|
காதல்

சொர்க்கத்திற்கும்
நரகத்திற்குமான
பொதுவழிப்பாதை

அவள் வரும் வரை நிமிடங்கள்
என்னை கொன்றன...
வந்தபின்
நாங்கள்
நிமிடங்களை கொன்றோம்!

தூண்டில் போடும்
அதிசய மீன்கள்
அவள் விழிகள்

மாதா, பிதா
குரு, காதலி
இதற்காகவா
இதயத்தில் நான்கு அறை?

கைதியாயிருக்க ஆசை
சிறை
அவள் இதயமெனில்!

ஒருமுறைதான்
நடந்தாய்
ஒற்றையடிப்பாதையில்
என் இதயத்திலோ
தேசிய நெடுஞ்சாலை

அர்த்தமுள்ளதா வாழ்க்கை?
ஆமென்றது
அவள் வருகை!

வாகனங்களின் இரைச்சல்
வான ஊர்த்யின் காற்றுக்கிழிப்பு
உரக்க கத்தும் ஒலிநாடா
எங்கோ கசியும் புல்லாங்குழல்
படபடக்கும் தட்டச்சு
கடகடக்கும் புகைவண்டி
ஊளையிடும் வட்டுச்சங்கு
தாளமாகும் கொத்துப்பரோட்டோ
இத்தனையும் மீறி
இன்னும் ஒலிக்கிறது
என்றோ என் மனதில் நடந்தவளின்
கால் கொலுசோசை!
- ந. ஏகம்பவாணன்
|