சேதாரம்
அ. அமராவதி, கோவில்பட்டி.
‘டம்’ மென்ற மிகப்பொ¢ய சத்தத்தில் கைவேலையை போட்டுவிட்டு ஓடிவந்தான் மாடத்தி.
"ஏன்ட்டி மூதி, எறக்க வறச்சொன்னா வருவோம்ல, கட்ட ஒடிஞ்சி தொலைச்சிட்டா
கம்பெனிக்காரனுக்கு அழ எவட்ட துட்டிருக்கு.
"இல்லம்மா கனமாயிருந்திச்சு..."
"ரெண்டு நடையா கொண்டு வந்தா என்ன மூதி, கால்ல போட்டு தொலைச்சிட்டா செலவழிக்க,
ஒங்கப்பங்காரன் சம்பாத்தியம் வெச்சிட்டுப் போயிருக்கானா? காலு, கீலு நொண்டியா
போயிட்டா, பெறகு எவன் சீந்துவான்?"
கொஞ்சம் பூவெக்கிறது அம்மாக்கு புடிக்கவே புடிக்காது. இப்பல்லாம் சடைபின்றதையே
விட்டுட்டேன்.
அம்மாவ நெனச்சாலும் பாவமாத்தான் இருக்கு. அதுக்கு... அப்பா ஓடிப்போனா நான் என்ன
பண்ணுவேன்? நெனச்சி நெனச்சி லெட்சுமிக்கு அழுகை அழுகையா வந்திச்சு.
"இந்த ரெண்டு பொட்டப்புள்ளைகளையும் எந்தலையிலே கட்டிட்டு அந்தப்பாவி நிம்மதியா
போயி சேர்ந்துட்டானே" சின்ன வருத்தமென்றாலும் ஓடிப்போன புருசனை நினைத்து ஒரு
மூச்சு ஒப்பா¡¢ வைத்துதான் கொஞ்சம் அமைதியாவாள் மாடத்தி.
"அந்தலவிண்டி" தலைநெறைய பூவெச்சு, மோலுகாலெல்லாம் பவுடர் போட்டு என்ன சொக்குபொடி
போட்டு மயக்கிட்டானோ தொ¢யலியே?"
மாடத்தியின் ஒப்பா¡¢ சத்தத்தில், தெருவில் போய்க்கொண்டிருந்த சரசா வீட்டிற்குள்
எட்டிப்பார்த்தாள்.
என்ன மாடத்தியக்கா இது, காலையிலேயே...'
"பெறகென்ன சரசா பத்து வயசாகுது. அஞ்சு கட்டையை சொமக்க முடியல்லே. கால்ல போட்டு
தொலைச்சிட்டா யாரு தாங்க? அடிப்பெட்டி கெட்டு வாங்கினா பதினாலு கூட ஒட்ட முடியல்லே.
மொதநாக் காலையிலே வாங்கினதிலேயிருந்து மறுநா அளக்க போற வரைக்கும்
இழுவிக்கிட்டிருக்கா. வளர்ற புள்ள ஒக்காந்தே ஒட்டிக்கிட்டிருந்தா குறுக்கு ஒடிஞ்சே
போகுமே. கட்டைய வாங்கி அடுக்குனா ஒரு நடை அடுக்க இறக்கனும், இடுப்ப
ஆத்துனாப்போலயும் இருக்கும். நாலு நடை அடுக்குனாலும் போதும் இருபது ரூபா ஆச்சேனு
பாத்தா மூதிக்கு சொமக்க முடியலியாம்"
"ஆமா நீங்க நாஞ்சொன்னா கேக்கமாட்டீக. இந்த கம்பெனிலதான் டேப்ப பி¡¢க்காம மேல மேல
ஒட்டி.. சே கட்டைய தூக்க முடியுதா, செக்கால்ல இருக்கு. பேசாம எங்க கம்பெனில
செட்டுக்கு அடுக்க வரச் சொல்லுங்க. இந்தா, நாலு எட்டு வச்சா போதும் கம்பெனிதான்.
இது எதுக்கு நாயா வா¢சையில காத்து சொமந்துகிட்டு அலையணும்."
"அப்படிதான் செய்யணும் சரசா. நாளையிலேயிருந்து வரச்சொல்லுதேன்"
சின்னவளுக்கு தலைகட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, முடியை பரப்பரட்டுனு
சீவி கொண்டை போட்டுக்கிட்டு வீட்டுவேலைக்கு போற மாடத்தி வரும்போது மத்தியானம்
பள்ளிக்கூடம் விட்ருவாங்க. வேல செஞ்ச வீடுகள்ள குடுத்த மிஞ்சிப் போன இட்லி,
தோசைகளை பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு, ரெண்டா நடை கட்டையை கூடமாட அடுக்கி
குடுத்து உஸ்னு உக்காரகூட நேரமில்லாம திரும்ப சாயங்கால வேலைகளுக்கு புறப்பட்ட
நேரஞ்சா¢யாயிருக்கும்.
"ஏன்ட்டீ மூதீ எனக்குதான் நேரமில்ல. வயது பத்தாகுதே, அந்த நாலஞ்சு முடியவும்
சீப்புட்டு ரெண்டு சீவு சீவி ஒரு ரப்பர மாட்டவுமா சொல்லித் தரணும்".
லெட்சுமிக்கு அழுகை அழுகையா வரும். அப்பா இருக்குபோது பக்கத்துல ஒரு
பள்ளிக்கூடத்துல சின்னப்புள்ளையிலேயே எல்.கே.ஜில சேத்துட்டாங்க. காலையிலேயும்
சாயந்திரமும் அப்பா சைக்கிள்ள போயி உட்காருவாரு. மத்தியானம் சின்ன கூடையிலே
சாப்பாடு தண்ணி, திங்கறதுக்கு பண்டமெல்லாம் அம்மா கொண்டு வரும். அப்போ, அம்மா
எவ்ளோ அழகா இருக்கும். சே. ஏந்தான் அப்பாவுக்கு இப்டி புத்திபோச்சோ. போனதே போனாரு.
கல்யாணத்துக்கு முன்னாடியே ஓடிப்போயிருக்க கூடாது. இப்ப அவரால நம்மதான்
கட்டையடுக்கி சாகவேண்டியிருக்கு.
வாசலில் உட்கார்ந்து கட்டை அடுக்கிக் கொண்டே ரோடை பார்த்தான். அப்பா கூடவும்,
தாத்தா கூடவும், தனியாவும் புள்ளைக பள்ளிக்கூடத்துக்கு போச்சுக. லெட்சுமிக்கும்
கூட பள்ளிக்கூடம் போக ஆசையாத்தானிருந்திருச்சு. சின்ன புள்ளையிலே தெனந்தெனம்
அழுதுகிட்டே பள்ளிக்கூடம் போக போயிதான் சாமி நம்மள கட்டை அடுக்க போட்டிருக்க.
அம்மாவும் கூட பாவந்தான். அப்பா இருக்கும்போது வீட்டுவேல தவிர வேற ஒர வேலையும்
செய்யாது அம்மா.
"இந்த கோயில்பட்டிக்கு வாக்கப்பட்டு வந்துட்டு, கம்பெனி வேல தொ¢யாதுன்னு சும்மா
ஒக்காந்திருக்கிற வயித்திலேயிருந்து புள்ள கீழதான் வழணும். ஒன்ணொண்ணும் என்னா வேல
செய்யிது சக்கையை கைல எடுக்கறது தொ¢யல்லே. உலுப்புறது தொ¢யல்லே. மாட்றது தொ¢யல்லே".
"நா என்னக்கா செய்யட்டும். எங்க ஊர்லே தீப்பெட்டியாவிசே கெடையாது" சி¡¢த்துக்
கொண்டே சொல்வாள் மாடத்தி.
இன்றும்கூட மாடத்திக்கு சக்கையை உலுப்பி அடுக்க தொ¢யாது. ஒவ்வொரு குழியிலேயும்
ஒவ்வொரு குச்சாக எடுத்து வைப்பாள். மாடத்தி ஒரு சக்கை அடுக்குவதற்குள் லெட்சுமி
ஏழெட்டு சக்கை அடுக்கிவிடுவான்.
நம்ம வயித்துல பொறந்தது பழகிருக்கனு அப்பப்ப பெருமூச்சு வுட்டாலும் என்ன செய்றது?
இப்பவே அடுக்கி சாகணும்னு அது தலையில எழுதியிருக்கு. அத மாத்த முடியுமா?
சமாதானமாகிவிடுவான் மாடத்தி.
காலையிலேயே எழுப்பிவிட்டு, குளிக்க சொல்லி, தலையை சீவிவிட்டு, ஊருக்கு போகும்போது
கட்ட வைத்திருக்கும் பாவாடை, சட்டையை போடச் சொன்னாள் மாடத்தி வாங்கி வைத்திருந்த
பூவைக்கூட தலையில் வைக்க மறந்து விட்டாள் லெட்சுமி. தலையில வெக்கிற பூ உதுந்து,
அசிங்கமாயிரும்னு அப்படியொரு கண்டிசன். அதுவுமில்லாம, பூ வெச்சு எம்புருசனை
மயக்கிட்டாளே சண்டாளி'னு மாடத்தி ஒப்பா¡¢ வைக்க வைக்க லெட்சுமிக்கு பூவுன்னாலே
வெறுப்பாயிருந்தது.
சரசாகூட லெட்சுமி சி¡¢ச்சுகிட்டேதான் போனா. இருந்தாலும் கோயில்ல குளிக்க விட்டு
கொம்புல பூச்சுத்துன ஆடு ஞாபகந்தான் வந்தது மாடத்திக்கு.
சா¢, அப்ப செட்ல வச்சு அடுக்க சொல்லு சரசா. வீட்டுக்கு போகும்போது மறக்காம ஐநூறு
ரூபா அட்வான்சு வாங்கிக்குடுத்துரு. தீவாளிக்கு பெறகு ஆயிரந்தந்துருவோம் கண்டிசனா
வாராவாரம் இருபத்தஞ்சு ரூபா அட்வான்சுக்கு பிடிச்சிக்கிடுவோம். செட்டுல போயி நல்ல
இடத்துல பாத்து ஒக்கார வெச்சிரு.
ஸ்பீக்கா¢ல் பழை பாட்டொன்றை டி.எம்.எஸ்ஸ¤ம், சுசிலாவும் சந்தோசமாக
பாடிக்கொண்டிருந்தார்கள். "சே, அண்ணாச்சி இன்னும் சாப்பிட போகலையா? அவரு போகவும்
'ஐ லவ்யூ' பாட்டு போடணும்.
"ஆமா ஒனக்கு எப்ப பார்த்தாலும் லவ்யூ லவ்யூதான்"
"பெறகு... நீனாப்பல... 'நலம் நலமறிய ஆவல்னு அழுதாதான் ஒனக்கு புடிக்கும்"
"இந்தா என்ன வாயி ஓவரா போகுது, நாந்தமிழில லவ் பண்றேன். நீ இங்கிலிஷ்லே
காதலிக்கிறே' செட்டே சி¡¢ப்பில் ஆழ்ந்தது. எல்லோருடைய தலையிலேயும் நிறைய
கலர்கலராக பூ இருந்தது. லெட்சுமிக்கு வெறுப்பாக இருந்தது.