புதுமைப்பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்வமும் உற்சாக முமாக எத்தனையோ கதைத்து
எத்தனையோ நாட்கள் போக்கியாகி
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி
புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது.
ரெண்டுகப் காபிக்கு காசு இருக்கிறதா
என்று பார்த்துக் கொண்டு காபியும்
சாப்பிட்டு விட்டு மீதி கையில் காசிருந்தால்
வீட்டுக்குள் ஏதாவது வாங்கி கொண்டு
பேசிக் கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது
இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின்
சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கி விட்டு
காலையில் காபி சாப்பிட்டு விட்டுத்
திரும்புவதுண்டு!
இப்போது இந்த
வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை
கேட்டிருந்த அந்த சாக்ஷ¢ பூதமான சுவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திரும்பி
சொல்லுமா_? சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை யெழுதலாம், சுவர்கள் பேசாது.
நன்றி கெட்ட சுவர்கள் - அவை வீட்டுக்
காரன் கட்சி தான்-எழுத்தின் அருமை
தொ¢யாதவை. உலகமே எழுத்துக்கு-நல்ல
எழுத்துக்கு எதி¡¢யாய் இருக்கும் பொழுது-
வேறு சொல்ல என்ன இருக்கிறது_?
எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி
அதற்கு நானே உதாரணம் என்று
புதுமைப் பித்தன் சொல்லிப் போனாரே
என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.
கூ:பி
பிறந்தவுடன் அவனுக்கு ஷேக்ஸ்பியர் என்று
பெயர் வைத்து வில் என்று கூப்பிட்டேன்
டாலி என்கிற அவள்தாய் மூத்தவனான
அவனைக் கவனியாமல் நோஞ்சானாக இருந்த
அவனுடைய நாலாவது சகோதரனைத்தான்
கவனித்து. தாயின் கவனத்தைப் பெற
முயன்ற வில் ஒவ்வொரு தரமும் கையடி
பட்டு நகர்த்தப்பட்டு அசடுவழிந்ததைக்
கண்டு அவனை அசடு என்கிற அர்த்தத்தில்
கூ : பி என்ற பெயர்வைத்துக் கூப்பிட ஆரம்பித்தேன்
அசடுதான் இல்லாவிட்டால் என் இலக்கியக் கனவுகளையும்
என் இலக்கியப் பேராசைகளையும் நடைமுறைக்
கையாலாகாத்தனங்களையும் பு¡¢ந்த மாதி¡¢
செவிசாய்த்துக் கேட்டுக் கொண்டு என் காலடியிலே
கிடப்பானா_? என் இலக்கியப் பிரச்னைகளுக்கு
அவனிடம் தீர்வு கிடைக்குமா என்ற விவா¢த்து பதில்
கேட்பேன், பிரச்னை தீர்வு எனக்குத்
தொ¢ந்த அளவுதான் அவனுக்கும் தொ¢ந்தது.
அவன் நாய். நான் அவன் இலக்கிய எஜமான்
என்னையே நம்பிக்கொண்டு நான் இலக்கியப்
புகழ் ஏணியை எட்டிவிடுவேனென்று எதிர்
பார்த்துக் கொண்டு என்னோடு அவனும் சைவனாக நான்
சாப்பிட்ட சாப்பாட்டையே சாப்பிட்டுக்கொண்டு
பதிமூன்று ஆண்டுகள் இருந்துவிட்டான்
உயிர் போகும்போது என் மடியில் படுத்து
என்னைப்பார்த்து என் கையை அவன்மேல்
வைக்கச் சொல்லிய படியே உயிர்விட்டான்
வீட்டில் ஒருவரும் இல்லாதபோது அவனைக்
கவனிக்கச் சொல்லி மிருகங்கள் நண்பன்
கி¡¢ஸ்டல் ரோஜர்ஸ¤டன் கொண்டுவிட்டுப் போனபோது
பதினைந்து நாட்களும் சாப்பிடவே
மறுத்துவிட்டான். பாப்பா போய் அவனை
அழைத்து வந்தபின்தான் உபவாசத்தை நிறுத்தினான்.
இதுபோன்ற நாயை நான் என் பரந்த
நாயனுபவத்தில் பார்த்ததில்லை என்று
கி¡¢ஸ்டல் ரோஜர்ஸ் சொன்னபோது எனக்குப் பெருமை
யாவே இருந்தது. அடிக்கடி இப்போது
அவன் போனபின் வழக்கமாக அவன் படுத்துக்
கிடக்கும் இடத்தைப் பார்க்கிறேன். அவன் அங்குஇல்லை.
என்பதை என் கண்கள் நம்ப மறுக்கின்றன.
ஒவ்வொரு தடவையும் அவன் இல்லாதது
என்மனதில் ஒரு ஷாக் ஆகவே உறுத்துகிறது.
இப்போது வேறொரு கூ:பியும் வந்து விட்டான்
ஆனால், இவன் என்னை லட்சியம் செய்வதில்லை
ராஜிதான் இவனுக்கு எல்லாமும். ஏனென்று
தொ¢யவில்லை இரண்டாவது கூ:பிக்கு முதல்
கூ:பியைத் தொ¢யாது என்றாலும் அவனிடம்
பொறாமையோ என்னவோ என்பக்கம் வர
மறுக்கிறான் அவனையே கட்டிக் கொண்டு
அழு என்று சொல்லாமல் சொல்கிறான்
ஒரு இலக்கிய ஆசி¡¢யனின் நாமென்று
கூ:பியின்-என்முதல் கூ:பியின் சுய
சா¢தத்தை எழுதுவதில் முனைந்து விட்டேன்.
மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது
அமரத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா.