menu






 

ஹைக்கூ...

வெட்டிய பகுதியின்
செந்நீர் கூட பயன்பட்டது
மரப்பிசின்



சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்
எதிரே பசியோடு
ஏழைச் சிறுவன்!



காங்ĄŁட்
காடுகள்
நகரம்!



காவல் நிலையம்
போகும்முன் பத்தினி
திரும்பிய பின் சித்தினி



வியர்வை விதைத்து
வித்துக்களை அறுவடைசெய்வான்
விவசாயி!



எல்லோரும் வாழ
ஏற்றமிகு திட்டம்
அடிக்கல்லில்!



எம்.எல்.ஏ.வின்
வனவாசம் முடிந்தது
திரும்பவும் தேர்தல்



கா˘யை
காசாக்கினான்
சாலையோர ஓவியன்!



தண்ணீர் தெளித்ததும்
வெட்டப்பட்டது...
தலையாட்டிய ஆடு



பிழைக்கத்தொ˘யாமல்
ஓட்டுப்போட்டனர்
பிழைக்கத்தொ˘ந்தவனுக்கு

- ந. ஏகம்பவாணன்