|
பழமொழி நானூறு
(மூலமும் தெளிவுரையும்)
|
அவை அறிந்து பேசுக
கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் தோற்பன
கொண்டு புகாஅர் அவை.
காம விருப்பம் காரணமாகக்கண்களைப் பெண் வண்டுகள் என எண்ணி ஆண் வண்டுகள் பின்
செல்கின்ற வாள் போன்ற விழிகளையுடையவனே அறிஞரானவர். தாம் சொல்லும் அறிவு
நூற்பொருளைக் கேட்பவரைத் தேடித் தம்மால் சொல்லப்படும் பொருளிடத்து அவர்களுக்கு
விருப்பம் இருப்பதை அறிந்து கூறுவார். அவையில் தோல்வி அடைவதற்கு உ¡¢யவற்றைக்
கொண்டு போகமாட்டார்.
கருத்து: அவையின் இயல்பு அறிந்து கூறல் வேண்டும்
குறிப்பு: இதில் உள்ள பழமொழி தோற்பனகொண்டு புகார் அவை.
வாதம் செய்பவர் மேற்கொள்ள வேண்டிய முறை
ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட சிறிதேனும் இன்னாது
இருவர் உடன்ஆடல் நாம்.
பொ¢யமலை நாட்டை உடையவனே ஒரே சமயத்தில் இரண்டுபேர் ஒரு நாயைக் கொண்டு வேட்டை ஆடுதல்
சிறிது காலமே என்றாலும் இனியது ஆகாது. மாறுபாடு கொண்ட இருவருள் ஒருவர் இப்பொருள்
இன்ன தன்மை கொண்டது என்று கூற அதே நேரத்தில் மற்றொருவரும் இன்ன தன்மை உடையது என்று
சொன்னால் அப்பொருளைக் கொண்டு மாறுபட்ட இருவரும் இப்படி ஒரே சமயத்தில் வாதிட்டால்,
தகுதியுடையதாய் ஆகுமா? ஆகாது.
கருத்து: வாதிடுபவர் ஒரே சமயத்தில் வாதிடாமல் ஒருவர் பின் ஒருவராய் வாதிடல்
வேண்டும்.
குறிப்பு: இதில் உள்ள பழமொழி சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்
தகுதியுடையதா?
விடை வழு
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் பற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தான்
கிழிந்தானை மூக்குப் பொதிவு
வினவுபவனும் விடையளிப்பவனும் என்னும் இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய சொல்லில்,
பின்னால் விடை கூறத் தக்கவன் வினாவை அறிந்து கொள்ளாது முன்னால் சொன்னால், விடைகூற
அறியாதவனாய் விடும். வினாவுக்கு முன் விடைகூறுதல், முழந்தான் கிழிந்து புண்பட்டவனை
அ·து அறியாது மூக்கை நூலின் இழையால் கட்டுக் கட்டுவதைப் போன்றதாகும்.
விளக்கம்: முழந்தாள் புண்பட்டவனை முழந்தாளில் கட்டுப் போட்டு மருத்துவம் செய்ய
வேண்டும். மூக்கில் நூல் இழையால் கட்டுதல் பேதமையாகும். இதனை, வினாவை அறிந்து
விடைகூறாது வினாவுக்கு முன் விடை சொல்லக் கூடாது என வற்புறுத்திக் கூறினார்.
இதில் அமைந்த பழமொழி: முழுந்தாள் கிழந்தானை மூக்குப் பொதிவு
கல்லாதவர் அவையில் கற்றார் சொல்லாடுதல்
கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண்
சொல்ஆடு வாரையும் அஞ்சற்பாற்று - எல்அருவி
பாய்வரை நாட பா¢சு அழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இவர்.
விளங்கும் நீர் அருவிகள் பாய்கின்ற மலை நாட்டை உடையவனே நல்ல பண்பு இல்லாதவருடன்
தேவரும் ஒரு சொல் கூற ஆற்றல் அற்றவர் ஆவர். எனவே, நூல்களைக் கல்லாமலும் கற்றவா¢டம்
நூல் பொருள்களைக் கேளாமலும் அறிஞர் கூடிய அவையில் ஒன்றைச் சொல்லப் புகும் செயல்
உடையவரையும், இவருடன் வாதாடித் தோற்றுப்போவோம் என நினைத்து அஞ்சச் செய்யும்
தகுதியுடையது.
கருத்து: கற்றவர் கல்லாதவருடன் வாதிடல் தவறு.
குறிப்பு: இதில் அமைந்த பழமொழி பா¢சு அழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இவர்
பா¢சு அழிந்தாருடன் பன்பு அழிந்தவருடன்.
உரையாசி¡¢யர் : புலவர். அ. மாணிக்கனார், எம்.ஏ.
தொடரும்...