menu






 இலக்கியம >> பழமொழி நானூறு

பழமொழி நானூறு

(மூலமும் தெளிவுரையும்)


தற்சிறப்புப்பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டுஇனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.

தெளிவுரை : மூன்றுறை மன்னர் அசோக மரத்தின் நிழலில் வீற்றிருக்கும் அருகப் பெருமானின் திருவடிகளை வணங்கித் தொன்று தொட்டு வழங்கி வரும் பழமொழிகள் நானூற்றையும் தழுவிக் கொண்டு, இனிய அறம் பொருள் இன்பம் வீடு பொருட்டுறைகள் அமைந்த வெண்பாக்களான இந்நூற்பாட்டுக்களின் சுவை தோன்ற இயற்றினர்.

அருகனை வணங்கி இப்பழமொழி நானூற்றை முன்றுறைரையனார் பாடினார். பிண்டி அசோக மரம். அருகப் பெருமான் அசோக மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார் என்பது மரபு இந்நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார் அரையன் - அரசன்.

 

கடவுள் வணக்கம்

அ¡¢தவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
வி¡¢கடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து
உ¡¢யதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பொ¢யதன் ஆவி பொ¢து.


தெளிவுரை : அகன்ற கடலால் சூழப்பட்ட பொ¢ய உலகில் காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் அ¡¢யதாகக் கெடுப்பதால், குற்றம் இல்லாது முழுவதும் உணர்ந்து இறைவனின் திருவடிகளையே உ¡¢மைப் பொருளைப் போல் எண்ணி அறிந்தவர்களின் உயர்வே, பொ¢ய உடம்பை உடைய ஆவியைப் போல் பொ¢யதாகும்.

இறைவனின் அடிகளை வணங்கியவா¢ன் உயர்வே மிகச் சிறந்தது என்பது கருத்து.
இதில் உள்ள பழமொழி: பொ¢யதன் ஆவி பொ¢து.

 

உரையாசி¡¢யர் : புலவர். அ. மாணிக்கனார், எம்.ஏ.

                                    தொடரும்...