"கத்தாழ முள்ளு குத்த
கத்தாம இருந்துபுட்டேன்.
கண்ணா நீ தூங்கயிலே
கனவு கலையுமின்னு"
"தொட்டுக்கணா குத்தமின்னு
ஊருசனம் சொல்லையிலே
தொடாம என் மனசில்
பச்சக்குத்திப் போனவனே"
"ஆலமர அடிவோ¢ல்
ஆச மச்சான் பேரெழுதி
அழிக்க நினைச்சதில்லை
ஆவணியில் பூத்தக்கிளி"
"கூட போட்ட தாவணிகள்
தாலாட்டு பாடயிலே
குத்திக்குத்தி காட்டுறாக
தோளில் முகத்த இடிக்கிறாக"
"தங்கத்துல தாலிவேணா-மச்சான்
சா¢கப்பட்ட சேல வேணா
ஜிமிக்கி காது தோடு வேணா
சீர்வா¢சை ஏதும்வேணா"
"மஞ்சள் தாலி வேணுமச்சான்
மல்லிகப்பூ போதும்மச்சான்
மறக்காம வருவேளா
தைமாசம் பா¢சம்போட"
பாக்கு வெத்தல மாத்திட்டமே
பக்கத்துலவாயேன்
இளநி போல எதமா
ஒரு முத்திமிப்பதாயேன்.
தாலி கட்டிக்க முன்னே
கை பட்டுகிட்டா கூட
குத்தமுங்க மாமா
ஆத்தா அப்பன் தூங்குறாக
போயிடுங்க மாமா.
அக்கா மாமா தானடி
பாக்கட்டும் புள்ள
நானறியாத ஆளாடி
மொறைக்கிற மெல்ல
மண்ணுசோறு நான் சமைச்சி
ஊட்டினேன் அப்போ
மண்ண மதிக்கும் பொன்னுமாமா
தொ¢ஞ்சிக்க இப்ப...
காரமாக பேசி நீயும்
கடுதபோல வெடிக்கிற
வேலிகாத்தான் முள்ளு குத்த
அத்தானுதான்னே கத்துள
ஆச மச்சான் பேர சொன்னா
குத்துன முள்ளு பூவரங்க.
அதுக்காக கேட்டதிப்ப
தந்துடமாட்டேன் போயிடுங்க.
அக்கா பெத்த
பத்திரமாத்து தங்கம் நீதாண்டி
சும்மா உன்ன சீண்டி பாத்தேன்
பூவே வரேண்டி.