menu






   இலக்கியம>> திருக்குறள் போற்றும் அஹிம்சை

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதுஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (குறள் எண்:251)

தன் உடலை வளர்க்க என்று பிற உயிกขன் உடலை உணவாக உண்பவன் எப்படி அருள் உடையவனாக (தயையுடையவனாக) ஆக முடியும். (ஊன் உண்ணுவார் உள்ளத்தில் கருணை பிறக்காது)

 

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றின்
உடல்சுவை உண்டார் மனம்

படைக்கருவியை கையில் ஏந்தியவன் மனம் கொலையில் நிற்பது போல பிற உயிกขன் உடல் சுவையை உண்ட மனமும் கொலையையே நோக்கும்; உயிர் நன்மையை நோக்காது.


 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

பிற உயிரைக் கொல்லுதலையும் புலால் உண்ணுதலையும் விலக்கியவனை உயிர்கள் எல்லாம் அருள் உடையவன் என அவனை கை குவித்து தொழும் - பணிந்து வணங்கும்.

 
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். (குறள் எண்:321)

அறச்செயல் என்பது பிற உயிர்களைக் கொல்லாது இருத்தலாகும்; அறம் விட்டு பிற உயிர்களை கொல்லுவதால் பெரும்பெரும் துன்பங்களுக்கு ஏதுவான எல்லா வினைகளும் (கர்மங்களும்) வரும்.

 
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் எண்:327)


தன் இனிய உயிரை விடும் நிலை தோன்றினும் அதற்காக பிறிதொரு இனிதான உயிரை நீக்குதலை செய்யாது இருப்பானாக! (தன் உயிரை விட்டும் பிற உயிரை காக்க.)
 

 

top