|
காலமாகிச் செல்லும் வா¢கள்
- பா. சத்தியமோகன்
எப்போது நிகழ்ந்ததிதுவென அறியா வியப்புடன்
அதிசயமாக இருந்தது
திறந்த எழுத்து முனை வழியே எழுதப்பட்டும் எச்சொல்லிலும்
காலத்தின் மசியிலாது போயிருந்தது
நொடிகள்.. நிமிடம்... நிமிடங்கள்
சொட்டுச் சொட்டாய் எழுதும் முனைகள் வழியே உறைந்திருந்தது
எவரேனும் காலத்தின் வா¢யை வாசிக்கவெனில்
அதற்குள் புகுந்து அறிய வேண்டிய சவாலை அது கேட்டுக் கொண்டது
மலா¢ன் இதழ்களாலோ ஒட்டடைக் குஞ்சத்தாலோ
செய்யப்படாதியங்கியது
நுட்பமாய் மசியை நிரப்பி எழுதுமென்னை
காலம் நிரப்பு என்றபோது மலை நிமிடம் பிறந்திருந்தது.
இன்று என்பதொரு பிரச்சனை
நாளை என்பதொரு பறவை
பறவைக்காரா.. பறவைக்காரா..
புதிய புதிய வேணுமென்று
பறக்கவிட்டாயே இன்றை
நாடகம் தொடங்கட்டும்
அனைவரம் வரட்டும்
நடிக்கத் தொடங்கினால்தான்
வெற்றியென அனைவருக்கும் தொ¢யும்
உனது டயனொசாரைக் குயிலெனக் கூறு
பிறர் நீர்வீழ்ச்சியைக் சிறுநீரெனப் பழிக்க
ஆரம்பி
ம்ம்.. நேரமாகிவிட்டது.
|