menu






  • அக்கணம்

    - த.வே.விக்கிரமாதித்தன்


மழைநீர் பூமியை தொடும்போதெல்லாம்
மனம் உணரும்
உன் பிกขதலால்
நான் அழுவதாய்

விழி நீர் உருண்டோடி
ஒன்று சேர்ந்து
நீ நடந்துவந்த பாதையெல்லாம்
நனைக்கும்போது
உனக்கும் புரையேறும்
நீ எண்ணிக்கொள்வாய்
உன் உறவுகளில்
எவரோ நினைப்பதாய்

அங்கணம்
உனக்கு எப்படி புกขயவைப்பேன்
நான்தான்
உன்னை நினைக்கிறேன் என
சந்தையில் விலைபோன மாடு
வீதியில் திกขயும்
இருசக்கர வாகனத்தில்

பண்டிகை தினமொன்றில்
அங்குமிங்கும் அடித்துபுரட்டி
வாங்கிய மாட்டிற்கு பூட்டுவார்கள் காப்பு

தனியே அமர்ந்து
அசைபோட்டு பார்க்கும்
நல்ல மேச்சலென
திடுமென ஒருநாள்
மேய்ப்பவளை சீறிமுட்டும்
மேனியெங்கும் காயத்தோடு
அப்பா வீட்டிற்கு ஓட்டிவருவாள் மாட்டை

பழைய மூக்கணாங்கயிறு
புதுப்பிக்கப்படம்
கூடவே அப்பாவன் கடனும்

அடுத்தப்பொன்னுக்கு
மாப்பிளை புடிக்க
சந்தைக்கு போகலையா
என அம்மா கேட்டாள்.

படிச்ச அக்கா மதிப்பா கேட்டது
குத்துன காயம் ஆறல.

விலைக்குவர மாடுன்னா வேணாம்
பாசத்துக்கு படியிற
காளையை யாரென்ற
படிக்காத மகளின்
பக்குவம் பார்த்து
சந்தைக்கு போகலையென
அப்பா சொன்னார்.