menu






 இலக்கியம >> கதை >> சேதாரம்


§பானமாசம்கூட கோபத்துல சிவசாமி என்னமோ சொல்லிட்டாண்ணு சாந்தியக்கா கக்கூசுகிட்ட போயி துத்தத்தை யாருக்குத் தொ¢யாம கரைச்சி குடிக்க பாத்திச்சு. தற்செயலாபாத்த லெட்சுமிக்கு கையும் ஒடல காலும் ஒடல சிவசாமிய கூட்டுக்கிட்டு போயி நைசா காட்னவுடனே, அதை தட்டிவிட்டு பொம்பளமாதி¡¢ ஏங்கியேங்கி அழுதார். "ஏஞ்சாந்தி இப்படி செய்றே. நீ குடிக்கறதாயிருந்தா, மொத எனக்கு குடுத்திட்டில்ல நீ குடிக்கணும்". சிவசாமியோட ப்ரெண்டு கணேசன், லெட்சுமியை கையெடுத்து கும்பிட்டாரு.

லெட்சுமிக்கு கணேசனை ரொம்பப் பிடிச்சுப் போச்சு, போர்மேன் மாதி¡¢ ஒரக் கண்ணால் அளவெடுக்கமாட்டாரு கணக்குபுள்ள மாதி¡¢ முத்தத்தை பறக்கவிட மாட்டாரு. ஒருவேள ஓடிப்போறதுக்கு முன்னாடி அப்பாவும் இப்படியெல்லாம் செஞ்சியிருப்பாரோ?

இந்த கணக்குப்புள்ள செய்ற குசும்பு மட்டும் லெட்சுமிக்கு புடிக்கறதேயில்லை. அங்க தொட்றதும், இங்க தொட்றதும், யாரும் கேட்டா, என்னக்கா சின்னபுள்ளதான பொ¢யவளாயிட்டா இப்படியெல்லாம் விளையாட முடியுமாம்பாரு. ஆளு நறுங்கணாப்பல இருந்தாயென்ன, வயதுதான் பன்னிரெண்டாச்சே லெட்சுமி உள்ளுக்குள்ளேயே மருகிப்போவான்.

ஆபிசரு போனதும் யாரையாச்சும் அனுப்பிவிட்றேனு அண்ணாச்சி சொன்னாரே, இன்னுமா ஆபீசரு போகலே. அண்ணாச்சியும் கூட ஒவ்வொரு நேரத்துக்கு வீட்ல உள்ள கோபத்தை வெச்சுகிட்டு, மா¡¢முத்தை ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் பட்டுனு அடிச்சிருவாரம். பெறகு, ரூமுக்குள்ள போயி கொஞ்ச நேரங்கழிச்சி மா¡¢முத்தை தண்ணி கொண்டு வரச் சொல்லுவாராம். கொண்டுபோற தண்ணிய குடிக்கராரோ இல்லியோ அஞ்சோ, பத்தோ கையில அகப்பட்றதை எடுத்து குடுத்துருவாராம்.

மொதமொத அடிவாங்கினப்ப, இல்லாததுக்கெல்லாம் இந்த பயகிட்ட அடிவாங்க வேண்டியிருக்கேனு எ¡¢ச்சலாத்தானிருந்தது. அடிகுடுத்தா கொஞ்ச நேரத்தில ரூபா கொடுப்பாருங்கறது தொ¢ஞ்சிகிட்ட பின்னால ஏண்டா இன்னிக்கு அண்ணாச்சி அடிக்கலேன்னு வருத்தப்பட்றத நெனச்சு நெனச்சி லெட்சுமிக்கு சி¡¢ப்பு சி¡¢ப்பா வரும்.

யாரோ கதவைத் தட்ற சத்தம் கேட்டதும், திறந்த லெட்சுமி, சரசாவுடன் செட்டுக்கு வந்தாள்.

உள்ளே அண்ணாச்சியும் கணேசனும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆபீசரு போயி கால்மணி நேரமாச்சு, பாவம் இந்தப் புள்ளைய மறந்திட்டோம். உள்ளேயே அடைஞ்சு கெடந்திருக்கு அண்ணாச்சி வருத்தப்பட்டார்.

"சீக்கிரமா தாவணி போட்ரு லெட்சுமி இந்த தொந்தரவெல்லாம் வேண்டாம்ல"

"மாமாமாருகதான மொதல்ல தாவணி எடுத்து குடுக்கணும்" சரசா சொல்லிக்கொண்டே செட்டுக்கு போனாள்.

"குடுத்துருவோம். லெட்சுமிக்கு இல்லாமயா!" கணேசன் சொல்லவும் லெட்சுமிக்கு வெட்கமாயிருந்தது. வேற யாராச்சும் சொல்லியிருந்தா, லெட்சுமிக்கு எ¡¢ச்சலாக இருந்திருக்கும் அவுகவுக சோலிய அவுகவுக பாத்தா போதும்னு வெடுக்குனு பேசியிருப்பா.

கட்டையை எடுத்து வைத்து அடுக்க நினைத்தவளுக்கு கணேசனுக்கு முன்னால் முட்டுக்குமேல் பாவாடையை தூக்க வெக்கமாயிருந்தது. பாவாடையை பாதம் வரை இழுத்து விட்டு அடுக்க ஆரம்பித்தாள். நாளையிலிருந்து அம்மாவை தினமும் பதிவா நெறய்யாப் பூவாங்கி தரச் சொல்லணும்னு நினைக்கையில் மனசுக்கு சந்தோசமாக இருந்தது.

காலையில் தீப்பெட்டி கம்பெனிப் பஸ்ஸின் சத்தத்தில் எழுந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு நிற்கையில் அம்மா வந்தாள்.

வழக்கத்திற்கு மாறாக சி¡¢த்த முகமாய் இருந்தாள். லெட்சுமி தலையில் ஒரு தருக்கு பூவைத்து சடை பின்னிவிட்டான். பூ இன்னும் ஒரு தருக்கு மிச்சமிருந்தது.

"என்னம்மா இவ்ளோ பூவு"

"அடியே நானும் கம்பெனிக்கு வேலைக்குப் போகப் போறேண்டி காந்தி நகர் மேட்டுக் கம்பெனி போர்மேன் வரச் சொன்னான்"

அவள் கைகள் தானாகவே பூ வைக்கவும், சேலை மடிப்பைச் சா¢ செய்யவும் செய்தன. ரொம்ப நாளைக்கு பிறகு அவள் கண்ணாடியைக் கையில் எடுத்தாள்.

லெட்சுமி சொன்னாள்.

"நீய்யும் அழகாத்தாம்மா இருக்கே, எந்தக் கம்பெனில போனாலும் ஒனக்கு வேல குடுப்பாங்க"

பஸ்ஸின் ஹாரன் பலமாய் கேட்க தாயும், மகளும் தெருவுக்கு வந்தார்கள்.

முற்றும்.
 

பின்னே...

Top

முன்னே...