menu






நட்பு

உலகின் இறுதி நாட்கள் முடிந்தாலும்
புதிய நாழிகைகளை உருவாக்கி உயிர்தரும்
காலத்தை வென்ற கடிகாரம் - நட்பு

நடுக்கடலில் புதிய உலகை காட்டும்
கண்ணாடி மாளிகை நட்பு இயற்கையாய்
பெரும் அலை அடித்தாலும் அந்த இயற்கையை
வெல்லும் சக்தி படைத்தது - நட்பு

தாய் தந்தை உறவு இரத்தத்தால் கட்டுப்பட்டது
மனைவி என்னும் உறவு பந்தத்தால் கட்டுப்பட்டது
நட்பு மட்டும் தனக்குத் தானே கட்டுப்பட்டது.

- நட்புடன் ரகு

 

இயற்கை

நீ காலையில் பூந்தோட்டத்தில் உலவியபோது,
அங்கு பூத்த புதுமலர்கள் கூட உன்
முகத்தைக் கண்டு வெட்கி தலைகுனிந்தன.

நீ குளித்த தண்ணீர் கூட தன்
நிறத்தை தங்க நிறமாக
மாற்றிக்கொண்டது.

நீ மாலையில் கடற்கரையில்
உலவியபோது
உன் பேச்சை கேட்க ஓயாத அலைகள் கூட
சற்று நேரம் ஓய்ந்து விட்டது.

இரவில் உன் மேனியின் ஜொலிப்பைக் கண்டு
முழுநிலவு கூட மேகத்தினுள் ஒளிந்து கொண்டது.

இயற்கையே உன்னிடம் சரணடைந்து விட்டது.
பிறகு நான் மட்டும் எம்மாத்திரம்.

உனக்காக,
ரகு.

 

பணம்

கூட்டு குடும்பத்தின் பிறப்பிடமான தமிழகத்தில்
மருமகள் மட்டும் தற்கொலை செய்து கொண்டாள்
ஏன் என்று கேட்டதற்கு பணம் என்றார்கள்.

நடு ரோட்டில் கொலை செய்தவனுக்கு
நீதிபதி தீர விசாกขத்து விடுதலை அளித்தார்
ஏன் என்று கேட்டதற்கு பணம் என்றார்கள்.

ஊரே பத்தினி என போற்றப்படுபவள்
பணக்காரனின் படுக்கையறைக்கு சென்று வந்தாள்
ஏன் என்று கேட்டதற்கு பணம் என்றார்கள்.

இறைவா நீ மட்டும் பூமிக்கு வந்துவிடாதே வந்தால்
இந்த பாவிகளோடு சேர்ந்து நீயும் மனிதனாகிவிடுவாய்
ஏன் என்று கேட்டால் பணம் என்று கூறிவிடுவாய்.

இப்படிக்கு,
ரகு.