menu






 இலக்கியம >> பொன்மொழிகள்


பொன்மொழிகள்

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.
'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி.-
(ஸ்ரீ ஞானனானந்தகி¡¢ சுவாமிகள்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
(ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்-
(லாங்·பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது
(அ¡¢ஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதி¡¢யாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு
(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

                                        ....மேலும்>>