menu






 

சிந்தனை செய் மனமே
- பெ. ரவீந்திரன்.

பாரதி கண்ட தமிழ்ப்பாதை
இன்று பள்ளமாகிப் போனதே
பொ¢யார் வகுத்த கொள்கைப்பாதை
இன்று கொள்ளைப்பாதை ஆனதே
கர்மவீரர் தந்த கல்விப்பாதை
இன்று சந்தையாகிப் போனதே
அண்ணா சென்ற நேர்மைப் பாதை
இன்று காணல்நீராய்த் தோனுதே
கண்ணதாசன் படைத்த காவியப்பாதை
இன்றும் காவியமாகவே உள்ளதே
இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் சா¢த்திரங்கள்
இவர்கள்போல் இப்போது யாரும் இல்லாததுதான்
என் தாய்த்திருநாட்டின் தா¢த்திரங்கள்
எவனும் தலைவனாய்ப் பிறப்பதில்லை
நேர்மையாய் ஒருவன் தலைவன் ஆனால்
தமிழ்நாடு அவனை மறப்பதில்லை
அனைவரும் சென்ற பாதையிலே செல்ல
நாம் என்ன செம்மறி ஆட்டுக் கூட்டமா?
சிந்தனை செய் மனமே!!!

உங்கள் மாற்றத்தை விரும்பும்,
பெ. ரவீந்திரன்.