menu






 இலக்கியம >> கதை >> நம்பிக்கை


நம்பிக்கை

- சு. சங்கர்

அன்வர் பீடி ·பாக்டரி... ஜாபர்கான்·பேட்டில் ஒதுக்குப்புறமாய் அமைந்திருக்கும் பீடித்தொழிற்சாலைகளில் இதுவும ஒன்று. உள்ளே அந்த விசாலமான அறையின் மூலையில் மூங்கில் கழியிலிருந்து தொங்கவிடப்பட்ட ஆளுயரத் தராசில் பீடி இலைகளை எடைப்போட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் புகையிலை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பீடிகளை உலர்த்தப்பயன்படும் மரப்பெட்டிகள் இறைந்து கிடந்தன.
பதினைந்து வயதுக்குட்பட்ட ஏராளமான சிறார்களும், சிறுமிகளும் தங்களது மடியில் சீராகத் தகரம் வைத்து வெட்டப்பட்டு ஈரத்துணியில் சுற்றப்பட்ட பீடி இலைகள், புகையிலை, நூலுருண்டை கத்தி¡¢க்கோல், புர்ணீமூடும் சிறுகத்தி அடங்கிய முறத்தை வைத்துக்கொண்டு பீடி சுற்றும் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். சிலர் சுற்றிய பீடிகளின் முனைப்பகுதியை மூடிக்கொண்டிருந்தார்கள். இதை புர்ணீமூடுதல் என்பார்கள்.

புர்ணீமூடிக்கொண்டிருந்த சிறுமியர்களில் சுமதியும் ஒருத்தி. அவளுக்கு பதினான்கு வயதிருக்கலாம். ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்வதால் இடுப்பிலும், முதுகுப்பகுதியிலும், காலிலும் வலித்தது. அசதி வேறு. சுமதி மடியிலிருந்து முறத்தை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு சோம்பல் முறித்தான். தூக்கம் வரும் போலிருந்தது. அப்படியே தூணில் சாய்ந்து கொண்டாள். அப்போது 'சு¡£ர்' என்று புளிய மிளாரால் தலையில் அடி விழுந்தது. 'அம்மா' என்று வலியால் அலறியவன் நிமிர்ந்து பார்த்தாள். ரஷீத் பாய்.

"என்னடி சுமதிக்கழுதை தூக்கம் வருதா?"

சுமதி மறுபடி முறத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு இயந்திரத்தனமாய் இயங்கி புர்ணீ மூட ஆரம்பித்தாள். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பீடிகளுக்கு புர்ணீ மூடியாக வேண்டும். இல்லையென்றால் மேஸ்தி¡¢ ரஷீத்பாயின் புளியமிளாருக்குப் பதில் சொல்லியாக வேண்டும் 'சு¡£ர்.. சுரீர்' என்று அடிவிழும். ரஷீத் யாருக்கும் இரக்கப்படமாட்டார்.
"இந்தா கடுதாசி... உங்கம்மா போட்டிருக்கா... நாளைக்கு உன்னை பார்க்க வர்றாளாம்" ஒரு இன்லெண்ட் லெட்டரை அவள் மீது வீசிவிட்டுப்போனா ரஷீத்.
அம்மா...!

"சுமதி விளக்கை அணைச்சிட்டு படு"

"நாளைக்கு பா£ட்சைம்மா"

சுமதி சிம்னி விளக்கு வெளிச்சத்தில் கணக்குப் பா£ட்சைக்கு படித்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் உட்கார்ந்த அவள் படிப்பதை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தான் தம்பி ராமு.
"நாளையிலேர்ந்து நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம்"
கேள்விக்குறியோடு அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள் சுமதி.

அம்மா மறுநாள் அன்வர்பாயிடம் சுமதியை அழைத்துவந்துவிட்டாள்.
"முதலாளி.. எம்மக பாலாமணிக்கு பதினாலு வயது ஆகுது... சீக்கிரமே பொ¢ய மனுஷி ஆய்டுவா... காலாகாலத்துல அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணவேண்டிய பொறுப்பெல்லாம் இருக்கு... அதனால அவளை கூட்டுக்கிட்டு போயிடுறேன்... இவ என் சின்ன மக சுமதி... அவளுக்குப்பதில் இவளை சேர்த்துங்குங்க.. இந்த ஏழையால உங்ககிட்ட வாங்கின பணத்தைக் கொடுத்திட்டு மகளை மீட்டுப்போக வசதியில்லை... அதுக்குத்தான் இந்த ஏற்பாடு".

அப்பாவும் பீடித்தொழிலாளிதான். ரேடியோவில் சிலோன் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே பீடிச்சுற்றுவார். சுற்றிய பீடிகளை ஒரு பொ¢ய கூடையில் அடுக்கி ஜாபர்க்கான்·பேட்டில் பீடி ·பாக்டா¢யில் கொடுத்து கூலிவாங்கி வருவார். ஒரு முறை கூலிப்பணம் வாங்கிக்கொண்டு வந்தபோதுதான்.. படியில்தொங்கியவாறே பயணம் செய்ததால் தவறி விழுந்து... பஸ்ஸின் பின டயா¢ல் சிக்கி...

அப்பாவின் மறைவிற்குப்பின் வாழ்க்கையே மாறிப்போனது அம்மா என்றுமில்லாமல் கூலிவேலைக்குப்போனாள். அக்கா பாலாமணியை ஐயாயிரம் ரூபாய்க்கு அப்பா வேலை செய்த முதலாளியிடமே ஈடுவைத்தாள். அப்பா உயிரோடு இருந்த நாட்களில் மறந்தும் கூட பீடி முறத்தைத் தொடக்கூடாது. திட்டுவார்.

அப்பா கைநாட்டு. அதனால் குழந்தைகளையாவது பத்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள் அப்பா எதிர்பாராதவிதமாய் மரணத்தைத் தழுவிக்கொண்டதால் பாலாமணி பீடித்தொழிலாளி ஆனாள். இப்போது சுமதி.

அப்பா வேலைசெய்யும் போதே சுமதி கூர்ந்து கவனித்து வந்ததால் பீடிச்சுற்றும் வேலையை சுலபமாகக் கற்றுக்கொண்டாள். பீடிசுற்றும் தொழிலில் உள்ள துன்பங்களை அனுபவபூர்வமாகத் தொ¢ந்து கொண்டாள். ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடம்பெல்லாம் வலிக்கும். சோர்வு உண்டாகும்.

அப்போது நினைத்துக்கொள்வாள் சுமதி. 'பாலாமணி அக்காவை மீட்டுப்போனதுபோல் அம்மா என்னையும் வந்து மீட்டுப்போக மாட்டாளா?'
அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறாள் சுமதி.

நாளைக்கு வருவதாகக் கடிதம் போட்டிருக்கிறாள் அம்மா.
'இந்த நரகத்திலிருந்து என்னை மீட்டுப்போவாளா?'
'நிச்சயம் மீட்டுக்கொண்டு போவாள்'
சுமதியின் கண்களில் அதீத நம்பிக்கை தொ¢ந்தது.

இங்கே சாப்பாடு சா¢யில்லை. காலையில் எழுந்ததும் கழுநீர் தண்ணீர்மாதி¡¢யான டீ. ஏழுமணிக்கே வேலை ஆரம்பம். எட்டுமணிக்கு வேகாத இட்லி. மதியம் பூச்சி விழுந்த கத்தி¡¢க்காய் சாம்பாரோடு ரேஷன் அ¡¢சிச்சோறு. ராத்தி¡¢க்கும் அதேதான்.

இங்கு சாப்பாடு சா¢யில்லை என்று யாருக்கும் மேஸ்தி¡¢யிடமோ, முதலாளியிடமோ கேள்விக்கேட்க ¨தா¢யம் கிடையாது.

இரவில் மிகக்குறுகிய இடத்தில் அனைவரும் படுத்து உறங்க வேண்டும். கோடைகாலத்தில் புழுங்கும். கொசுக்கடியால் தூக்கம்மவரமறுக்கும். காலையில் இரவுத் தூக்கத்தின் மிச்சம் கண்களில் தொ¢யும். ஆனாலும் வேலைநேரத்தில் தூங்கி வழிய முடியுமா? ரஷித் சும்மா விடுவாரா?
"சுமதி என்னடி யோசனை?"

பக்கத்தில் உட்கார்ந்து புர்ணீ மூடிக்கொண்டிருந்த கல்யாணி கேட்டாள்.
"நாளைக்கு எங்கம்மா வர்றாங்க"

"உணக்கு அம்மா இருக்காங்க. எனக்குத்தான் யாருமேயில்லை. அநாதையா பொறந்து தொலைச்சிட்டேன். இந்த நரகத்திலேர்ந்து யாராவது என்னை மீட்டுப்போக மாட்டாங்களான்னு தினமும் நான் வேண்டாத தெய்வமில்லை. யுனிசெ·ப்பராங்களாவது வரமாட்டாங்களா?"

யுனிசெ·ப் பி¡¢ட்டிஷகாரர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுமையான நிலைமாறு பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து அவர்களை மீட்டுப்போய் பள்ளியில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல் அக்குழந்தையைகளின் படிப்புக்குண்டான முழுச்செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் யுனிசெ·ப் ஆட்கள் வருவது தொ¢ந்ததுமே குழந்தைத் தொழிலாளர்கள் அனைவரையும் ஏதாவது ஓர் அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவர்கள் வந்ததும் 'எங்கள் பீடி ·பாக்டா¢யில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை' என சாதித்து, யுனிசெ·ப் ஆட்களை ஏமாற்றி அனுப்பிவிடுவார்கள்.

ஒரு முறை சுமதி பூட்டப்பட்ட அறையிலிருந்து சாவித்துவாரம் வழியாக யுனிசெ·ப் ஆட்களைப்பார்த்திருக்கிறாள். முதலாளியிடம் கோபமாய் ஆங்கிலத்தில் சண்டை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

மறுநாள் அம்மாவின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் சுமதி அவளால் வேலையில் கவனத்துடன் ஈடுபடமுடியவில்லை. மனசுக்குள் திரும்பத்திரும்ப பாலாமணி அக்காவும், தம்பி ராமுவும் வந்துபோனார்கள்.
"ஏய் கீதா உனக்கு விஷயம் தொ¢யுமா.. எங்கம்மா இன்னிக்கு வரப்போறாங்க"
"மஞ்சு என்னை எங்கம்மா வந்து மீட்டுப்போயிடுவாங்க.. இனி என்பாடு நிம்மதிதான்."
காலையில் இருந்தே குதூகலமாய் எல்லோ¡¢டமும் அம்மா வரப்போகும் விஷயத்தைச் சொல்லிச்சொல்லி பூ¡¢த்தான் சுமதி. 'ப்பா.. இன்னையோட எனக்கு விடுதலை ' நினைக்கும்போதே சுமதியின் மனதில் சந்தோஷப்பிரவாகம்.

"சுமதி உன்னை முதலாளி கூப்பிடுறார்டி"

ரஷீத்பாய் சொன்னதுதான் தாமதம். சுமதி மான்குட்டிபோல் துள்ளிக்கொண்டு முதலாளி அதை நோக்கி ஓடினாள். உள்ளே அம்மாவின் பேச்சுக்குரல் கேட்டது.

"எம்மக பாலாமணிக்கு வர்ற வெள்ளிக்கிழமை புட்டு சுத்தறேன்.. அதான் சுமதியைக் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கேன்.. அவளும் கொஞ்சநாள் போனா பொ¢ய மனுஷி ஆயிடுவா போலிருக்கு அவளையும் வீட்டுலேயே நிறுத்திக்கறேன் முதலாளி.. நான் ஏற்கனவே உங்ககிட்ட கேட்டுக்கிட்ட மாதி¡¢ அவளுக்குப்பதில்..."

'சுமதியை கூட்டிப் போகலாம்னு வந்திருக்கிறேன்'

அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு போகப்போகிறாள்.

சுமதிக்கு ஏக மகிழ்ச்சி, முதலாளியின் அறைக்குள் நுழைந்தபோது அம்மாவுடன் ராமுவும் வந்திருப்பதை பார்த்தாள்.

"சுமதி நல்லாயிருக்கியா என் செல்வம்" அம்மா சுமதியை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டாள்.

"அக்கா" என்றவாறு புன்முறுவலுடன் ராமு சுமதியின் அருகில் வந்தான். அவனை அன்புடன் அணைத்துக்கொண்டாள் சுமதி. ஐந்தாம் வகுப்பு படிக்கிறானாம். இப்போது லீவ் விட்டிருக்கிறார்களாம்.
முதலாளியிடம் விடைப்பெற்று அம்மா சுமதியை வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டாள். வீட்டில் அம்மா, அக்கா, தம்பியுடன் பொழுதைக் கழிப்பது சுமதிக்கு சந்தோஷத்தைத் தந்தது. பகல் பொழுதில் தூங்குவது சுகமாய் இருந்தது. சுமதி அடித்துப்போட்டாற்போல் படுத்துத் தூங்குவாள்.

அக்காவின் மஞ்சள் நீராட்டு விழா...

அப்பாவின் தெவிசம்..

எல்லோருமாய் சேர்ந்து பார்த்த டூ¡¢ங் கொட்டகை சினிமா...

சுமதி வீட்டிற்கு வந்து ஒருவாரம் மகிழ்ச்சியாய் ஓடிவிட்டது.

"நாளைக்கு பள்ளிக்கூடம் திறக்கறாங்களாம்கா" என்றான் ராமு.

புதுச்சட்டை டவுசர் சகிதமாய் முகத்தில் பவுடர் அடித்துக்கொண்டு பள்ளிக்குப் புறப்படத் தயாரானான் ராமு.

அம்மா. "ராமுவைக்கூட்டிக்கிட்டு ஜாபர்கான்·பேட் போயிட்டு வந்துர்றேன்.. ரெண்டு பேரும் பத்திரமாய் இருங்க" என்று பாலாமணி சுமதி இருவரையும் பார்த்துச்சொன்னாள்.

கிராமத்தில் ஐந்தாவது வரைதான். ஆறாவது படிப்பதற்கு ஜாபர்கான்·பேட்டுக்குதான் போகணும். "அம்மா ராமுவோட அஞ்சாங்கிளாஸ் சர்டிபிகேட்டை எடுத்துக்கலையா?" சுமதி தான் கேட்டாள்.

"அதெல்லாம் எதுக்கு? ராமுவை பீடி·பாக்டா¢க்கில்லே கூட்டிப்போறேன்."
சுமதி திகைத்தாள். "அம்மா நீ என்ன சொல்றே"

"உங்க அப்பா இறந்தபிறகு பாலாமணியை அன்வர்பாய் பீடி·பாக்டா¢யில அடகு வெச்சி ஐயாயிரம் வாங்கி வந்ததை திரும்ப கட்டி அவளை மீட்க முடியாம உன்னைக்கூட்டிப்போய் சேர்த்தேன் நீயும் பொ¢யவளா வளர்ந்துவிட்டே.. இன்னமும் பணம் கட்டமுடியவை அதுதான் உனக்குப்பதிலாக ராமுவை ஒரு நல்ல நாளாகப்பார்த்து ·பாக்டா¢யில சேர்க்கிறதா முதலாளிக்கிட்டே சொல்லிட்டு வந்துட்டேன்.

சுமதி அதிர்ந்தாள். பதறினாள். "ஐயோ.. ராமு பாவம்மா.. சின்னப்பையன். அவனால பீடி வேலையெல்லாம் செய்யமுடியாதும்மா ரொம்ப சிரமப்படுவான். தவிர அப்பா ஆசைப்பட்டது மாதி¡¢ என்னையும் அக்காவையும் படிக்க வைக்க முடியலை ராமுவையாவது படிக்கவைக்கலாம்மா"

"அவன் படிச்சு கலெக்டராகவா வரப்போறான்?"

"அப்படியெல்லாம் பேசாதேம்மா.. பத்தாங்கிளாஸ் வரைக்குமாவது அவனை நாம படிக்கவைக்கணும் அதுதானே அப்பாவின் ஆசையும்?"

"அப்பா முதலாளிகிட்டே கடனா வாங்கி வந்த பணத்தை திரும்பகட்டணுமே.. அதுக்கென்ன பண்றது.?"

"அதுக்காக தம்பியை கூட்டிப்போய் அந்த நரகத்தில் தள்ளணுமா? வேணும்னா நானே மறுபடியும் போயிர்றேன்."

அம்மா திடுக்கிட்டாள்.

"சுமதி நீ சீக்கிரம் பொ¢ய மனுஷி ஆயிடுவேம்மா... வீட்ல இருக்கிறதுதான் பெண்பிள்ளைக்கு பாதுகாப்பு... அந்தக் காரணத்துக்காகத்தான் அக்காவையும் பதினாலு வயசானதும் மீட்டுவந்தேன்"

"பரவாயில்லை நான் எங்கே இருந்தாலும் ஒழுங்கா இருப்பேன்மா.. என்னை பாதுகாத்துக்க எனக்குத் தொ¢யும் இப்போதைக்கு தம்பி படிப்புதான் முக்கியம்."

ராமுவை சுமதி ஆரத் தழுவிக்கொண்டு முத்தமிட்டாள். அம்மா நெகிழ்ந்துபோனாள்.

சுமதி மறுபடி அன்வர்பீடி·பாக்டா¢யில் சேர்ந்துவிட்டாள்.

தினசா¢ இரண்டாயிரம் பீடிகளுக்கு புர்ணீ மூடும் அதே வேலை.
அதே கழுநீர் தண்ணீர் டீ வேகாத இட்லி. பூச்சி விழுந்த கத்தா¢க்காய் சாம்பார் சோறு. புளியமிளராமல் அடித்து வேலைவாங்கும் மேஸ்தி¡¢ ரஷீத்பாய்.. ஆனாலும் சுமதியின் கண்களில் அதீத நம்பிக்கை தொ¢ந்தது.

"என்றாவது ஒருநாள் யாராவது வந்து என்னை நிச்சயம் மீட்டுக்கொண்டு போகத்தான் போகிறார்கள். அம்மாவே.. இல்லை யுனிசெ·ப்காரர்களோ.."