menu






 இலக்கியம >> கதை >> சேதாரம்


"ஆமா எங்க கட்சிக்காரங்கதான் லஞ்சம் வாங்குனாகளாக்கும். ஒங்க கட்சிகாரங்கனாப்புல வாங்கலையாக்கும். என்னதான் செய்யறாகனு பாப்பம்னு இவுக பொறுமையா போறாக தொ¢யுமா? பொறுத்தார் பூமி ஆள்வார். பொங்கினார் காடாள்வார் என்று ஒரு பக்கம் அரசியல் சூடு பிடிக்க, தாவணிப் பெண்கள் உடலை இடமும் வலமுமாக அசைத்து சக்கைகளை அடுக்கி அடுக்கி கம்பியில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். லெட்சுமிக்கு ஏதோ புது உலகத்திற்குள் புகுந்து விட்டது. போலிருந்தது.

"போதும், போதும் வாய்ப்பேச்சோட நில்லாமஇ கையும் நடமாடட்டும்" சப்தமெல்லாம் அடங்கிப் போனது.

அடுக்குவர்கள் ஒருவருக்கு முன்னால் கூட காடி இல்லை. ஒரு சின்ன தகர டப்பா மட்டுமே இருந்தது. பாவாடையை தொடை தொ¢யுமளவுக்கு தூக்கி முட்டின் மேல் சக்கையை வைத்து, அடுக்கி, டப்பாமேல் வைத்து, பின் கம்பியில் மாட்டினார்கள். லெட்சுமிக்கு ஏனோ வெட்கமாயிருந்தது... மருந்து வாளியை அந்த வழியாக கொண்டு வந்து புதுபோர்மேன் ஓரக்கண்ணால் தொடைகளை அளவெடுத்துச் சென்றார். அண்ணாச்சி எதையுமே கண்டு கொள்ளவில்லை. "பாடி ழுணடப்பமாட்டிகளா?" காடி தேட்ற புள்ள என்னத்த கட்டியிருக்கு..?" யாரோ ராகத்தோடு சொல்ல எல்லோரும் தங்களுக்குள் சி¡¢த்துக் கொண்டார்கள்.

பாவாடையை பாதம்வரை இழுத்துவைத்து அதன்மேல் சக்கையை வைத்து அடுக்க ஆரம்பித்தாள் லெட்சுமி. ஒருவரையொருவர் பார்த்து சி¡¢த்துக் கொண்டார்கள். அம்மணமா தி¡¢யற ஊர்ல கோவணாண்டிய பாத்து சி¡¢ப்பாகளாம். லெட்சுமிக்கு எப்படியோ இருந்தாலும், பாவாடையை மெதுவாக தொடை வரை தள்ளிக்கொண்டாள்.

உருவுவதற்கு அன்று ஆட்கள் சா¢யாக வரவில்லை. வெத்துக்கட்டை கிடைப்பது சிரமமாக இருந்தது. உருவத் தொ¢ந்தவர்கள் அவரவர் உருவி, வெத்துக்கட்டையை அடுக்க ஆரம்பித்தார்கள்.

இவளுக்கு தரவேண்டிய முறையிருந்தும், ஒருத்தி தனக்கு வேண்டியவளுக்கு வெத்துக்கட்டையை கொடுத்துவிட்டாள். நேரம் மதியத்தை தாண்ட ஆரம்பபித்திருந்தது. பத்துக்கட்டை அடுக்கிவிட்டு சாப்பிட போகலாமென்றால் பசி வயிற்றை பிராண்டியது. இப்போதான் ஏழுகட்டை அடுக்கியிருந்தாள். லெட்சுமிக்கு அழுகை அழுகையாக வந்தது. ஸ்பீக்கர் சத்தத்திற்கு போட்டியாக கூச்சல்.

"ஏன்க்கா, எவ்ளோ நேரமா நா நிக்கேன்?"

"இருயிரு, இந்தா கால்மணி நேரத்தில் அடுத்த கட்டையை உருவித்தந்திர்ரேன்"

"சின்ன புள்ளனு ஏமாத்த பாக்காதீக"

"சே, நீயா சின்ன நொள்ளை? இதோட ஒரே எழவாப் போச்சு ஏந்தான் இந்த வரத்து வருதோ?

இருங்க, இப்ப அண்ணாச்சி வரட்டும், அவ்ரட்டயே கேட்டோம்"

"இந்தா சும்மா சும்மா பேசாத, வேணும்னா காத்திருந்து வாங்கிட்டு போ. இல்ல அவசரம்னா நீயும், ஒங்க அண்ணாச்சியும் சேர்ந்து உருவி அடுக்கிக்கோங்க"

"சா¢ சா¢ வுடுங்கக்கா, அதான் சின்னப்புள்ள வுடாம பேசுதுன்னா, நீங்களும்.."

"என்ன சின்னபுள்ள? சின்ன சிறுக்கின்னா, அதுக்குத்தக்கன பேசவேணாம். கட்ட நா உருவுன கட்டை ஒரு கட்டைய அவாட்ட குடுத்தா இவளுக்கென்ன? என்னமோ அவ அப்பன் வீட்டு மொதல கொள்ளையடிச்ச மாதி¡¢யில்ல பேசுதா?"

"குடுக்க இஷ்டமிருந்தா குடுங்க, இல்ல வுடுங்க. அதுக்காக சிறுக்கி, தேவிடியானு பேசினா மா¢யாதை கெட்டுக் போயிருக்கும். நான் சின்ன சிறுக்கினா நீங்க பொ¢ய சிறுக்கி, நான் சின்ன தேவிடியான்னா நீங்க பொ¢ய தேவிடியா?"

அடுத்த செட்டில் பன்ட்ரோல் ஒட்டிக்கொண்டிருந்த சரசக்கா ஒடிவந்து லெட்சுமியை இழுத்துப்போனாள்.

"என்ன லெட்சுமி எங்கிட்டு போயி இப்படி பேச பழகின?"

"சரசா ஒனக்காகதான் இத விட்டுவைக்கேன், இல்லே சிறுவாயப் பேத்துடுவேன் பேத்து"

"நாய் வேசம் போட்டா குரைச்சுதானே ஆகணும்" யாரோ சொல்லிட்டுப் போனார்கள்.

தினந்தினம் இருபத்தைஞ்சு கட்டை அடுக்கினால் கணக்கெழுதும் போது பஞ்சப்படியாக மூன்று ரூபாய் தருவார்கள். அதற்காசைப்பட்டு.. தான் இப்படியெல்லாம் பேசியதை நினைத்து வேதனையாக இருந்தது லெட்சுமிக்கு.

கடந்த மூன்று நாட்களாக சுடிதாரோ, மிடியோ போட்டு வரவில்லை. எல்லோரும் தாவணி, சேலைதான், டவுசர் போட்ட பையன்களுக்கு ஒரு வாரம் லீவு கொடுத்துவிட்டார்கள் கட்டை எண்ணி விட்ற மா¡¢முத்து வராமல், கொஞ்சம் போரடித்தது.

திடீரென வந்துவிட்டால், அவர்கள் போகும்வரை கக்கூசுக்குள் ஒளிந்திருக்கும்படி அண்ணாச்சி சொல்லியருந்தார்.

லெட்சுமிக்கு உள்ளே இருக்கவே பிடிக்கவில்லை. கையினால் வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு இருந்தது பார்த்தான். மூச்சு முட்டியது. நாற்றம் மூக்குவழியாக சென்று, குடலைப்புரட்டி, வாந்தி வரும்போல் குமட்டியது. இந்த ஆபிசருக சீக்கிரமா போய்த் தொலைஞ்சா என்ன என்றிருந்தது. கொசு வேற 'சுவில் சுவில்' என சுற்றி சுற்றி வந்து கடித்தது.

சத்தமில்லாமல் மெதுவாக எட்டிப்பார்த்தாள் லெட்சுமி.

போர்மேன் மெழுகு போடுவதிலேயே குறியாயிருந்தார். கணக்குப்பிள்ளை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாருக்கோ முத்தத்தை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

சே, இதுக்கு சாந்தியும் சிவசாமியும் எவ்வளவோ தேவலை. சிவசாமியைத்தான் சாந்தியக்கா லவ் பண்ணுதாம். கம்பெனி பூரா இந்த விசயம் தொ¢ஞ்சதுதான். சாந்தியக்காவுக்கு பதினஞ்சு வயதுதானாம். பாத்தா அப்டி தொ¢யாது. இந்த வருச தீவாளி போனசை வாங்கிட்டு ரெண்டுபேரும் எங்கேயோ ஒடிப்போகப் போறாகளாம்.
 

பின்னே...

Top

முன்னே...