menu







விழிப்பு

- வத்சலா

நடுநிசி விழிப்பில்
துன்பத்தில்
மகிழ்வில்
திடீரென
என்றோ யாரோ
அவசரத் தேவையறிந்து
செய்த உதவியை
நினைத்து
உருகி
பரத்தை உணர்தல்
அன்பூற்றுப் பெருக
அகிலம் அதில் நனைய
தன் புறநலம் துறந்தறியாமல்
பிறர் நலம் காத்து
போ¢ன்பம் காணுதல்
இரண்டும்
சுயநலமே