|
இன்னும் இருக்கிறார்கள்
- ராஜு முருகன் கவிதை
இன்னும் இப்பெருநகா¢ல்
மரநிழல் பரவிய சாலைகள்
இருக்கின்றன
அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
கனிந்து தாழ்ந்த பார்வையுடைய
கனகவல்லிகள் வசிக்கிறார்கள்
பத்து ரூபாய்க்கு மூன்று
பேனா விற்பவர்
அபூர்வமாய்ப் பார்த்த ஓட்டு வீட்டில்
தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார்.
கோயில் வாசல் சிறுமி
மஞ்சள் வெயில் உதிர
மலர்தொடுக்கும் நளினத்தைச்
சிலர் நின்று பார்த்துச்
செல்கின்றனர்.
காலமற்ற காலத்தில் மேல்
குடித்துவிட்டுக் கிடப்பவனின்
உளறல் கேட்டு
ஒரு கை
சோடா வாங்கி வருகிறது
இளங்காலையில்
பள்ளிக்கூட மைதானத்தில்
பாட்டி ஒருத்தி
தட்டுக் கூடையில் நாவற்பழம்
சுமந்து போகிறாள்
மூன்றாவது முறையாகப்
பாலியல் தொழிலாளியிடம்
சென்று படுக்க மனமின்றித் திரும்பிக்
கொண்டிருக்கிறான் ஒருவன்.
|