|
தம்பியின் முதுகினை பிடித்தபடி
கிணற்றில் நீச்சல் பழகியதும்
ஏ¡¢யில் மீன்பிடிக்க சென்றபோது
கால் சட்டையில் மாட்டிக்கொண்ட
கெண்டை மீனும் |
 |
பட்டாம் பூச்சி, ஓணான்,
தும்பியை பிடிக்க
துரத்திச் சென்ற காலங்களும்
பள்ளி நாட்களில்
தோழிகளுக்குப் பிடிக்குமென
புளியாம்பழம், மாங்காய் அடித்து
பகிர்ந்துதின்றதுமான
கடந்த காலங்கள்
தார் சாலையில்
மடிந்துப்போன வண்ணத்துப்பூச்சியை
பார்த்து கடந்தபடியே செல்கிறது
நகர வாழ்க்கை
தொடரும்»