் சிதைந்து ஓட்டை ஆனது தான் மிச்சம். அட்டை கிடைத்தபாடில்லை.

என்னைக்கும் இல்லாத கூத்தா, இன்னைக்கு நல்ல அ¡¢சி போடறாங்களாம். பக்கத்து வீட்டு பியா¡¢ பூமா சொல்றாங்க, இந்த அட்டையைத் தேடின லாபம், ஆறு வயது அமுதாக் குட்டி அடிவாங்கினதுதான் மிச்சம்.

எந்த கோபத்தை எங்கடி காட்டறது? அதுவே பாவம். நீ அட்டையை தேடி கீஞ்சது, போயி நாட்டான் கடையிலயாவது அ¡¢சி வாங்கி ஒலை ஏத்து. எனுக்கே காதை அடைக்குது, வெக்கிற இடம் ஒன்னு, தேடற எடம் ஒண்ணு என்று மாமியார் பொக்கை தத்தித் தடுமாறி பொறிந்து தள்ளினாள்.

அலுத்துக்களைத்து கண்ணாத்தா, அழுக்குப்பையுடன் கிளம்பிளான்.

அண்ணாச்சி ஒரு கிலோ நல்ல அ¡¢சியா விலை கம்மில போடு என்றாள்.

எடைக்கல்லை எடுத்துவைத்து கொண்டே நல்ல நாடார் டேய் முருகா, போயி ரேஷன்லே அ¡¢சி வாங்கியா என்று சொல்லி பத்துக் கார்டையும் ஒரு பொ¢ய சாக்குப் பையையும் எடுத்து மேலே வைத்தான்.

கண்ணாத்தா கண்கள் ஆச்சா¢யத்தால் வி¡¢ந்தன. ஆச்சா¢யம், அவளின் ரேஷன் அட்டை. ஆமாம், அவளுடையதே தான், இங்கு எப்படி வந்தது?

அண்ணாச்சி இது எங்களுடைய அட்டை என்று விரலை நீட்டியவளை இளக்காரமாய்ப் பார்த்து நல்ல நாடான் "புள்ள, உன் அட்டையை உன் வூட்டுக்காரன் வச்சி நூறு ரூபாய் வாங்கி ஒரு வாரமாவுது" என்றான்.

அதிர்ச்சியால் மெளனித்து போன கண்ணாத்தாளை "யோவ், நல்ல அ¡¢சி போடறாங்க, கூடப்பத்து, இருபது அட்டையைக் கொடுத்து அனுப்பு" என்ற குரல் திரும்ப வைத்தது.

பக்கத்தில் நாகா£கமாக ஆடையுடன் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த ஒருவன் குரல் அது.

தன் கணவனை ஏசிக்கொண்டே வீட்டுக்கு அ¡¢சியுடன் வந்த கண்ணாத்தா, உலையை ஏற்றிக்கொண்டே பாவி, என் குழந்தை அரவயிறு கஞ்சிக்குப் பேயா அலைய, அட்டையை வச்சிதான் போனவாரம் தன் அருமை தங்கச்சிக்கு சேலை, பூ, பழமுன்னு குலுக்கினார் போல, சீமையிலே இல்லாத தங்கச்சிய பாத்துட்டாரே துரை என்று பொருமித் தள்ளினாள்.

அப்போது ஏம்மா வீட்ல யாரு, உங்க ரேஷன் அட்டைகளை எடுத்தாங்க, சா¢ பார்க்கணும், இங்க ஒவ்வொருத்தரும் இரண்டு, மூன்று அட்டைகளை வச்சியிருக்கிறதா தகவல் என்ற குரல் கண்ணம்மாவை மேலும் உலுக்கியது.

ஆமாம், இருந்த ஒரு அட்டையை தொலச்சிட்டு தேடி கிழியுது, இதுல இரண்டு, மூணு... என்று இழுத்தாள் வெளியிலிருந்த கிழவி.

இதைக்கேட்டுக் கொண்டே வெளியே வந்த கண்ணம்மா அந்த அதிகா¡¢யைப் பார்த்ததும் தூக்கிவா¡¢ப்போட்டது.

நல்லநாட்டான் கடையில் மேலும் பத்து அட்டையைக் கொடுக்கச் சொன்ன அதே ஆள்... அவன் வெட்கப்படவோ, கூச்சப்படவோ இல்லை.

இவனுக்கு தன் கணவனே எவ்வளவோ மேல் என்று பட்டது. அவன் முகத்தில் விழிக்க முடியாதவளாய்க் கண்ணத்தா உள்ளே போனாள். கணவன்மீது இருந்த கோபம் பஞ்சாய்ப் பறந்தது.

- பாரதி குமார்.
                                   மேலும்>>